தற்போது யூடியூப் போன்ற காட்சி ஊடகங்கள்தான் வலிமையாக உள்ளன! - பாடகி ஆஷா போஸ்லே








Caricature Cartoon of Asha Bhosle by sankar - Full Image
webneel



ஆஷா போஸ்லே, இந்தி பாடகி

உங்களுக்கு 86 வயதாகிறது. இந்த வயதில் திடீரென யூடியூபில் கணக்கு தொடங்கவேண்டுமென்று எப்படி தோன்றியது?

பொதுமுடக்க காலத்தில் எனது பேரப்பிள்ளைகளுடன் நேரம் செலவிட நேர்ந்தது. எனது பேத்தி யூடியூபில் தனக்கென தனி சேனல் தொடங்கி அதில் பாடல்களைப் பாடி எடிட் செய்து பதிவிட்டு வந்தாள். அதைப்பார்த்துத்தான் எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது.

உங்களது வாழ்க்கை அனுபவங்களை நீங்கள் நூலாக எழுதாமல் யூடியூபில் சொல்லிவருகிறீர்கள். இதற்கென ஏதாவது காரணம் உண்டா?

யூடியூப் போன்ற காட்சி ஊடகத்தை எளிதாக பயன்படுத்த முடிகிறது. அனைவரும் இதனை எளிதாக பார்க்க முடியும். காட்சி ஊடகம்தான் இன்று வலிமையானதாகவும் உள்ளது. அனைவரிடமும் சென்று சேர்வதாக உள்ளது என்பதால் இதனை நான் தேர்ந்தெடுத்தேன்.

புதிய இசை, புதிய பாடல் வரிகள் மற்றும் ரீமிக்ஸ் பற்றி கருத்து என்ன?

நாம் ஒரு பாடலை கிளாசிக் என்று சொல்ல காரணம், அதன் பாடல் வரிகள் மற்றும் இசைதான். இப்போது அதனை மாற்றி, பாடல்வரிகளை போட்டு மறு உருவாக்கம் செய்வதால் அதன் இயல்பு கெடுகிறது. கிளாசிக் என்று பாடல்களை சொல்லும் பொருளே இதன் காரணமாக மாறிவிடுகிறது.

பொதுமுடக்க காலத்தை எப்படி பார்க்கிறீர்கள்

நான் இந்த காலத்தில் யோகா, மூச்சுப்பயிற்சியை தினசரி செய்து வருகிறேன். பிஎம் கேர்ஸ் நிதிக்கான பாடலை யூடிபில் பதிவேற்றி உள்ளேன். பாடல்களைப் பாடுவதற்கான பயிற்சியையும் செய்து வருகிறேன். இந்த காலத்தில் நாம் ஒருவருக்கொருவர் உதவிகளை செய்துகொண்டால் மட்டுமே இப்பிரச்னையிலிருந்து மீண்டு வரவேண்டும்.

நன்றி: இந்தியா டுடே

ஆங்கிலத்தில்: சுகானி சிங்

 


கருத்துகள்