கொரோனாவைத் தடுக்க மத்திய அரசின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை! - சிக்கிம் முதல்வர் பிரேம்சிங்


Sikkim CM Prem Singh Tamang wins from Poklok Kamrang seat, BJP ...
சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமங்


பிரேம்சிங் தமங், சிக்கிம் மாநில முதல்வர்

உங்கள் மாநிலத்தில் ஒருவர் கூட கோவிட் -19 நோய்தொற்றால் பாதிக்கப்படவில்லையே?

சீனாவில் வைரஸ் பரவுகிறது என்ற தகவல் கிடைத்ததும் நாங்கள் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டோம். மத்திய அரசின் அறிவுறுத்தலுக்காக நாங்கள் காத்திருக்கவில்லை. பூடான், நேபாளம், சீனா பல்வேறு நாடுகளின் எல்லைகளில் நாங்கள் பயணிகளை சோதிக்க தொடங்கினோம். மார்ச் ஐந்து அன்று, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தோம். மார்ச் 17ஆம் தேதி உள்ளூர், வெளியூர் சுற்றுலாக்களை முழுக்க நிறுத்திவிட்டோம். இதனால் தங்கும் விடுதி நடத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டவர். ஆனால் விரைவிலேயே கோவிட் -19 பாதிப்பு தெரிந்து நாங்கள் சரியான நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராட்டினர். இந்த ஆண்டு முழுமைக்கும் எல்லைகளை திறப்பதில்லை என முடிவெடுத்துள்ளோம். சிற்சில வணிக நடவடிக்கைகளை மட்டும் அனுமதித்துள்ளோம்.

வடகிழக்கு மாநிலங்களில் நோய்த்தொற்று இல்லாமல் இருந்து திடீரென கூடியிருக்கிறது. இதற்கு காரணம் என்ன?

எங்கள் மாநிலத்தில் உள்ள மாணவர்கள் 2 ஆயிரம் வெளியே உள்ள மாநிலங்களுக்கு படிக்க சென்றுள்ளனர். அவர்களை நாங்கள் அங்கேயே தங்க சொல்லிவிட்டோம். அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம். வடகிழக்கு மாநிலங்களில் முதலில் நோய்த்தொற்று இல்லை. பின்னர் பரவியதற்கு காரணம் வெளியிலிருந்து தங்கள் மாநிலங்களுக்கு நோய் அறிகுறிகளுடன் மக்கள் திரும்பியதுதான். எங்கள் மாநிலத்திற்கு திரும்ப விருப்பம் தெரிவித்த மாணவர்களை நான் மதிக்கிறேன். அவர்களை சரியான நேரம் வரும்போது கூட்டி வர நினைத்துள்ளேன். இப்போது பல்வேறு மாநிலங்களில் உள்ளவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாயும், வேலை செய்து வரும் சிக்கிம் குடிமகன்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும். மருத்துவசிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும் அளித்து வருகிறோம், பிற மாநில இடம்பெயர்ந்த வந்த தொழிலாளர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாயை வழங்குகிறோம். சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக 3 ஆயிரம், சுகாதார பணியாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய்களை வழங்கியுள்ளோம்.

நோய்த்தொற்று குறைவாக இருப்பதற்கு சிக்கிம் மக்கள் கட்டுப்பாடுடன் நடந்துகொண்டதே காரணம். அரசின் விதிமுறைகளை மக்கள் மீறவில்லை.

பச்சை மண்டலத்தில் உள்ள பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்புமா?

மாநிலத்திற்கு வெளியே உள்ள எங்கள் மக்களில் 3500 பேர் உள்ளே வர விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களை நாங்கள் பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்க உள்ளோம். இவர்கள் 14 நாட்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். அறிகுறி உள்ளவர்கள் சிவப்புமண்டலத்தில்

தனிமைப்படுத்தலில் 21 நாட்கள் வைக்கப்படுவார்கள். அவர்களின் அரசின் வசதியைப் பயன்படுத்தலாம். அல்லது தனியாக இருப்பதற்கான இடத்தை அவர்களே பணம் கொடுத்து தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

சுற்றுலா துறைதான் அரசுக்கு வருவாய் தரும் முக்கியமான துறை. அதனால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதா?

சுற்றுலா துறையில் பாதிப்பு இருக்கிறது. அதிலும் மருந்து துறையிலும் சிக்கிம் மாநிலத்திற்கு வருமானம் கிடைக்கிறது. சுற்றுலாவுக்கான மார்ச் – ஜூன் சீசன் முடிந்துவிட்டது. அடுத்து அக்டோபர் – நவம்பர் சீசன் உள்ளது. ஆனாலும் கூட நோய்த்தொற்று காரணமாக மக்கள் இங்கு வருவார்களா என்று தெரியவில்லை. நாங்கள் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான குழுவை அமைத்துள்ளோம். அவர்களின் பரிந்துரைப்படி செலவுகளைக் குறைத்து பொருளாதார சிக்கலில் இருந்து விரைவில் மீள்வோம்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஆங்கிலத்தில்: ஈஷா ராய்

 

 

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்