மில்லினியக் காதலின் முகவரி - லவ் ஆஜ் கல் 1990- 2020
இந்தியா டுடே |
லவ் ஆஜ் கல் - 1990 -2020
கதை - இயக்கம் - இம்தியாஸ் அலி
ஒளிப்பதிவு - அமித் ராய்
இசை - ப்ரீதம் சக்ரபோர்த்தி
தொண்ணூறுகளில் நடக்கும் காதல் கதை, இன்று நடக்கும் காதல் கதை என இரண்டு காதல் கதைகளுக்கும் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளை சொல்லி இருக்கிறார் இம்தியாஸ் அலி.
ஜோ என்ற இளம்பெண் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை தொடங்க நினைக்கிறாள். அதற்காக உழைத்து வருகிறாள். அதற்கான இளமைக்காலத்தை தொழிலுக்கென விட்டுக்கொடுத்துவிட முடியுமா? பாரில் வீர் என்ற இளைஞனை சந்திக்கிறாள். அவனுடன் பேசிக்கொண்டே அவனது அறைக்குச் செல்கிறாள். ஒரே நோக்கம் செக்ஸ் வைத்துக்கொள்வதுதான். ஆனால் வீர் வேறுமாதிரியான ஆள். அதாவது காதல் முக்கியம் செக்ஸ் அப்புறம் என்று நினைப்பவன். செக்ஸ் மூடுக்கான அத்தனை விஷயங்களையும் செய்துவிட்டு வீர் உடலுறவுக்கு மறுப்பதால் லூசு என்று சொல்லிவிட்டு வெளியேறி போய் விடுகிறாள் ஜோ. அவள் போனாலும் அவள் வேலை செய்யும் கோ வொர்க்கிங் ஸ்பேசுக்கு வருகிறான் வீர். எரிச்சலாகி வந்து நைட் ஏண்டா அப்படி நடந்துக்கிட்டே என்று அவனிடம் கத்துகிறாள் ஜோ.
இதற்கிடையே இவர்களது வித்தியாசமான உறவைப் பார்த்துவிட்டு கபே பிளஸ் கோ வொர்க்கிங் ஸ்பேஸ் ஓனர் தன் காதல் கதையை ஜோவிடம் சொல்லத் தொடங்குகிறார். அவரின் 1990 கதையும், 2020 கதையும் முன்பின்னாக ஒடத்தொடங்குகிறது.
ஆஹா
படம் முழுக்க சாரா அலிகான், ரந்தீப் ஹூடா ஆகியோர்தான் நினைவில் நிற்கிறார்கள். கார்த்திக் ஆர்யன் ஏதோ நரம்புத்தளர்ச்சி வந்தது போல நடிக்கிறார். ஸ்... அப்பாடா என்று இருக்கிறது. சாரா இதில் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் நிறைய முன்னேறியிருக்கிறார். உடலுறவுக்கு வீர் மறுக்கும்போது அவமானமடைந்து வெளியேறும்போதும். பின்னாளில் வீர் உறவுகொள்ள தயாராகும் போது அவன் மீதான காதலால் தடுமாற்றமடைந்து சாரா மறுப்பதுமான காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். வசனங்கள் நன்றாக இருக்கின்றன. அவைதான் படத்தை சலிப்பு ஏற்படுத்தாமல் நிறைய இடங்களில் காப்பாற்றுகின்றன.
ஐயையோ
தொண்ணூறுகளில் வரும் காதல் காட்சிகள் படத்தில் அவ்வளவாக ஒட்டவில்லை. அதில் கார்த்திக் ஆர்யனே நடித்திருப்பது பார்வையாளர்களுக்கு பெரும் சோதனையாகவே இருக்கிறது. ரந்தீப் ஹூடாவின் கதாபாத்திரத்தை கார்த்திக் ஆர்யனுக்கு பொருத்துவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன.
மில்லினியக் காதலைப் புரிந்துகொள்ள பார்க்கலாம்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக