கிரிக்கெட்டை விட மனித உயிர்களைக் காப்பதே முக்கியம்! - சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்

World Cup: The Harbhajan Singh conundrum
dna









ஹர்பஜன்சிங், விளையாட்டு வீரர்



பந்து வீச்சாளர்கள் பந்துகளை எச்சில், வியர்வையை பயன்படுத்தி துடைக்க கூடாது என ஐசிசி தடைகளைக் கொண்டுவந்தால் என்னாகும்?


ஐசிசி அமைப்பு அப்படி ஒரு தடையை பெருந்தொற்று காரணமாக கொண்டுவரக்கூடும். ஆனால் இந்த விதி அகற்றப்படாதபோது கிரிக்கெட் முழுமையாக பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக மாறிவிடும். அப்போது விளையாட்டில் பந்துவீச்சாளர்கள் சாதாரண மெஷினாகவே இருப்பார்கள். எச்சில், வியர்வை ஆகியவற்றை பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தாதபோது பந்து ஸ்விங் ஆகாது. ஐசிசியின் தடை விளையாட்டின் தன்மையை முழுமையாகவே மாற்றக்கூடியது.


இந்த ஆண்டு ஐபிஎல் விளையாட்டில் வெளிநாட்டு வீரர்கள் விளையாட வாய்ப்பு உள்ளதா?


பெருந்தொற்று காலத்தில் ஐபிஎல் விளையாட்டை விட மனிதர்களின் உயிரே முக்கியம். பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் இந்த ஆண்டு நடைபெறாமல் நின்றுபோயிருக்கிறது. இனியும் கூட வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு விளையாட வருவது சந்தேகமாக உள்ளது. காரணம், நோய்த்தொற்று பயம்தான். இதில் இந்திய அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.


சிக்கலான காலகட்டம் என்றாலும் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியே எடுக்காமல் இருந்தால் நிலைமை சீராகியதும் எப்படி விளையாட முடியும்?


இந்திய அணிக்கு சிறப்பான பயிற்சியாளர்கள் கிடைத்துள்ளனர். எனவே, அவர்கள் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர் வரையில் செய்யவேண்டிய பயிற்சிகளை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் விராட் கோலி, ரோகித் சர்மா போன்றோர் இதற்கு வழிகாட்டுவதற்கு உள்ளனர். இதனால் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கினாலும் பிரச்னையில்லை. வீரர்கள் முழுத்தகுதியுடன்தான் போட்டிகளில் கலந்துகொள்வார்கள்.


ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி சார்பாக விளையாட இருந்தீர்கள். இந்த நிலையில் திடீரென விளையாட்டுப்போட்டி நிறுத்தப்பட்டது எப்படி இருந்தது?


எனக்கு போட்டி நடப்பது என்பதை விட நோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்றே நினைக்கிறேன்.ஏனெனில் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க நிறையப்பேர் வருவார்கள். அந்த வகையில் நோய்த்தொற்று பாதிப்பு அதிக வாய்ப்பு உள்ளது. சில நாட்களில் முழு உலகமே தலைகீழாக மாறிவிட்டது. இப்போதைக்கு மக்களின் வாழ்க்கையைக் காப்பதுதான் முக்கியம்.


நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்


ஆங்கிலத்தில்: ஷாலினி குப்தா







கருத்துகள்