சைக்கோ வில்லனுக்கு எதிராக துடித்தெழும் பீச்சாங்கை! - சாவ்யசாச்சி



Savyasachi movie review: Naga Chaitanya, Madhavan-starrer is a ...
ஃபர்ஸ்ட் போஸ்ட்










சாவ்யசாச்சி - தெலுங்கு

இயக்கம் சந்து மாண்டெட்டி

ஒளிப்பதிவு யுவ்ராஜ்

இசை  எம்எம் கீரவாணி


நம் உடலிலுள்ள இயக்கங்களை மூளை கட்டுப்படுத்துகிறது. ஆனால் ஒருவரின் இடது கை தன்னிச்சையாக செயல்பட்டால் எப்படியிருக்கும்? வேனிஷிங் ட்வின் சிண்ட்ரோம் என்ற மருத்துவ அறிவியல் உண்மை அடிப்படையில் இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். தமிழில் பீச்சாங்கை என்ற படம் முன்னமே வந்திருக்கிறது. அந்தப்படம் காமெடி என்றால் இந்த படம் படு சீரியசாக செல்கிறது.

விக்ரம் ஆதித்யா விளம்பரப்பட இயக்குநர். அவர் தன் அக்காவின் வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். அப்போது சித்ரா என்பவரை தன் வேலை தொடர்பாக சந்திக்கிறார். அவரை விக்ரம் தன் கல்லூரி காலத்தில் காதலித்த நினைவுகள் வருகிறது. ஆனால் சித்ரா, காதலை ரெனியூவல் செய்யும் விக்ரமின் முயற்சிகளை புறக்கணிக்கிறார். அமெரிக்காவுக்கு விளம்பரப்படம் தொடர்பாக சென்றுவிட்டு வரும்போது காதல் சீராகிறது. அவரின் அக்கா குடும்பம் சிதைந்து விடுகிறது. அவரது அக்கா மகளை ஒருவன் கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டுகிறான். வீட்டில் கேஸ் வெடித்ததில்  அவரின் மாமா இறந்துவிடுகிறார். அக்கா, மருத்துவமனையில் நினைவிழந்து கிடக்கிறார். அக்கா மகள் மகாலஷ்மி இறந்துவிட்டதாக அரசு தரப்பில் சான்றிதழ் ரெடி செய்துவிடுகிறார்கள். அது தவறு என்று விக்ரம் வாதிட்டு சில ஆதாரங்களை கொடுக்க முயல, அரசு மருத்துவர் கொல்லப்படுகிறார். விக்ரம், மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன, யார் அக்கா குடும்பத்தை பலிவாங்க முயற்சிப்பது என தேடுவதுதான் கதை. 


ஆஹா

நாக சைதன்யா எப்போதும் போல சிரித்துக்கொண்டே நிற்காமல் நடித்திருக்கிறார். அந்த வகையில் பரவாயில்லை. நிதி அகர்வால் ஃபேன்சி டிரெஸ் போட்டுக்கொண்டு பாடலுக்கு ஆடவென கால்ஷீட்  கேட்டு நடிக்க வைத்திருக்கிறார்கள். வெண்ணிலா கிஷோர் சில காட்சிகள் சிரிக்க வைக்கிறார்.

ஐயையோ

வைல்டு டேல்ஸ் படத்தின் ஆரம்ப காட்சியை அப்படியே திருடியிருக்கிறார்கள். இடதுகை தன்னியல்பாக செயல்படுகிறது என்றால், அதற்கான உருப்படியான காட்சிகள் அவரை விபத்தில் இருந்து காப்பாற்றுவதும், ஆக்ஷன் காட்சிகளில் அடிக்கவும், உதைக்கவும்தான் பயன்படுகிறது. பிற நேரங்களில் பெண்கள் புட்டங்களை தட்டிக்கொண்டிருக்கிறது. இயக்குநரின் கிரியேட்டிவிட்டி வியக்க வைக்கிறது.

பீச்சாங்கையை புறக்கணிக்காதீர்கள்

கோமாளிமேடை டீம்




கருத்துகள்