சதிகளை தகர்த்து குற்றவாளியை தூக்கில் போட துடிக்கும் சிறை அதிகாரி! அசுரா
சில்வர்ஸ்க்ரீன் |
அசுரா
இயக்கம்: கிருஷ்ண விஜய்
இசை: சாய் கார்த்திக்
சிறையில் ஜெயிலராக உள்ள
தர்மா, குற்றம் என்ற ஒன்றை ஒருவனிடம் கண்டால் இரக்கம் இல்லாதவனாகிவிடுவார். அடித்து
கை, கால்களை உடைப்பது என சக காவல்துறையினரே அவரை ராட்சசன் என்று அழைக்கும்படி நடந்துகொள்கிறார்.
அவரது காதலியின் தந்தையிடம் பெண் கேட்கும்போதும் கூட நீங்கள் விரும்பினால் திருமணம்
உங்கள் சம்மதம் பேரில் நடக்கும். இல்லையென்றால் நாங்களே செய்துகொள்வோம் என முரட்டுத்தனமாக
பேசிவிட்டு வருகிற ஆள். இப்படிப்பட்டவரின் இடத்திற்கு வைர வியாபாரி சார்லி, தன் அப்பாவின்
இரண்டாவது மனைவிக்கு பிறந்த பிள்ளைகளைக் கொன்றுவிட்டு மரணதண்டனை பெற்று வருகிறான்.
அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது தர்மாவின் டூட்டி. சார்லியை பார்த்தாலே தர்மாவுக்கு
ஆகவில்லை. எப்படி சாகப்போகிறாய் பார் என மிரட்டிக்கொண்டிருக்கிறார் தர்மா. சார்லி,
சிறையில் உள்ள தன்னால் போலீசிடம் சிக்க வைக்கப்பட்ட பாண்டு என்பவனைச் சந்திக்கிறான்.
அவனுக்கு வைர ஆசை காட்டி தன்னை சிறையிலிருந்து மீட்க சொல்கிறான். பாண்டு விடுதலையான
பிறகு சார்லியை மீட்டானா, தர்மா இந்த சதியைக் கண்டுபிடித்தானா, அவனை ராட்சசன் என்று
பிறர் சொல்லுவதற்கான காரணம் என்ன என்பதை ஏராளமான ட்விஸ்டுகளுடன் சொல்கிறது படம்.
ஆஹா
படம் முழுக்க இரண்டு ஆட்களை
மையப்படுத்தியுள்ளது. ஜெயிலரான தர்மா(நர ரோகித்), சார்லி (ரவி வர்மா) இருவருமே பிரமாதமாக
நடித்துள்ளனர். ஸ்ரீவிஷ்ணு சுகுமாரா பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளார். சாய் கார்த்திக்
இசையில் பாடலும் பின்னணியும் சிறப்பாக இருக்கிறது. பிரியா பானர்ஜி பாடல்களுக்கு மட்டுமே
டெடிகேட் செய்யலாம்.
ஐயையோ
நர ரோகித், அலட்டிக்கொள்ளாமல்,
உடலை அசைக்கக் கூட இல்லாமல் நடித்திருக்கிறார் என்பதே இங்கு பலவீனமாக இருக்கிறது. பொறுமையை
சோதிக்கும்படி நிறைய காட்சிகள் கூட்ஸ் ரயில்போல நகர்கின்றன. தர்மா தன் காதலியைக் காப்பாற்றுவாரா
என்று கூட நமக்கு பதற்றம் வரமாட்டேன்கிறது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக