ஆரோக்கிய சேது செயலில் தகவல் கசிவு ஏற்பட வாய்ப்பு இல்லை! - செயலிக்குழு தலைவர் அர்னாப் குமார்
ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது
மென்பொருள் குழு தலைவர், அர்னாப் குமார்.
எலியட் ஆல்டர்சன் என்ற ஹேக்கர், உங்களது ஆப்பை ஹேக் செய்து தகவல்களைத் திருட முடியும் என்ற நிரூபித்துள்ளாரே? அந்த பிரச்னைகளை சரி செய்துவிட்டீர்களா?
நாங்கள் மென்பொருள் ஆய்வாளர்களுக்கு வழங்கியது பீட்டா வெர்ஷனைத்தான். பாதுகாப்பு பற்றிய பிரச்னைகளை நாங்கள் இப்போது ஏறத்தாழ தீர்த்துவிட்டோம். செயலியை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் முன்னரே நாங்கள் பாதுகாப்பு பிரச்னையை சரி செய்துவிட்டோம். நீங்கள் கூறும் தகவல் கசிவு என்பது நடக்கவில்லை. ஐஐடி மெட்ராஸ் தலைமையிலான குழு இந்த மென்பொருளை தயாரித்து மேம்படுத்தியுள்ளது. இதில் எந்தவித தகவல் கசிவையும், தகவல் கொள்ளையையும் நாங்கள் எதிர்கொள்ளவில்லை.
ஆரோக்கிய சேது செயலியை மேம்படுத்த எவ்ளவு காலம் பிடித்தது?
நாங்கள் இந்த செயலிக்கான வடிவமைப்பை மார்ச்சில் தொடங்கினோம். அறுபதிற்கும் மேற்பட்டோர் உழைத்த இந்த செயலி ஏப்ரல் மாதம் 2 அன்று வெளியிடப்பட்டுவிட்டது.
கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு உட்பட்ட மக்களை இதன்மூலம் அறிய முடியுமா?
நாங்கள் தொழில்நுட்பத்தின் மூலம் நோய் பாதிப்பிற்கு உட்பட்ட இடங்கள், பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி தகவல்களை எளிதாக பிறருக்கு வழங்க முடியும். இம்முறையில் பத்தாயிரம் மக்களுக்கும் மேல் சென்று சேர முடியும் என நம்புகிறோம்.
இந்த ஆப் மூலம் மக்களைக் கண்காணிக்க முடியும் என்று கூறுகிறார்களே? இந்த செயலி மூலம் பெறும் தகவல்களை நீங்கள் என்ன செய்வீர்கள்?
நாங்கள் ப்ளூடூத் மூலம் இந்த செயலியை இயக்க வழி செய்திருக்கிறோம். இதனை பயன்படுத்துபவர்களுக்கு தனி டிஜிட்டல் ஐடியை வழங்குகிறோம். இதன்மூலம் ஒருவர் தனக்கு தேவைப்படும்போது தனது தகவல்களை அணுக முடியும். இந்த ஐடி பிறருக்குப் பகிரப்படாது. நாங்கள் தேவைப்படும் தகவல்கள் செயலி மூலம் போனில் பதியப்படும். கோவிட் -19 காலத்தில் இந்த தகவல்களைப் பயன்படுத்திக்கொள்வோம். பிற சமயங்களில் தேவையென்றால் இத்தகவல்களை நாங்கள் பெறுவோம். இதிலுள்ள இடம் அறியும் வசதி எப்போதும் உங்களைக் கண்காணிக்காது. உங்களுக்கு நோய்த்தொற்று இருந்தால், உங்களைப் பற்றிய தகவல்கள் அறுபது நாட்களுக்கு சர்வரில் இருக்கும். இல்லையென்றால் 45 நாட்களுக்கு சர்வரில் இருக்கும். பின்னர் இத்தகவல்கள் அழிக்கப்பட்டு விடும். இந்த செயலி முழுக்க கோவிட் -19 தொற்றுக்கான தற்காலிக தீர்வாகும். பின்னர் இதனை நீங்கள் பயன்படுத்த வேண்டியதில்லை.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையே 30 சதவீதம்தான். பிறகு எப்படி அனைத்து மக்களும் இதனைப் பயன்படுத்த முடியும்? இந்தியர்கள் இந்த செயலியை 60 சதவீதம் பேர் பயன்படுத்தினால் மட்டுமே சிறப்பான செயல்பாடாக இருக்கும் என்கிறார்களே?
இந்த செயலி மிகவும் எளிமையான சிறப்பான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. இதனை இந்தியர்கள் தங்களது போனில் நிறுவி பயன்படுத்தினால் அதன் பயன்பாட்டை எளிதாக உணர முடியும்.
நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா மே10,2020
ஆங்கிலத்தில்: ஹிமான்ஷி தவான்
கருத்துகள்
கருத்துரையிடுக