குடும்பத்தைக் காப்பாற்ற போராடும் ஜெகஜால கில்லாடி! - நுவ்வு தோப்பு ரா




Prabhas supports Nuvvu Thopu Raa





நுவ்வு தோப்புரா 

இயக்கம் ஹரிநாத் பாபு பி

ஒளிப்பதிவு அஜூ மகாகாளி

இசை பி.ஏ. தீபக்


அப்பா இறந்துவிட, அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டு ஜாலியாக சுற்றித்திரியும் இளைஞன் தன்னைப் புரிந்துகொள்ளும் கதை. சரூர்நகரில் சுற்றிவரும் சூரி, தன் அம்மா மீது எப்போதும் கோபமாக சுற்றித்திரிகிறான். அவள் வேலை செய்துதான் குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள். ஆனால் சூரிக்கு ஊர் தன் அம்மாவை அவதூறாக பேசுவது பிடிக்காமல் நீ என்னை பார்த்துக்கொள்ளாமல் வேலைக்குப் போய்விட்டாய் என நேரம் கிடைக்கும்போது எல்லாம் திட்டுகிறான். அவனுக்கு பறை வாசிப்பதில் ஆர்வம் இருக்கிறது. அதனைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்கு  செல்லும்  வாய்ப்பு கிடைக்கிறது. அங்கு அவனுக்கு நேரும் விளைவுகளால் வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்கிறான். அதேசமயம் அவன் சந்திக்கும் சட்டவிரோத கும்பலால்  பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறான். அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதுதான் கதை. 

படத்தின் கதை எப்போது தொடங்கும் என காத்திருக்கிறோம். ஆனால் படம் அவ்வளவ எளிதில் தொடங்குவேனா என்கிறது. சூரி கதாபாத்திரத்தில் சுதாகர் நன்றாக நடித்திருக்கிறார். திரைக்கதை எங்கே செல்வது என தடுமாறுவதால் நிரோஷா, ரவி வர்மா உள்ளிட்ட கதாபாத்திரங்கள் பாதி வழியில் அப்படியே திகைத்து நின்றுவிடுகின்றனர். 

வெளிநாடு வாழ் தெலுங்கர்களுக்கு கிடைத்த நேரம் எல்லாம் அட்வைஸ் செய்துகொண்டே இருக்கிறார் சூரி. தெலுங்கர்களை குறிவைத்து பேசும் காட்சிகள் அவர்களுக்கு பிடிக்கலாம். ஆனால் கதையில அவை தடங்கலாக இருக்கின்றன. 

தன்னுடைய இயல்பை விட்டுவிடாமல் இருந்தால் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நல்லது நடக்கும் என்பதை சொல்கிறார் இயக்குநர். படத்தின் முடிவும் தெலுங்குப் பெண்ணை மணமுடிப்பது போல் இல்லாமல் இருப்பது ஆறுதல். 

ஜெகஜால கில்லாடி என்று சொல்ல முடியாது. 

கோமாளிமேடை டீம் 








கருத்துகள்