ஓவிய ஆசிரியனின் அன்பை பள்ளியில் படிக்கும் மனைவி புரிந்துகொண்டாளா? மை லிட்டில் பிரைட்
ஜஸ்ட் வாட்ச் |
மை லிட்டில் பிரைட் 2004 தென்கொரியா
இயக்கம் - ஹோ ஜூன் கிம்
திரைக்கதை யூ சுன் 2
வெளிநாட்டிலிருந்து நாயகன் திரும்பி வருகிறான். அவன் கையில் ஒரு சிறுமியின் புகைப்படத்தை வைத்திருக்கிறான். அவளை அவன் விரும்பினாலும் வெளியே சொல்லவில்லை. ஆனால் அவன் நினைத்த விஷயம் அவன் குடும்பத்திற்கு நெருக்கமான தாத்தா ஒருவரின் விருப்பத்தின் பேரில் நடக்கப்போகிறது என்பதை அவன் அப்போது அறியவில்லை. விமானநிலையத்தில் இறங்கி வீட்டுக்குச் சென்றால் அங்கே அவர்களின் உறவினரான தாத்தா ஒருவரை தனக்குப் பிடித்த பள்ளி மாணவியின் துணையுடன் சென்று சந்திக்கிறான். அவர் சிம்பிளாக நான் இறக்கப்போகிறேன். எவ்வளவு நாட்கள் வாழ்வேன் என்று தெரியாது அதற்குள் என் பேத்தியை நீ கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என படாரென குண்டைத் தூக்கி போடுகிறார். நாயகனுக்கும் பள்ளிச்சிறுமிக்கும் திகீரென்று ஆகிறது. பள்ளிச்சிறுமிக்கு பள்ளியில் பல பெண்கள் சைட் அடிக்கும் பள்ளி சிறுவன மீது ஒருதலைக் காதல். இந்த நிலைமையில் தான் எப்படி இன்னொருவரை கல்யாணம் செய்துகொள்ள முடியும்? அதுவும் நட்பாக வேறு பழகுகிறோம் என மனம் புழுங்குகிறார்கள்.
பெரியவர்களின் செல்வாக்குதான் ஜெயிக்கிறது. நாயகன் ஓவிய ஆசிரியர். அவனுக்கும் அவன் பள்ளிசெல்லும் மனைவிக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் அவன் அவளை தீவிரமாக காதலிக்கிறான். ஆனால் அதனை அவன் மனைவி புரிந்துகொள்வதில்லை. திருமணமான உண்மையை மறைத்து தான் ஒருதலையாக காதலிக்கும் பள்ளி ஹீரோவுடன் டேட்டிங் போகிறாள். ஆனால் இந்த டேட்டிங்கால், அவளது தோழியின் நட்பையும் இழக்க நேருகிறது. பின்னே அவளும் அவனுக்குத்தானே ரூட் போட்டுக்கொண்டிருந்தாள். அவள் ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும், உனக்கு கணவரும் இருக்காரு, பாய் பிரெண்டும் இருக்காரு என குத்திக்காட்டிக்கொண்டே இருக்கிறாள். இந்நிலையில் அவள் படிக்கும் பள்ளிக்கு இன்டர்ன்ஷிப்புக்காக அவளின் கணவன் ஓவிய ஆசிரியராக வருகிறான். அவர்கள் திருமணம் செய்துகொண்டது யாருக்கும் தெரியக்கூடாது என்று அவனது மனைவி நினைக்கிறாள். இறுதியில் நாயகனின் காதல், அவனது மனைவிக்கு புரிந்ததா? அவர்களது திருமணத்தை பள்ளி நிர்வாகம் தெரிந்துகொண்டதா என்பதுதான் இறுதிக்காட்சி.
டீன்ஏஜில் உள்ள பள்ளிச்சிறுமிக்கு கல்யாணம் ஆனால் எப்படியிருக்கும் ? என்பதுதான் கதை. அவளின் வெட்கம், குணம், தான் நினைத்த விஷயங்கள் நடக்க முடியாமல் போவது, கணவனுடன் சண்டை போடுவது, பாய்ப்ரெண்டின் உறவை வீட்டிலுள்ளோர் தெரிந்துகொண்டதும் அழுவது என ஷார்ப்பாக நடித்திருக்கிறார். கணவன், மனைவிக்குமான நெருக்கமான காட்சிகளும் உண்டு. முடிந்தவரை நாகரிகமாகவே எடுத்திருக்கிறார்கள். புட்டம் பற்றிய காமெடி மட்டும் விதிவிலக்கு.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக