இஸ்லாமியர்கள் மீது இந்திய அரசு எவ்வித பாரபட்சமும் காட்டவில்லை - முக்தார் அப்பாஸ் நக்வி

முக்தார் அப்பாஸ் நக்வி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்

அரசு பல்வேறு மத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமூக இடைவெளியை கடைபிடிக்க வற்புறுத்தி வருகிறது. இதற்கு அவர்களின் எதிர்வினை என்ன?

ரம்ஜான் விழா, இஃப்தார் விருந்து ஆகியவற்றை முடிந்தவரை கூட்டமின்றி கொண்டாட முஸ்லீம் தலைவர்களிடம் வற்புறுத்தியுள்ளேன். வக்பு வாரியம், பல்வேறு மத தலைவர்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியோரோடு உரையாடி, அரசு வகுத்துள்ள விதிமுறைகள்படி செயல்பட வலியுறுத்தி விழிப்புணர்வு செய்து வருகிறோம். அரசு விதிமுறைகளை கடைபிடிக்காதபோது அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கு, சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளை நான் பல்வேறு மத தலைவர்களிடம் பேசியுள்ளேன்.

தப்லிக் ஜமாத் மாநாடு பற்றி உங்களுடைய கட்சியில் உள்ளவர்களே வெறுப்புவாத செய்திகளை பரப்புகிறார்களே?

கட்சியில் உள்ளவர்கள் சமூக இசைவை, ஒற்றுமையை கலைக்கும் விதமாக செயல்பட்டால் அவர்கள் மீது கட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். இதில் எந்த சமரசமும் இல்லை.

தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் நிலைமையை புரிந்துகொள்ளாமல் செய்த செயலால் நோய் பாதிப்பு தீவிரமாகியுள்ளது. இதற்கான அத்தனை உறுப்பினர்கள் மீதும் நடவடிக்க எடுக்க முடியாது. இது அந்த மாநாட்டின் தலைவர் செய்த தவறு. இஸ்லாமியர்கள் மீது புகார்களைத் தெரிவித்து பேசுவது பெருந்தொற்றை நாம் எதிர்கொண்டு அழிப்பதில் சுணக்கத்தை ஏற்படுத்தும்.

வளைகுடா நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியா, இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதாக கூறியிருக்கிறார்களே?

இந்தியாவில் சிறுபான்மையினர் மீது சமூக, பொருளாதார, மேம்பாட்டு விவகாரங்களில் எந்த வித புறக்கணிப்பும் நடைபெறவில்லை. அவர்கள் பல்வேறு இடங்களிலும் கௌரவமாகவும், கண்ணியமாகவும்தான் நடத்தப்படுகிறார்கள்.

சில தனியார் அமைப்புகள், தனிநபர்கள் குறிப்பிட்ட அஜெண்டா படி திட்டமிட்டு வெறுப்புவாதங்களை பரப்புகின்றனர். இந்திய அரசியல் சட்ட அளவிலும், செயல்பாட்டு அளவிலும் சிறுபான்மையினர் மீது புறக்கணிப்பை செய்யவில்லை.

மத்திய அரசின் ஏழைகளுக்கு வீடுகட்டித் தரும் திட்டத்தில் பயன் பெற்றவர்களில் சிறுபான்மையினரின் சதவீதம் 31 ஆகும். ஆறு லட்சம் குடும்பங்களுக்கு மின்சார வசதியை இந்திய அரசு வழங்கியுள்ளது. இதில் 39 சதவீதம் பேர் சிறுபான்மையினர்தான். அடிப்படை வசதிகள், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிலும் கூட இந்திய அரசு அனைத்து இனக்குழுக்களையும், மக்களையும் சமமாகவே நடத்துகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த மத சுதந்திர அமைப்பு சிறுபான்மையினர் மீது இந்தியா வன்முறைத்தாக்குதல்களை நடத்துவதாக கருத்து தெரிவித்திருக்கிறதே?

 எந்த நாட்டு அரசும் தன் தாய்நாட்டு மக்களுக்கு எதிராக அதனுடைய நிலத்தில் போரை நடத்தாது. சில தனிப்பட்ட பிரிவினை அமைப்புகள் லாபம் சம்பாதிக்க இதுபோன்ற வன்முறைகளில் இறங்கி வருகின்றன. இது தவறான செயல்பாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிரதமர் மோடியில் தலைமையிலான ஆட்சியில் உள்ள இணக்கமான தன்மையை அழிக்க சிலர் செய்யும் முயற்சி இது.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஆங்கிலத்தில்: சனா சஹில்

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்