அளவில்லாத கடன்களை வாங்கி மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கும் அரசுகள்! - கடன்வரம்பும் உரிமைகளும்




the office bankrupcy GIF



கடன் பற்றாக்குறை
தள்ளாடும் மாநிலங்கள்

ஆங்கிலத்தில்: ஆனந் த் அதிகாரி, தீபக் மோண்டல்

நன்றி: பிஸினஸ் டுடே

பெருந்தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகள் செலவழிக்க பணமின்றி தடுமாறி வருகின்றன. மாநில அரசுகளுக்கு உள்ள தடை கடன் வரம்பு எல்லையைத் தாண்டி கடன் வாங்க முடியவில்லை என்பதுதான். தற்போது மத்திய அரசு மாநில அரசுகள் கடன் வாங்கும் வரம்பு எல்லையை 3 முதல் 5 சதவீதமாக உயர்த்தியுள்ளன. 2008ஆம் ஆண்டு மத்திய அரசின் பற்றாக்குறை 2.5 சதவீதமாக இருந்தது. மோசமான பல்வேறு நிதிக்கொள்கைகள் காரணமாக தற்போது, 4 சதவீதம் எனும் அளவிற்கு பற்றாக்குறை உயர்ந்துள்ளது. மாநில அரசுகள் கோவிட் -19 பாதிப்பைச் சமாளிக்க தற்போது 4.28 லட்சம் கோடி ரூபாயை கடன் பெறமுடியும். கடன் பெற்று அதனை சாமர்த்தியமான முறையில் செலவு செய்வது முக்கியம். இல்லையெனில் எந்த பயனும் கிடைக்காது.

அடிப்படையில் மாநில அரசுகள் 3.5 சதவீதம் மட்டுமே கடனைப் பெறமுடியும். அதாவது, 7.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வெளியில் கடன்களைத் திரட்ட முடியும். இதனை அதிக நிபந்தனைகள் இன்றி பெற்றாலும், குறிப்பிட்ட வரம்புக்கு மீறி கடன்களை பெற நினைதால், பல்வேறு விதிகளை பின்பற்றியே ஆகவேண்டும்.

ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை, உள்ளூர் அமைப்புகளின் வருவாய், மின்சார அமைப்புகள், வணிகத்திற்கு எளிதான முறைகள் என பல்வேறு சீர்திருத்தங்கள் மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை மாநிலங்கள் அமல்படுத்துவது கடினமல்ல. ஆதார் அட்டை குடும்ப அட்டையோடு இணைக்கப்பட்டிருப்பதால், இதில் போலிகளைத் தயாரிப்பது கடினம். கடன்களை பெறுவதால், மின்சாரத்துறையில் விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரம் நிறுத்தப்படும். இதன் காரணமாக, மானியங்களால் ஏற்படும் இழப்பு தவிர்க்கப்படும் என்கிறார் சத்தீஸ்கர் மாநில வணிக வரித்துறையைச் சேர்ந்த அமைச்சர் டி.எஸ். சிங்டியோ. இதில் குழப்பங்களும் இல்லாமல் இல்லை. கடன்களைப் பெற வணிகத்தை எளிதாக செய்வதற்கான விதிகளை மாநிலங்கள் மாற்றவேண்டும் என்பதை அனைத்து மாநிலங்களும் நிறைவேற்றும் என்று கூற முடியாது. மேலும், மாநில அரசுகள் பெற்றுள்ள கடன்தொகையை முழுக்க செலவு செய்துவிட்டால் அவை அரசை நடத்த பணமின்றி தடுமாற நேரிடும் அபாயமும் உள்ளது.  

பெருந்தொற்று காலத்தில் வரி வருவாயில் ஏற்பட்ட நஷ்டம் அனைத்தும் மாநிலங்களை பிச்சைக்காரர்களாக்கிவிட்டது. மத்திய அரசு ஜிஎஸ்டி வரி இழப்பை மாநில அரசுகளுக்கு முன்னமே வழங்கிவிட்டது என்றாலும் அந்த பணம் இன்னும் பல மாநிலங்களுக்கு வந்து சேரவில்லை. மேலும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசை நம்பியிருக்கவேண்டிய நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. மாநில அரசுகளின் பட்ஜெட்டில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே மத்திய அரசு நிதியளித்து வருகிறது. இந்த நிலையில் மாநில அரசுகள் எப்படி அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும்? இவற்றை உருவாக்கினால் மட்டுமே மாநிலங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர முடியும். தொழில்நிறுவனங்களை ஈர்க்க முடியும் என்கிற நிலை உருவாகிவருகிறது. மாநில அரசு தனது வரிவருவாய் மூலம் அறுபது சதவீதமும், பிற நிதியை மத்திய அரசும் வழங்கும் நடைமுறை இருந்தது. பொதுமுடக்க காலத்தால் மத்திய அரசிடமும் நிதி கிடையாத நிலையில், மாநில அரசு தனது ப்ல்வேறு திட்டங்களுக்கான நிதியை வரியை உயர்த்துவதன் மூலமே பெற முடியும்.

வரிவருவாயை இழந்த தமிழ்நாடு, ஆந்திரம், டில்லி ஆகிய மாநிலங்கள் மதுபானக்கடைகளை மக்களின் கண்டனங்களைத் தாண்டி திறந்துள்ளன. இதில் மதுபானங்களுக்கான வரி 50 முதல் 70 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையும் குறிப்பிட்ட எல்லை தாண்டி கூடுதலாக்க முடியாது என வரி  வருவாய் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து டிவிடெண்டுகளைப் பெற்றும், லாட்டரி நிறுவனங்களிடமிருந்தும் அரசு வருமானங்களைப் பெற வாய்ப்பு உள்ளது.

வரிவருவாய்க்காக நிலச்சீர்த்திருத்தங்கள், மின்சார பயன்பாட்டுக்கான கட்டண உயர்வு அதிகரிப்பு ஆகியவை நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. மாநில அரசுகள் இதன்மூலம் பெறும் பணத்தை கவனமாக செலவு செய்தால் மட்டுமே பொருளாதார இடர்ப்பாடுகளைக் கடந்த அரசை நடத்த முடியும்.


கருத்துகள்