பெருந்தொற்றை சாதுரியமாக சமாளித்த பெண் தலைவர்கள்! - கற்றுக்கொள்ளலாம் வாங்க!








Jennifer Lawrence Win GIF



பெருந்தொற்றை சமாளித்த பெண் தலைவர்கள்

உலக நாடுகளில் பெண்களை தலைவர்களாக கொண்ட நாடுகள் பெருந்தொற்றை சமாளிப்பதில் சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ளன. அங்கு விரைவில் பொதுமுடக்கம் விலக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை தொடங்கப்பட உள்ளது.

பின்லாந்து

சன்னா மரின். வயது 34. உலகின் மிக இளம்வயது பெண் பிரதமர்களில் ஒருவர். பிரதமராக பதவியேற்று ஆறுமாதங்கள்தான் ஆகிறது. அப்போதுதான் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தற்போது நாட்டில் கோவிட்  -19 ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஏழாயிரம் பேர்களுக்கும் குறைவு. மார்ச் 18 முதல் பொதுமுடக்கம் அறிவித்து ஜூன் 1 முதல் இயல்பு வாழ்க்கை அங்கு தொடங்கவிருக்கிறது. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் என அனைத்தும் திறக்கப்பட்டு இயங்கவிருக்கின்றன. திரையரங்குகளில் ஐம்பது பேர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏஞ்சலா மேர்கல்

ஜெர்மனி அதிபர். தன்னுடைய நாட்டு சுகாதாரத்துறையை மட்டுமல்லாது வெளியிலிருந்து வரும் செய்திகளையும் ஆராய்ந்து தன் நாட்டு மக்களைக் காப்பாற்றியவர். எழுபது சதவீதத்திற்கும் மேல் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற உண்மையை அறிந்தவர், அதற்கேற்ப பொது முடக்கத்தை அறிவித்து மக்களைக் காத்தார். இதனால், இங்கிலாந்து நாட்டைக் காட்டிலும் குறைந்த பாதிப்பு ஏற்பட்டது. அந்நாடு, தன் சுயமான சுகாதார ஆலோசகர்களின் அறிக்கையை மட்டுமே நம்பியது. ஆனால் ஜெர்மனி நாட்டிற்கு வெளியே உள்ள ஆதாரங்களை கருத்தில் கொண்டு தன்னைக் காத்துக்கொண்டது.

ஐஸ்லாந்து

கேத்தரின் ஜேக்கப்தோத்திர்ஸின் வேகமான அதிரடி நடவடிக்கைகள், ஐஸ்லாந்து நாட்டின் மக்கள் இறப்பைக் குறைத்துள்ளது. அறிகுறி உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் என சோதனை செய்து சாதனை செய்ததில் ஐஸ்லாந்து நாட்டிற்கே முதலிடம் தரவேண்டும். நாட்டில் உள்ள டிகோட் ஜெனடிக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு சோதனைகைள வேகமாக செய்தது. இதன் காரணமாக பெரியளவு பொதுமுடக்கங்களை அறிவிக்காமல், வரும் ஜூன் 15 முதல் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை தொடங்கவிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் குறைவான இறப்பு சதவீதம் கொண்ட நாடு இதுதான்.

டென்மார்க்

பொதுமுடக்கத்தை முன்னமே அமல்படுத்தி நாட்டு மக்களை பலியிடாமல் காத்துள்ளார் இடதுசாரி பிரதமரான மெட்டே ஃபிரடிரிக்சன். ஏராளமானோருக்கு முன்னதாகவே சோதனை செய்தது, நாட்டின் வணிகத்தை பாதிக்காமல் மீள உதவியுள்ளது. மேலும் நாடு முழுக்க இப்போது கோவிட் -19 நோய்த்தொற்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இரண்டாம் அலை நோய்த்தொற்று பாதிப்பு அடையாளம் காணப்பட்டு வருகிறது.

நியூசிலாந்து

பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், கடுமையாக உழைத்து முன்னமே நோய்த்தொற்றை முறியடிப்போம் என்று கூறினார். முதலில் சோதனை செய்தபோது 100 பேர்களுக்கு நோய்த்தொற்று இருந்தது. முழுமையான பொதுமுடக்க அறிவிப்பின் காரணமாக நோய்த்தொற்று எண்ணிக்கை வேகமாக குறைந்து கட்டுக்குள் வந்தது. இதனால் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பசிபிக் பிராந்தியத்திலுள்ள வேறு எந்த நாடுகளையும் விட வேகமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று.

தைவான்

சீனாவின் மேற்பார்வையில் உள்ள நாடு என்பதைத் தாண்டி நோய்த்தொற்றை வேகமாக கண்டுபிடித்து 441 நோயாளிகள், 7 இறப்புகளோடு நாட்டை பாதுகாப்பான நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். ட்சை இன்க் வென்னின் திறமையான வழிகாட்டுதலில் நாடு பாதுகாப்பாக உள்ளது.

பொதுமுடக்கம் அறிவிக்கப்படாமலேயே தைவான் நோய்த்தொற்றை எளிதாக கடந்துவந்துவிட்டது பல நாடுகளுக்கும் ஆச்சரியமாக உள்ளது. பிறநாடுகள் பெருந்தொற்றை தடுக்க மார்ச் மாதம் முயன்றன. ஆனால் தைவான் கடந்த ஆண்டு டிசம்பர் 31 முதலே முயன்று, மக்களின் உயிர்பலியைத் தடுத்து மக்களைக் காப்பாற்றுவதில் நம்பர் 1 நாடாக மாறியுள்ளது.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்