பெருந்தொற்று காலத்தில் பரவும் பல்வேறு போலி நம்பிக்கைகளும் செய்திகளும்! விக்ரம் டாக்டர்

Fake News, Propaganda, Deceit, Deception, Lies, Truth
pixabay
கோவிட் -19 தொற்று பரவிவரும் வேளையில் பல்வேறு போலியான அறிவியல் செய்திகள், நம்பிக்கைகளும் மக்களிடம் பரவி வருகின்றன. தனது செயலின்மையை மறைக்க சமூக வலைத்தளங்களில் அரசு சார்பான ஆட்கள் இனப் பாகுபாடு காட்டி பல்வேறு போலிச்செய்திகளை உலவ விட்டு வருகின்றன. பலர் அதனை உணர்ச்சிகரமான தாக மட்டும் பார்த்துவிட்டு சாமி கண்ணைக் குத்திவிடும் என்பது போல தனது நண்பர்களுக்கும் அனுப்பி வருகின்றனர்.

எது உண்மை எது பொய் என்றே தெரியாமல்  ஊரடங்கு காலத்தில் மக்கள் செய்திகளை பரப்புகின்றனர். 5 ஜி டவர்கள் மூலம்தான் கோவிட் தொற்று பரவுகிறது என்று வந்த செய்தியை நீங்களும் படித்திருப்பீர்கள். எப்படி இப்படிப்பட்ட செய்திகளை கேட்டவுடன் நம்புகிறார்கள். அதனையும் இன்னும் சில பிட்டுகளை நெருக்கமாக போட்டு நங்கூரம் போட்டது போல மாற்றி பிறருக்கு அனுப்பி வைக்கின்றனர் என்பதும் புரியவில்லை. அனைத்து மனிதர்களும் பல்வேறு சிக்கல்களில் உள்ளனர். பொருளாதார பலம் குறைந்து வருகிறது. வேலை சார்ந்த எதிர்காலம், பள்ளிக்கட்டணம், வீட்டு வாடகை, எப்போது ஊரடங்கு தளர்ந்த  வேலைக்குச் செல்வது என பதற்றத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் அடுத்தவர்களின் ரத்த அழுத்தத்தை உச்சந்தலை வரை ஏற்றும் வேலையை நிறைய பேர் செய்துவருகின்றனர்.

அனைத்திற்கும் உச்சமாக தனக்கு வாக்களித்த மக்கள் நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டு இருக்கும்போது கூட வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிவருகிறார். கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்தி பார்க்கலாமா என்ற அளவுக்கு பிரச்னையின் தீவிரம் அவரை யோசிக்க வைத்துள்ளது ஆச்சரியம். அறிவியல் ஆராய்ச்சி, அனைத்து விஷயங்களிலும் முன்னணியில் உள்ள நாடு என்ற பிம்பம் இனி அமெரிக்காவுக்கு இருக்காது. அதற்கான வேலையை அந்நாட்டின் அதிபரே பார்த்துக்கொள்வார். பிறரிடம் உதவிகளைக் கோரி வாழ்க்கையை ஓட்டும் சூழல். எப்படி ஏராளமான போலிச்செய்திகளை பரப்ப  உதவுகிறது என்று யோசித்தால் தலை சுற்றுகிறது. கோவிட் -19 க்கு பல நாடுகள் மருந்து கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். இந்தியர்கள் எப்போதும் தத்துவரீதியில் எளிமையாக யோசிப்பவர்கள்தானே நாம்? பிரதமர் எளிமையாக வீட்டுக்குள் பசித்திருங்கள் என்று சொல்லி ஊரிலுள்ள ஒரு கடை கூட விடாமல் மூடிவிட்டார்.  நீங்கள் வெளியே வராவிட்டால் கொரோனா தானாவே நாட்டை விட்டு வெளியே போய்விடும் என்று அவர் தனது புத்திக்கு எட்டிய வரையில் யோசித்திருக்கிறார். நிச்சயம் இதற்கு நாம் பெருமைப்படத்தானே வேண்டும்!

அனைவருமே மிகவும் சிக்கலான இக்கட்டான சூழலில் வாழ்வதற்கான ஒருவேளை உணவைப் பெறுவதற்கான போராட்டத்தில் இருக்கிறோம். ஆனால் சமூக வலைத்தளங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக, குறிப்பிட்ட சாதியினருக்கு எதிராக  என போலிச்செய்திகளை உருவாக்குவதும் பரப்புவது குறையவே இல்லை. மிகவும் சிக்கலான சமயங்களில் போலிச்செய்திகள் அந்த நேர குளறுபடிகளின், பிரச்னையில் தீவிரத்தைக் குறைப்பதாக 2013ஆம் ஆண்டு வெளியான ஃபிரான்டியர்ஸ் ஆய்விதழில் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது.

கோவிட் -19 நோய் தொற்று பாதிப்பால் மத்திய அரசின் தடுப்பூசி திட்டம் பாதியிலேயே தடுமாறி நிற்கிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு  போலியோ, மஞ்சள் காய்ச்சல், காலரா, அம்மை ஆகிய நோய்களைத் தடுப்பதற்காக போடப்பட்ட தடுப்பூசி திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு நினைத்தால் செய்ய முடியும், அவர்கள் போலிச்செய்திகளை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிடவே நேரம் சரியாக இருக்கிறது. தடுப்பூசிகளை போடுவதில் நிறைய போலியான விவாதங்களையும் கூக்குரல்களையும் சில குழுக்கள் எழுப்பி வருகின்றன. தடுப்பூசி ஆட்டிசம் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது இதில் ஒன்று. டென்னிஸ் வீரர் நோவக் டிகோவிச் , தடுப்பூசி போடுவதற்கு எதிரான கருத்தைக்கொண்டிருக்கிறார். இதன் காரணமாக, இவரைப் பின்பற்றுபவர்கள் என்ன முடிவை எடுப்பார்கள்? அறிவியல்ரீதியான நிரூபிக்கப்பட்ட முறையாக தடுப்பூசி உள்ளது. ஆனால் அதனை மறுப்பதன் மூலம் டிகோவிச் தனது குழந்தைளுக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் தவறான செய்தியை தருகிறார். தனது மனதில் பட்ட கருத்து தவறு என உணரும்போது ஒருவரின் குழந்தை ஊனமாகி இருந்தால், இறந்து போயிருந்தால் என்ன செய்வீர்கள்? அந்த பாதிப்பிலிருந்து ஒருவர் மீள்வது கடினம்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா -

ஆங்கிலத்தில்: விக்ரம் டாக்டர் 








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்