மனதில் உணரும் விஷயங்கள் உண்மையான படைப்பாக மாறும்! - ஓவியர், திரைப்பட இயக்குநர் முஸாஃபர் அலி








Gaman (1978) - IMDb

முசாஃபர் அலி


ஓவியர், திரைப்பட இயக்குநர்


Add caption

தி அதர் சைட் என்ற உங்களது ஓவியக் கண்காட்சி நடைபெற்று பதினைந்து ஆண்டுகளாகின்றன. அடுத்த ஓவியக்காட்சி என்பதை நடத்த ஏன் இவ்வளவு கால இடைவெளி?


ஓவியக்கலை என்பது யாரேனும் ஒருவரால் ஊக்கம் பெற்று உருவாக்கப்படுவது. இதில் ஆண்டுக்கு ஒன்று என்ற கணக்கும் கட்டுப்பாடும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை கலை தன்னை தானாகவே வடிவமைத்துக்கொள்ளும் என நம்புகிறேன். ஓவியங்கள் வரைவது என்பதை வெவ்வேறு வழிகளில் முயன்றுகொண்டேதான் இருக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் வரும் சிலர் உங்களுக்கு ஊக்கம் தருவார்கள், ஏதோ ஒரு வகையில் சுவாரசிய திருப்பங்களை உருவாக்குகிறவர்களாக இருப்பார்கள் அல்லவா? அதுபோலத்தான்.


ஓவியம் என்பதை கதை சொல்லுவது போல பார்க்கிறீர்களா? நீங்கள் ஓவியர் என்பதோடு திரைப்பட இயக்குநரும் கூட. திரைப்பட வடிவத்தை ஓவியத்திலிருந்து வேறுபட்டதாக பார்க்கிறீர்களா?


கலைகளின் வடிவம் பெயர்கள் வேறுபட்டாலும் அதன் தன்மை ஒன்றுதான். இவை ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறும். நீங்கள் கண்களால் பார்ப்பது, காதால் கேட்பது அனைத்தும் அர்த்தமின்மை என்பதிலிருந்து அரத்தம் நோக்கித்தான் செல்கிறது.


பல்வேறு திறன்களைக் கொண்ட ஆளுமை நீங்கள். வீட்டில் இருக்கும்போது உங்களை எப்படி உணர்கிறீர்கள்.


கைகளால் உருவாக்கப்படும் கலைப்படைப்பை நான் முக்கியமாக கருதுகிறேன். இதனால், உருது மொழியில் எழுதும் கவிதையை நான் ஆன்மாவின் இசையாக கருதுகிறேன். இதைவிட ஓவியத்தை ஆன்மாவிற்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக நினைக்கிறேன். நாம் உணர்வுநிலையை வெளிப்படுத்தும் மற்றொரு வடிவம் என்று புரிந்துகொள்கிறேன்.


இன்று இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். இந்த அவலத்தை நீங்கள் 1978ஆம் ஆண்டு வெளியான காமன் என்ற படத்தில் வெளிப்படுத்தியிருந்தீர்கள். இது எப்படி சாத்தியமானது?


நாம் மனதில் ஆழமாக உணரும் உணர்வுகள் எப்போதும் நடைமுறைக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். அந்த படத்தில் கிராமங்களிலிருந்து மக்கள் முகமே இல்லாத அடையாளங்கள் இல்லாத நகரங்களுக்கு ஏன் செல்கிறார்கள் என்று வெளிப்படுத்த முயன்றிருப்பேன்.


நன்றி: இந்தியா டுடே 25.5.2020

ஆங்கிலத்தில்: ஷேக் அயாஸ்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்