இர்பான்கானுக்கு மாற்றாக வேறு நடிகர் யாரும் இல்லை! - இயக்குநர் சுதீர் மிஸ்ரா






Director Sudhir Mishra on why male actors don't want to work with ...
ity

 



சுதீர் மிஸ்ரா

இந்தி சினிமா இயக்குநர்

நன்றி: இந்தியா டுடே

ஆங்கிலத்தில்: ஸ்ரீவஸ்தவா நெவாடியா

பொதுமுடக்க காலத்தில் நீங்கள் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக சீரியஸ் மேன் என்ற படத்தையும். ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்காக ஹோஸ்டேஜ் இரண்டாவது பகுதியையும் எடுத்து முடித்திருக்கிறீர்கள். இதற்காக வேலை செய்வது எப்படியிருக்கிறது?

நாங்கள் வேறு காலத்தில் பணிபுரிய நேரிட்டால் சிரமமாகவே இருக்கும். இப்போது எதற்கும் கவலைப்படவேண்டியதில்லை. என்னுடைய உதவியாளர்கள் தொழில்நுட்பம் சார்ந்த நுட்பங்களை அறிந்தவர்கள். எனவே அனைத்து வேலைகளையும் எளிதாக முடித்துவிட முடிகிறது. விரைவில் ஹோஸ்டேஜஸ் தொடரை நீங்கள் இணையம் வழியாக பார்ப்பீர்கள்.

கோவிட் -19 காலம் சினிமாவை மாற்றியுள்ளதாக நினைக்கிறீர்களா?

நாம் உயிர்வாழ்வதற்கே ஆபத்துள்ள சூழ்நிலையாக வெளியுலகம் மாறியிருக்கிறது. இந்த நிலை தொடரக்கூடாது என்றே நினைக்கிறேன். நெருக்கடியான காலம் நம்மை நமக்கே அடையாளம் காட்டியிருக்கிறது. பொறுமையாக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.

நீங்கள் நடிகர் இர்பான்கானுக்கு நெருக்கமாக இருந்தவர். இப்போது நவாசுதீன் சித்திக்கை வைத்து சீரியஸ் மேன் படத்தை எடுத்திருக்கிறீர்கள். இர்பானுக்கு மாற்றாக நவாசுதீனைக் கருதுகிறீர்களா?

இர்பானுக்கு மாற்றாக இன்னொரு நடிகரை கருத முடியாது. அவர் மட்டுமல்ல யாருக்கும் யாரையும் மாற்றலாக கருத முடியாது. நவாசுதீன் தனக்குள் இருக்கும் உணர்ச்சிகளை திரையில் ஒரேமாதிரி காட்டியவரல்ல. இர்பான் நடிப்பு சார்ந்து தன்னைத் தானே வளர்த்துகொண்டவர். நான் அவரை இழந்துவிட்டேன் என்று வருந்துகிறேனா என்று கூட எனக்குத் தெரியவில்லை. அந்தளவு தன்னை வேலையில் ஈடுபடுத்திக்கொண்டு உழைத்தவர் அவர்..

நீங்கள் இயக்கிய ஹாஷரோன்... படம் வெளியாகி பதினைந்து ஆண்டுகள் ஆகிறது. அந்த படம் உங்களுக்கு என்ன நினைவை ஏற்படுத்துகிறது?

இன்று அப்படத்தைப் பார்க்கும் இளைஞர்கள், தங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாக சொல்லுகிறார்கள். இம்முறையில் படம் அமைவது முழுக்க தற்செயலான ஒன்றுதான்.


கருத்துகள்