தன் கௌரவத்திற்காக யாரையும் பலிகொடுக்கத் தயங்காத சினிமா இயக்குநர்! - ஆட்டகாலு
maryland |
ஆட்டகாலூ
இயக்கம்: பச்சூரி முரளி
இசை: சாய் கார்த்திக்
சித்தார்த் புகழ்பெற்ற சினிமா
இயக்குநர். சாலை விபத்தில் அப்பா, அம்மா இருவரும் பலியாகிவிட அனாதையாகிறாள் சிறுமி
ஒருத்தி. அவளை அவளது சொந்தங்களே விலக்கி வைக்க, சித்தார்த் அச்சிறுமியை தத்தெடுத்துக்கொள்கிறார்.
அட எப்படிப்பட்ட மனிதர் என நாம் வியக்கும்போது, அவரது வீட்டில் காதல் மனைவி அஞ்சலி
கத்தியால் முதுகில் குத்தப்பட்டு பிணமாக கிடக்கிறார். ரத்தம் வடிந்து கதவுக்கு வெளியே
குளமாக தேங்கிக் கிடக்கிறது. அவளது அம்மா இதைப்பார்த்து ஐயோ என வாயில் கைவைத்து அலற,
போலீஸ் விசாரணை செய்து எளிமையாக சித்தார்த்தான் கொலையாளி என கூண்டில் நிறுத்துகிறது.
ஆனால் சித்தார்த் நான் கொலை செய்யவில்லை. நியாயத்தின் பக்கம் நிற்பதாக சொல்லும் அரசு
வழக்குரைஞரே இதுபற்றி முடிவு சொல்லட்டும் என்கிறார். இதனால் குழப்பத்திற்கு உள்ளாகும்
அரசு வழக்குரைஞர் வீரேந்திரா, இதுபற்றி விசாரணையை முடுக்கிறார். அவருக்கு டிசிபியும்
உதவுகிறார். அதன் முடிவில் கொலைக்கு அஞ்சலியின் காதலன் முன்னா காரணம் என முடிவாக, அவனுக்கு
மரணதண்டனை வழங்கப்படுகிறது. சித்தார்த் விடுதலையாகி வெளியே வருகிறார். பின்னர் அரசு
வழக்குரைஞருக்கு சித்தார்த் கார் ஒன்றை பரிசாக வழங்குகிறார். எனக்கு கார் எல்லாம் வேண்டாம்.
நியாயம் உங்கள் இருந்தது. அதைக் காப்பாற்றினேன் அதுபோதும் எனக்கு என்கிறார் வீரேந்திரா.
ஆனால் அவரது வீட்டுக்கு வரும் முன்னாவின் அம்மா பேசும் பேச்சால், சித்தார்த் மீது முதல்முறையாக
சந்தேகம் வருகிறது வழக்குரைஞருக்கு. அவன் தன்னை ஏமாற்றி வழக்கிலிருந்து விடுதலையாகிவிட்டானோ என்ற சந்தேகப்படுகிறார். அதைப்பற்றி
விசாரிக்கத் தொடங்குகிறார். உண்மையில் சித்தார்த் யார், அவன் தன் மனைவியைக் கொல்ல காரணம்
என்ன? அவன் தத்தெடுத்த சிறுமியின் அப்பாவுக்கு என்ன நடந்தது என பல ட்விஸ்டுகள் படத்தில்
உள்ளன.
ஆஹா
அரசு வழக்குரைஞரை தனக்கு
ஆதரவாக வாதாட வைக்கும் நடிப்பு, காதல் மனைவியை முதுகில் குத்திவிட்டு பேசும் வஞ்சனையான
வசனங்கள், தன்னை அறைந்தவனை பொறுக்கமுடியாமல் கார் மோதி கொல்வது என நர ரோகித் இந்த படத்தில்
வேறு முகம் காட்டுகிறார். இந்தப் படத்திற்கு ஆடல், பாடல் என்று ஒன்றும் தேவையில்லை.
வஞ்சகத்தை மனதில் ஒளித்து வைத்து நடிப்பதில் உச்சம் தொட்டிருக்கிறார். இவருக்கு இணையாக
ஜெகபதி பாபு, நேர்மையாக வாழவேண்டும் என நினைத்து சித்தார்த்தின் வஞ்சக வலையில் சிக்குகிறார்.
இவர் தன்னை சித்தார்த் ஏமாற்றிவிட்டான் என உணர்ந்து அவனை பழிவாங்க நினைப்பதும், உண்மையை
வெளியே கொண்டு வர நினைப்பதுமாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஐயையோ
பிரம்மானந்தத்தின் காமெடி
படத்தின் போக்கிற்கு இடைஞ்சலும் இல்லை இனிமையாகவும் இல்லை. தொழில்சார்ந்த உறவுகளில்
எப்படி ஓர் ஆணை பெண் நம்பி தன்னை ஒப்படைக்கிறாள் என்பது புரியவில்லை. இரண்டு, மூன்று
சந்திப்புகளில் காதல் வருகிறது என்றால் அஞ்சலிக்கு சித்தார்த் மீது விருப்பமா, அவர்
பிரபலத்தின் மீது விருப்பமா என்ற சந்தேகமாக இருக்கிறது. ஒருவனை நடுரோட்டில் அடித்துக்கொன்று
எந்த சங்கடங்களும் இல்லாமல் படுத்துறங்கி வேலை பார்த்து வருபவன், சென்டிமெண்டுக்கு
அடிமையாகி உண்மையைச் சொல்லுவானா என்ன?
திரில்லான படம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக