மாஸ்க் அணிந்தால் கோவிட் -19 தொற்று ஏற்படாதா?




comedy GIF
ஜிபி


மாஸ்க் அணிந்தால் கோவிட் – 19 நோய்த்தொற்று ஏற்படாதா?

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, செக் குடியரசு என பல்வேறு நாட்டு அரசும் முக கவசங்களை மக்கள் அணிவதை கட்டாயம் என்று அறிவித்துவிட்டன. இதை நாம் எழுதுவதற்கு முன்னரே உலக சுகாதார நிறுவனமும் முக கவசங்களை அணிவதை முக்கியமானது என்று  கூறிவிட்டது. உண்மையில் இதில் முக கவசம் நோய்த்தொற்றை தடுக்கிறதா?

முக கவசம் அணிவதன் மூலம் நீங்கள் நோய்த்தொற்றை தடுக்க முடியும் என்பதற்கு எந்த மருத்துவ ஆதாரமும் கிடையாது. நோயால் பாதிக்கப்பட்டவர் கண்டிப்பாக முக கவசத்தை அணிய வேண்டும். ஆனால் பிறர் அணிவது அவசியமில்லை. ஆனால் சமூக இடைவெளியை உறுதியாக அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் வான் டாமே.

எம்ஐடி நிறுவனம் பாதிக்கப்பட்டவர் தும்மும்போது, இருமும்போது எட்டு மீட்டர் தூரத்திற்கு நீர்த்திவலைகள் தெறிப்பதை ஆய்வில் கண்டறிந்தனர். இதற்காக அதிக திறன் கொண்ட கேமராக்களைப் பயன்படுத்தினார். முக கவசம் அணிந்தவர்களை விட அணியாதவர்களுக்கு பத்தில் மூன்று பேருக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது தெரிய வந்துள்ளது. கிருமி எப்படி பரவுகிறது என முழுமையாக அறியாத காரணத்தால் இந்தியாவில் கட்டிடங்களுக்கு கிருமிநாசினிகளை பயன்படுத்தி கழுவிக்கொண்டிருக்கின்றனர். நோய் பரவும் வழிகளை குறைப்பதற்காக நாம் முக கவசங்களைப் பயன்படுத்தலாம் என்கிறார் மருத்துவர் அலெக்ஸாண்டர் எட்வர்ட்ஸ். முக கவசம் என்பதை அணிவது குறைந்தபட்ச நோய் பாதுகாப்பிற்கான முயற்சி மட்டுமே. சமூக இடைவெளி, சுத்தமாக இருப்பது ஆகியவை மட்டுமே ஒருவரை நோயிலிருந்து காக்கும். கோவிட் -19 நோய்த்தொற்று உங்களுக்கு இருந்தால் உறுதியாக முக கவசம் இன்றி வெளியே செல்லக்கூடாது. அது பிறருக்கும் பேராபத்தாக முடியும்.

நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

ஆங்கிலத்தில் சாரா ரிக்பி


கருத்துகள்