ஆரோக்கிய சேது செயலியின் குறைபாடுகள், இந்தியர்களை பெரிதும் பாதிக்கும்! - மிஷி சௌத்ரி

See the source image
மிஷி சௌத்ரி





மொழிபெயர்ப்பு நேர்காணல்

மிஷி சௌத்ரி, மென்பொருள் சுதந்திரசட்ட அமைப்பு

மக்களின் தொடர்புகளைக் கண்காணிக்கும் செயலிகள்தான், பெருந்தொற்று பிரச்னையைத் தீர்க்கும் என்று நினைக்கிறீர்களா?

அடிப்படையில் ஒருவரின் தொடர்பு எண்களை கண்காணிப்பது என்பது, அவரின் நோய் பாதிப்பைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்குத்தான். இதன்மூலம் குறிப்பிட்ட நபரால் மற்றவர்களுக்கு நோய் பரவாது. ஆனால் இந்த தொடர்பு முகவரிகளை கண்காணிக்கும் செயலி என்பது பெரிய மந்திரக்கோல் செயல்பாடு அல்ல. இதன்மூலம் நமக்ககு இயல்பு வாழ்க்கை திரும்ப கிடைத்துவிடும் என்று கூறமுடியாது. இந்த ஆப் மூலம் நோய் எதிர்ப்பு குறிப்பிட்ட நிலையில் இருக்கும். ஆனால் இந்த செயலி உங்களுக்கு பூரண குணத்தை தரும் என்று எதிர்பார்க்காதீர்கள். தகவல்சுதந்திரம் இல்லாத இதுபோன்ற செயலிகள் நம் தகவல்களை பிறருக்கு திருடுவதற்கு வாய்ப்பாக அமையும். இதைவிட நேரடியாக மக்களை சமூக இடைவெளி கடைபிடிப்பது, நோய்தடுப்பு செயல்பாடுகளை செய்யலாம். சோதனைகளை செய்யலாம். இவற்றை குறிப்பிட்ட அளவுதான் செய்யமுடியும் என்பதால் அரசு செயலி முறையைக் கையில் எடுத்துள்ளது. ஆனால் இந்த முறை இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள நாட்டில் தவறான, வதந்திகளைப் பரப்புவதற்குத்தான் உதவும்.

சரி. நீங்கள் கூறியபடியே வைத்துக்கொள்ளலாம். பெருந்தொற்று பரவும் வேளையில் நாம் எப்படி தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வது?

 

நீங்கள் கூறுவது சரிதான். அதற்காக பெருந்தொற்று சமயத்தில் மக்களுக்கு தங்களின் அந்தரங்க சுதந்திரத்தை தேர்ந்தெடுக்க வாய்ப்புகளை மறுப்பது ஜனநாயகம் ஆகாது. நீங்கள் ஆரோக்கிய சேது போன்ற பல்வேறு குளறுபடிகளைக் கொண்ட ஆப்பைப் பயன்படுத்தினால், அதன் நோக்கத்தை விட அதிக சேதத்தையே மக்களுக்கு ஏற்படுத்தும்.

இந்த பாதிப்பிலிருந்து நாம் எப்படி தப்புவது?

ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் ஆப்களை உருவாக்கியுள்ளன. ஆனால் மக்களின் தனிநபர் சுதந்திரத்திற்கான விதிகளை கவனமுடன் உருவாக்கியுள்ளன. அமெரிக்காவில் கூட எம்ஐடி நிறுவனம் உருவாக்கிய பாதுகாப்பு விதிகளை கடைபிடித்துவருகிறார்கள். இதை ஏன் இந்தியா முன்னுதாரணமாக கொள்ளக்கூடாது?

ஆரோக்கிய சேது அனைத்து மக்களுக்கும் கட்டாயம் என்று அரசு சொல்லவில்லையே?

இப்போது அரசு இப்படி சொன்னாலும், விரைவில் ஆதார் கார்டு போன்ற நிலைக்கு இந்த ஆப்பை கொண்டு வருவார்கள். இதனை உச்சநீதிமன்றம் கூட கட்டுப்படுத்த முடியாது. அனைத்து மக்களும் கட்டாயம் இந்த ஆப்பை பயன்படுத்தவேண்டும் என்று கூறுவார்கள். இந்த ஆப்பில் வெளிப்படைத்தன்மை என்பதே கிடையாது. இதை எப்படி அனைத்து மக்களும் பயன்படுத்தவேண்டும் என அரசு சொல்ல முடியும்?

இதில் உள்ள பிரச்னை என்ன?

ஆப் வழியாக நாம் உள்ள இடம் பற்றிய, நம்மைப் பற்றிய தகவல்கள் அரசுக்கு செல்கிறது. இந்த தகவல்களை அரசு அமைப்புகள் எடுத்து பயன்படுத்த முடியும். இதில் யாரேனும் மாறுதல்களை செய்து தவறான செய்திகள் அரசுக்கு சென்றுவிட்டாலும் அரசு இதற்கு எப்பொறுப்பையும் ஏற்காது. திறமூல பயன்பாட்டு கட்டளைகளைப் பயன்படுத்தி இந்த செயலியை அரசு குழுவினர் உருவாக்கியுள்ளனர். இதிலுள்ள பல்வேறு குறைபாடுகளை திருத்தி, திறமூல பயன்பாட்டு குழுவினர் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதில் உள்ள ஆபத்தான அம்சம், செயலி மூலம் ஏற்படும் விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்பதுதான். அரசு 45 நாட்களுக்குள் தன்னிடமுள்ள தகவல்களை அழித்துவிடுவோம் என்று சொன்னாலும் அது சாத்தியமில்லை.

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா, மே 11, 2020

ஆங்கிலத்தில்: அனாம் அஜ்மல் 

கருத்துகள்