இனி மைதானங்களில் அமர்ந்து விளையாட்டுகளைக் காண்பது கடினம்!
இனி மைதானங்களில் அமர்ந்து விளையாட்டுகளைக் காண்பது கடினம்!
உதய் சங்கர், ஸ்டார், டிஸ்னி நிறுவன இந்திய இயக்குநர், தி வால்ட் டிஸ்னி ஆசியா பசிபிக் தலைவர்
பொது முடக்க காலம் எப்படி செல்கிறது? பணிகளை செய்துவருகிறீர்களா?
பொதுமுடக்க காலம் கடினமாகத்தான் இருக்கிறது. முதலில் அலுவலகம் சென்று வேலை செய்து வந்தோம். இப்போது வீட்டிலேயே வேலை பார்த்து வரும் சூழல். வீட்டிலும் கவனச்சிதறல் இல்லாமல் பணியாற்ற முடிகிறதுதான். ஆனால் வீட்டில் அலுவலக பணிகளைச் செய்யும்போது வீடு, அலுவலகம் என்ற இரு விஷயங்களும் அடிக்கடி மோதிக்கொள்கின்றன. மற்றபடி எங்கள் குழு உறுப்பினர்களை நான் டிஜிட்டல் முறையில் சந்தித்து வருகிறோம். வேலைகளையும் செய்து வருகிறோம்.
ரசிகர்களின் மனநிலையை வைத்தே நாம் விளையாட்டுகளை நடத்தி வருகிறோம். பொதுமுடக்கம், பெருந்தொற்று என சிக்கலான நேரங்களில் இதனை எப்படி சமாளிக்கிறீர்கள்?
மக்கள் எப்போதும் பழைய முறையில் விளையாட்டுகளை இனியும் காணமுடியாது. இன்று மக்கள் விளையாட்டுகளை காண்பதை விட அவர்களின் பாதுகாப்பு முக்கியம். நாங்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஹாட்ஸ்டார் சேவையை ஸ்மார்ட்போன்களுக்கும், இணையத்திற்காகவும் தொடங்கினோம். அப்போது, மூன்று அங்குல திரையில் விளையாட்டுகளை யாராவது பார்ப்பார்களா? கிரிக்கெட் அனுபவத்தை ஸ்மார்ட்போன் நேரலை அனுபவம் தராது என்று விமர்சனம் செய்தார்கள். இன்று நூறு மில்லியன் மக்கள் (ஒரு மில்லியன் - பத்து லட்சம்) விளையாட்டுகளை பார்த்து ரசித்து வருகின்றனர். நிச்சயம் மைதானத்தில் மக்கள் இல்லாமல் விளையாட்டுகள் நடப்பது அசௌகரியமாகவே இருக்கும். ஆனால் இப்போதுள்ள நிலைமை மக்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். டிஜிட்டல் முறையில் விளையாட்டை உணர்ந்து அனுபவித்து பார்க்க ஏற்பாடுகளை நாங்கள் செய்துவருகிறோம்.
பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளால் டிவி பார்க்கும் அனுபவத்தை மாற்றி அமைக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
நிச்சயமாக. டிவி என்றில்லை மக்கள் எப்போதும் தங்களுடன் போன்களை வைத்துக்கொண்டுள்ளனர். அதனைப் பயன்படுத்தி அவர்கள் விளையாட்டைப் பார்க்கும்போது ஏற்படும் அனுபவத்தை பதிவு செய்ய நினைத்துள்ளோம். விளையாட்டு எப்போது தொடங்கினாலும் விளையாட்டின் முக்கிய தருணங்களை பதிவு செய்ய நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
இப்போது நீங்கள் உருவாக்கவிருக்கும் விளையாட்டுப் போட்டிகள் புதிய விதிகளுடன் இயங்கும் என்கிறீர்களா?
பொதுமுடக்கம், பெருந்தொற்று பாதிப்புக்கு முன்னர் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் என்று சொன்னால் நீங்கள் நம்பியிருப்பீர்களா? ஆனால் இன்று நெருக்கடியான நிலையிலும் நமது வாழ்க்கை உறைந்து நின்றுவிடவில்லை. வாழ்க்கை அதன் வழியில் பயணிக்கிறது அல்லவா? டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலியை பொதுமுடக்க காலத்தில்தான் நாங்கள் அறிமுகப்படுத்தினோம். செயலி மூலம் நிகழ்ச்சிகள் சிறப்பாக மக்களால் பார்க்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இனிமேல் வெளிநாட்டுக்கு கிரிக்கெட் விளையாடச்செல்வது ஆபத்தானதாகவே இருக்கும். எப்படி வெளிநாட்டு வீரர்களை வைத்து விளையாட்டுப்போட்டிகளை நடத்துவது?
அது பெரிய பிரச்னையாக இருக்காது. வெளிநாட்டு வீரர்களை
இரண்டு வாரங்களுக்கு முன்னரே வர வைத்து தனிமைப்படுத்தி வைத்து நோய் சோதனைகளைச் செய்துவிட்டு விளையாட அனுமதிக்கலாம். வெளிநாட்டுக்கு விளையாடச் செல்வதையும் நாம் இப்படியே செய்யலாம்.
ரசிகர்கள் இல்லாத மூடப்பட்ட அரங்கில் போட்டியை நடத்துவது இனிமேல் அதிகரிக்குமா? சில ஐரோப்பிய நாடுகளில் இம்முறையை சோதிக்கப் போகிறார்கள் என்று செய்தி வருகிறதே?
இந்த சூழ்நிலையை முதலில் எதிர்கொள்ள தயக்கமாகவும் தடுமாற்றமும்தான் இருக்கும். ஆனால் விரைவில் இந்த சூழ்நிலை நமக்கு பழகிவிடும். காரணம், நாம் முதலில் கைகளை சோப்பினால் கழுவவும், முக கவசங்களை அணியவும் தயக்கமாக இருந்தது. ஆனால் இன்று அதனை சிறப்பாக பயன்படுத்த கற்றுள்ளோம். விளையாட்டும் அப்படி.த்தான்.
நன்றி: தி இந்து ஆங்கிலம் 12.5. 20
ஆங்கிலத்தில்: சந்தீப்
கருத்துகள்
கருத்துரையிடுக