வெப்பமயமாதல் காரணமாக புயல்களை அடையாளம் காண்பது கடினமாக மாறியுள்ளது. - மிருத்யுஞ்ஜெய் மொகபத்ரா







Tornado, Storm, Tree Branch, Rainstorm, Thunderstorm
pixabay


மிருத்யுஞ்ஜெய் மொகபத்ரா, வானியல்துறை இயக்குநர்

வானியல் மாற்றங்களை அளவிடுவதற்கு கடல் முக்கிய பங்கு ஆற்றுகிறதா? கடல் நீரின் வெப்பநிலையை அளவிடவேண்டுமா?

கடல்நீரின் மேற்பரப்பு வெப்பநிலையை அளவிடுவது புயல் உருவாகுமா இல்லையா என்பதைக் கண்டறிய உதவும். இதன் வழியாக நம் நாட்டிற்கு பருவகாலங்களில் கிடைக்கும் மழைநீர் அளவையும் நம்மால் யூகித்து உணர முடியும். இந்த பிரச்னைகளால் பருவகாலங்களில் மழையின் அளவு குறைவதையும் கூட நம்மால் கண்டுபிடிக்க முடியும்.

இவற்றை எதிர்கொள்வதில் நிறைய சவால்கள் உள்ளனவா?

பருவகாலங்களில் பெய்யும் மழைநீர் அளவை அளவிடுவதில் வெப்பமயமாதல் முக்கிய பங்கை வகிக்கிறது. இதன் காரணமாக நாங்கள் காலம்தோறும் பல்வேறு முறைகளைக் கையாண்டு வானிலையை கணித்து வருகிறோம்.

ஆந்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் புயலால் அடிக்கடி பாதிக்கப்படுகிறதே?

தேசிய புயல் பாதுகாப்பு திட்ட அடிப்படையில் ஒடிஷா, ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் அடிக்கடி புயலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இவை புயலால் பாதிக்கப்படும் இடங்கள் என தேசிய பேரிடர் மையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்காள விரிகுடாவில் இரண்டு புயல்கள் தோன்றியுள்ளன.?

முதலில் ஃபானி புயல், அடுத்து அம்பான் புயல் ஆகியவை தோன்றியுள்ளன.  வங்காள விரிகுடாவில் மட்டுமல்ல அரபிக்கடலிலும் கூட ஆண்டுக்கு ஐந்து புயல்கள் உருவாகி வருகின்றன. அரபிக்கடலில் ஒரு புயல், வங்காள விரிகுடாவில் நான்கு புயல் என்ற கணக்கில் உருவாகின்றன. ஏப்ரல் – ஜூன், அக்டோபர் – டிசம்பர் காலகட்டங்களில் இவை உருவாகின்றன. இதில் ஒரு புயல் பருவகாலத்திற்கு முன்னேயும், நான்கு புயல்கள் பருவகாலத்திற்கு பின்னேயும் உருவாகி மாநிலங்களை தாக்குகின்றன. ஃபானி, அம்பான் ஆகிய புயல்கள் இயல்பாக உருவானவைதான்.

 ஆங்கிலத்தில் - ஆசிஷ் மேத்தா

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்