தாலிபான்கள் சீக்கியர்களை மோசமாக நடத்தவில்லை! எழுத்தாளர் அமர்தீப் சிங்
இந்துஸ்தான் டைம்ஸ் |
அமர்தீப் சிங், எழுத்தாளர், சிங்கப்பூர்.
2014ஆம் ஆண்டு தனது அலுவலகப்
பணியை அமர்தீப் கைவிட்டார். சீக்கிய மதம் பரவியுள்ள அனைத்து நாடுகளிலும் பயணம் செய்து
கிடைக்கும் தகவல்களை ஆவணப்படுத்தி வருகிறார். இவ்வகையில் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.
சவுதி அரேபியா, ஈராக், ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு
பயணித்து தன் அனுபவங்களை திரைப்படமாகவும் உருவாக்க முயன்று வருகிறார். இச்சமயத்தில்
காபூலில் உள்ள குருத்துவாரா தீவிரவாதிகளில் தாக்குதலுக்கு ஆட்பட்டது. ஆப்கானிஸ்தானில்
கடந்த நாற்பது ஆண்டுகளாக எப்படி சீக்கியர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள்
என்பதை நம்மிடம் பேசினார்.
இந்தியாவில் அமலாகியுள்ள குடியுரிமைச்சட்டம் பற்றி
என்ன நினைக்கிறீர்கள்?
நான் இந்த சட்டம் பற்றிக்
கேட்டதும் ஆப்கானிஸ்தானிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு இப்போதாவது நீதி கிடைத்ததே என்று
நினைத்தேன். ஆனால் பிறகுதான் அந்த சட்டத்திலுள்ள பல்வேறு சிக்கலான அடுக்குகளை உணர்ந்தேன்.
இந்தியாவுக்கு வெளியே உள்ள சிறுபான்மை மக்களை அதிக ஆரவாரம் இல்லாமல் இந்தியாவுக்கு
அழைத்துவர இந்த சட்டம் உதவும் என நம்புகிறேன்.
நீங்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஆப்கானிஸ்தானிலுள்ள
குரு ஹர் ராய் குருத்துவாராவிற்கு சென்றீர்கள். அண்மையில் அதனை சிலர் வெடிகுண்டு உடலில்
கட்டி வெடிக்க வைத்து தகர்க்க முயன்றிருக்கிறார்கள். இந்த சம்பவத்தை எப்படி உணர்கிறீர்கள்.
பத்தாண்டுகளுக்கு முன்னர்
ஞாயிற்றுக்கிழமைகளில் முஸ்லீம் பாடகர்களைக் கொண்டு இங்கு பல்வேறு இசைக்கச்சேரிகள் நடத்தப்பட்டுள்ளன.
கீர்த்தனைகள் பாடப்பட்டுள்ளன. ரஷ்யா ஆப்கானிஸ்தானில் நுழைந்து தாக்குதல் நடத்திய பிறகு
இங்கிருந்த மதங்களுக்கான இசைவு முழுமையாக அழிந்துவிட்டது. அஹ்மத் ஷா மஸ்தூத் இந்த குருத்துவாராவில்
தங்கியிருந்ததாக கூறப்பட்டு வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பின்னர், இந்த கோவிலில்
முஸ்லீம்கள் பங்குகொண்டு கீர்த்தனைகளைப் பாடுவது முழுமையாக நின்று போய்விட்டது. ரஷ்யாவில்
தாக்குதல் நடந்தபோது இந்துக்களும், சீக்கியர்களுமாக இங்கிருந்த நானாபந்திகளின் எண்ணிக்கை
2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இப்போது இந்த எண்ணிக்கை 850 ஆக சுருங்கிவிட்டது. அண்மையில்
நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 25 பேர் பலியாகிவிட்டனர். பிற மதங்களுக்கு இடையிலான சகிப்புத்தன்மையும்
நம்பிக்கையும் இப்போது குறைந்துவிட்டது. இதனால் நீங்கள் ஆப்கானிஸ்தான் சென்றால் கூட
பிறருக்கு எங்கு செல்லவிருக்கிறீர்கள் என்ற பயணத்திட்டத்தை சொல்ல வேண்டாம் என பலரும்
எச்சரிக்கிறார்கள். இது உலகத்திற்கு நாம் சொல்லும் மோசமான செய்தி ஆகும்.
தாலிபான்கள் இங்கு ஆட்சி செய்யும்போது சீக்கியர்களின்
நிலைமை எப்படி இருந்தது? அமெரிக்கர்கள் இங்கிருந்து வெளியேறிய பிறகு, தாலிபான்கள் இங்கு
ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதே?
சிறுபான்மையினர் எந்த நாட்டில்
இருந்தாலும் அவர்கள் நலமுடன் வாழ முடியாது. நிறைய நெருக்கடிகளை அவர்கள் சந்தித்தே ஆகவேண்டும்.
இதன் அர்த்தம் முழு சமூகமும் சிறுபான்மையினருக்கு எதிராக இருக்கிறது என்று அர்த்தமில்லை.
தாலிபான்கள் உருவ வழிபாடுகளை செய்வதில்லை என்றபோதும் அவர்கள் சீக்கியர்களை இழிவாக நடத்தவில்லை.
ஆனால் இன்று தாலிபான்கள் என்றாலே மோசமான அனைத்து விஷயங்களும் உள்ளே இழுக்கப்படுகின்றன.
தவறான அபிப்ராயங்களை சொல்லுகின்றனர். குருத்துவாராவில் தாக்குதல் நடத்தியது ஐஎஸ்ஐஎஸ்
தீவிரவாதிகள் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்கள் சீக்கியர்களை எப்படி நடத்துகிறார்கள்?
நாங்கள் சட்டங்களே இல்லாத
நிலங்கள் வழியாக பயணித்தோம். தாலிபான்கள் சிலர் எங்களை நோக்கி சுட்டதில் ஒருவர் காயமுற்றார்.
காயமுற்றவருக்கு உதவ அந்த கிராமத்து மக்களே திரண்டு வந்தனர். நான் சீக்கியன் என்பதால்
தாக்குதல் நடத்தப்படாது என்பதை நம்புகிறேன். காரணம், இங்கு முஸ்லீம்களே மற்றொரு பிரிவைச்
சேர்ந்த சக முஸ்லீம்களை கொன்று போடுகின்றனர். நாங்கள் குர்ரம் கோஸ்ட் பகுதிக்குச் சென்றோம்.
அங்குள்ள குருத்துவாரா கைவிடப்பட்டு கிடந்தது. அங்கு இந்துகள், சீக்கியர்கள் என யாருமில்லை.
எங்களை வரவேற்ற கலேடா என்ற பெண் மதிய உணவை எங்களுக்கு அளித்தார். அவர்கள் அனைவரும்
ஏகே 47 துப்பாக்கிகளில் கைவைத்துதான் அங்கே நின்றிருந்தனர். நாங்கள் அங்கே சில பகுதிகளை
படம்பிடித்தோம். அங்கிருந்து கிளம்பும்போது முஸ்லீம் ஒருவர் என்னைக் கட்டிப்பிடித்து,
சீக்கியர்கள் திரும்ப இங்கு வந்து வாழ வேண்டும். குருத்துவாராவை சீர்திருத்தவேண்டும்
என்று கேட்டுக்கொண்டார். எனக்கு அவரின் பேச்சு நெகிழ்ச்சியைத் தந்தது
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா
ஆங்கிலத்தில்: மணிமுக்தா எஸ் சர்மா
கருத்துகள்
கருத்துரையிடுக