என்னைச்சுற்றி நடக்கும் அநீதிகளை என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது - சின்மயி ஸ்ரீபதா
india today |
சின்மயி ஸ்ரீபதா, பாடகி மற்றும் டப்பிங் கலைஞர்
ஆங்கிலத்தில்: ஸ்ருதி ராமன்
பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகிகளுக்கு குரலைக் கடன் கொடுத்து பிரபலமாகி உள்ளார். பாடல் மட்டுமல்லாது, பாலியல் சீண்டல் பற்றியும் குரல் கொடுக்க தயங்கியவரல்ல.
உங்களது நன்கொடைக்கான இசை நிகழ்ச்சி பற்றி சொல்லுங்கள்.
பாடகர்கள், டப்பிங் கலைஞர்களான எங்களைப் போன்றவர்களை பாட அல்லது குறிப்பிட்ட வசனங்களைப் பேச சொல்வது ரசிகர்களின் வழக்கம். இது அனைத்துக்கும் ஆரம்பம். விண்ணைத் தாண்டி வருவாயா படம்தான். அதில் கார்த்திக்கிடம் ஜெஸ்ஸி பேசும் வசனம் மிகவும் பிரபலம். இதனால் என்னுடைய குரலை நான் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்த நினைத்தேன். எனவே யாராவது பெருந்தொற்றுக்கு உதவியவர்கள் அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எனக்கு அனுப்பினால் அவர்களுக்கு நான் பாடிய பாடலை அனுப்புவேன். இப்படி ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 1200 பாடல்களை பாடி அனுப்பியுள்ளேன்.
அதிகம் பேர் உங்களைக் கேட்டுக்கொண்ட பாடல் எது?
தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால் படப் பாடல், தெலுங்கில் மஜிலி படத்தில் இடம்பெற்ற பிரியதமா என்ற பாடல்.
இணையம் பல்வேறு வாய்ப்புகளை வழங்குவதாக நினைக்கிறீர்களா? குறிப்பாக விர்ச்சுவல் டூர் போன்றவற்றை நடத்துவதற்கு...
பெருந்தொற்று வேகமாக பரவி வருவதால் நேரடியாக சந்தித்து நிகழ்ச்சிகளை நடத்துவது சாத்தியமில்லை. நேரடியாக சந்தித்து ஒருவரிடம் பேசி அனுபவங்களை பகிர்வது நிச்சயம் மேஜிக்தான். விர்ச்சுவல் முறையில் சரியானபடி ஒருங்கிணைத்தால் நாம் நிறைய கலைஞர்களுடன் எளிதாக பணிபுரிய முடியும். இணையம் நிறைய வாய்ப்புகளை வழங்குவது உண்மைதான்.
நீங்கள் இணையத்தில் உள்ள ட்ரோல்கள், ரசிகர்களின் சண்டை ஆகியவற்றைப் பற்றி தைரியமாக குரல் கொடுத்து வருகிறீர்கள்
ம்ம். உண்மைதான். ரசிகர்கள் தங்களுக்குள் அடிக்கடி சண்டைப் போட்டுக்கொள்வதை நிறுத்தவே முடியாது. ஒருகட்டத்தில் இந்த சண்டை பெண்களை, குழந்தைகளை இழிவுபடுத்துவது வரை நீள்கிறது. இதுபோன்ற ட்விட்டர் கணக்குளைப் பற்றி நான் சைபர் செல்லில் புகார் தெரிவித்து வருகிறேன். அவர்கள் இந்த கணக்குகளை நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் எப்படி செயல்படுகிறீர்கள்?
ஒருவர் பாதிக்கப்படும்போது என்னால் வெறுமனே வேடிக்கை பார்க்கமுடியாது. என்னைச் சுற்றியுள்ளவர்கள், நண்பர்கள் இதுபற்றி கவலைப்படுகிறார்கள் என்று தெரியும். ஆனாலும் அநீதிகளுக்கு எதிராக கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க என்னால் முடியாது.
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக