கோவிட் -19 நோய்த்தொற்றால் மும்பையில் குற்றங்கள் குறைந்துவிட்டன! - மும்பை கமிஷனர் பரம்பீர் சிங்
மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர்
சிங்
நகரில் குற்றவாளிகளைப் பிடிக்கும் உங்களது நோக்கம்
இப்போது மாறியுள்ளது போல உள்ளதே?
26- 11 காலகட்டத்தில் தீவிரவாதிகளின்
தாக்குதல், அவர்களை எப்படி முடக்குவது என்பதை யோசித்தோம். கோவிட்-19 பிரச்னையைப் பொறுத்தவரை
எதிரியை நம்மால் அடையாளம் காணமுடியவில்லை. எனவே தினசரி சானிடைசர், முக கவசங்களை காவல்துறையினருக்கு
வழங்குவதுமாக பணி செய்கிறோம். இதுவரை பணியின்போது பலியான காவல்துறையினரின் குடும்பங்களுக்கு
ஐம்பது லட்சம் ரூபாய் வழங்கியுள்ளோம். மேலும் காவல்துறை பவுண்டேஷன் மூலம் பத்து லட்ச
ரூபாய் அளித்துள்ளோம். இது மட்டுமன்றி ஆக்ஸிஸ் வங்கியின் ஐந்து லட்சரூபாய் காப்பீடும்
வழங்கப்படுகிறது.
காவல்துறையினர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா?
இரண்டு இணை கமிஷனர்கள், இரண்டு
கூடுதல் கமிஷனர்கள் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3600 காவல்துறையினர்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 900 பேருக்கு கோவிட் -19 நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.
இதில் 250 பேர் குணமாகி பணிக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் குணமாகி வரும் சதவீதம் அதிகரித்துள்ளது.
உங்களுக்கு வயது 58 ஆகிறது. எப்படி உடலைப் பராமரிக்கிறீர்கள்?
நான் தினசரி உடற்பயிற்சி செய்து
வருகிறேன். ஹைட்ரோகுளோரோக்சின் மருந்தை உட்கொண்டு வருகிறேன். முக கவசம் பயன்படுத்துகிறேன்.
ஊட்டச்சத்துக்களைக் கொண்ட சாப்பாடும், சப்ளிமெண்டுகளையும் எடுத்துக்கொள்கிறேன்.
காவல்துறையினருக்கு படுக்கை வசதிகள் இல்லையென்று
கூறப்பட்டதே?
நோய்த்தொற்று பாதிப்பு உறுதி
செய்யப்பட்டால் காவல்துறையினருக்கு பத்தாயிரம் ரூபாய் உடனடியாக வழங்கப்படும். பின்னர்,
சிகிச்சைக்கு பணமில்லாத நிலையில் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயை அளிக்கிறோம். பிஎம்சி
கமிஷனர் சஹால் உதவியுடன் நாங்கள் காவல்துறைக்கான ஆம்புலன்ஸ் மற்றும் படுக்கை வசதிகளை
உருவாக்கியுள்ளோம்.
நோய்பாதிப்பு உள்ள இடங்கள், தொழிலாளர்களை வாகனங்களில் அனுப்பி
வைக்கும் பணி ஆகியவற்றை செய்து வருகிறீர்கள் என கேள்விப்பட்டோம்.
நாங்கள் எங்களுக்கு விதிக்கப்பட்ட
பணிகளைத் தாண்டி ஏராளமான பணிகளைச் செய்து வருகிறோம். எங்களது அதிகாரிகள் மக்களுக்கு
தேவையான பொருட்கள் சரியானமுறையில் கிடைப்பதற்கான விஷயங்களையும் ஒருங்கிணைத்து வருகிறார்கள்.
நகரை விட்டு லட்சக்கணக்கிலான தொழிலாளர்கள் வெளியேறியுள்ளார்களே?
மூன்று லட்சம் பேர் இதுவரை
ரயில் மூலம் வெளியேறியுள்ளனர். அடுத்து தங்களது ஊர்களுக்குச் செல்ல ஆறு லட்சம் பேர்
பதிவு செய்து காத்திருக்கின்றனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேருந்து, தனியார்
வாகனங்களில் நகரை விட்டு வெளியேற உள்ளனர்.
மும்பை மக்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
மக்கள் எங்களது அறிவுறுத்தல்களைக்
கேட்டு நடக்கிறார்கள். தினசரி நகரை விட்டு வெளியே செல்ல ஆயிரம் பாஸ்களை வழங்கியுள்ளோம்.
நகரை விட்டு வெளியே செல்ல இரண்டாயிரம் பாஸ்களும், உள்ளுக்குள் செல்ல 3 ஆயிரம் பாஸ்களையும்
வழங்கியுள்ளோம்.
பொதுமுடக்க காலத்தை எப்படி பார்க்கிறீர்கள்
போக்குவரத்து நெரிசல் இல்லை.
குற்றங்கள் பெருமளவு கட்டுக்குள் வந்துவிட்டன. நிறைய விஷயங்கள் மாறியுள்ளன.
இதில் கற்றுக்கொள்வதற்கான நிறைய
விஷயங்கள் உண்டு.
நன்றி: மும்பை மிரர்
கருத்துகள்
கருத்துரையிடுக