பிண கூராய்வளர் செய்யும் தவறும், அதன் பின்விளைவுகளும் - நோ மெர்சி




No Mercy (2010) - Posters — The Movie Database (TMDb)




நோ மெர்சி  2010  தென்கொரியா

இயக்கம் கிம் ஹையான் ஜுன்

ஒளிப்பதிவு  கிம் வூ ஹையான்

இசை பார்க் ஜி மன்

சுயநலத்திற்காக நாம் செய்யும் சில செயல்கள், பிறரை எப்படி காயப்படுத்துகிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால் அப்படி காயப்பட்டவர்கள் திரும்ப அந்த நிகழ்ச்சிகளை நினைவூட்டி நம்மையும் அதுபோல இயலாமையில் சிக்க வைத்தால் எப்படியிருக்கும் அந்த வலி, வேதனை? ஏழைகள் நிறைய விஷயங்களை மன்னித்துவிடுவது அவர்களுக்கு இருக்கும் இயலாமையில்தான். அவர்களுக்கும்  அனைவரைப் போலத்தானே உணர்ச்சிகள் இருக்கும். படம் சொல்லுவதும் அதுதான்.

மருத்துவர் காங், நாட்டிலேயே புகழ்பெற்ற பிணக்கூராய்வாளர் மற்றும் கல்லூரி பேராசிரியர். அவரிடம் ஒரு பிணத்தைக்கொண்டு வருகிறார்கள். அந்தப் பிணத்தில் தலை, கை, கால்கள் அனைத்தும் வெட்டப்பட்டுள்ளன. ஒரு கை மட்டும் காணவில்லை. கொலை நடந்த விதம் பற்றி காங் தனது யூகங்களை சொல்லி காவல்துறைக்கு நிறைய உதவிகளைச் செய்கிறார். இதை வைத்தே காவல்துறையினர் குற்றவாளியை நெருங்குகின்றனர். லீ என்ற சூழல் போராட்டக்காரனை கைது செய்துவிடுகின்றனர். அப்போது பார்த்து காங், பிண கூராய்வு பற்றிய அறிக்கையை கூட தயாரிக்காமல் தனது மகள் வெளிநாட்டிலிருந்து வருவதால் அவளை வரவேற்க சென்றுவிடுகிறார். ஆனால் காத்திருந்தவருக்கு ஏமாற்றமே கிடைக்கிறது. அவர் மகள் வருவதில்லை. அவருக்கு பார்சல் ஒன்றை கொண்டு வந்து கொடுப்பவன், வேகமாக சென்று விடுகிறான். அதில் அவரது மகள் கைகள் கட்டப்பட்டு கிடப்பதை பார்க்கிறார். காவல்துறையால் கைது செய்யப்பட்டு உள்ள லீதான் தனது மகளை கடத்தி வைத்திருக்கிறான் என்பதை தெரிந்துகொள்கிறார்.

No Mercy - 용서는 없다 - Watch Full Movie Free - Korea - Movie ...




தன்னை மூன்று நாட்களுக்குள் பிணையில் விடுவிக்க உதவ வேண்டும். அல்லது விடுதலை செய்யவேண்டும். இல்லையெனில் உன் மகளை துண்டு துண்டாக பார்ப்பாய் என மிரட்டுகிறான். அத்தனை காவல்துறை ஆட்கள் இருக்க, லீ என்ற அந்த கொலைகாரன் எதற்கு காங் என்ற மருத்துவரை மிரட்டுகிறான், அலைய வைக்கிறான் என்பது மீதிக்கதை.

சுயநலத்திற்கான ஒருவர் செய்யும் விஷயங்களை பிறரை எப்படி பாதிக்கிறது என்பதை வலுவான வன்முறைக் காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள். குற்ற உணர்வும், நாம் விரும்பியவரை காப்பாற்ற முடியாதபோது நமக்கு மனதில் ஏற்படும் வலி எப்படியிருக்கும் என்பதை இறுதிக்காட்சியில் லீ, காங்குக்கு உணர்த்துகிறான். மன்னிக்கவும் முடியாமல் வலியைத் தாங்கவும் முடியாமல் மருத்துவர் காங் எடுக்கும் முடிவுதான் திடுக்கிட வைக்கிறது.

கோமாளிமேடை டீம்





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்