பழங்குடிகளின் விற்பனைப் பொருட்களுக்கான குறைந்த பட்ச விலையை அதிகரித்துள்ளோம்! --அர்ஜூன் முண்டா






Arjun Munda wins Archery Association of India top spot in Jharkhand
telegraph


அர்ஜூன் முண்டா, பழங்குடிகள் நலத்துறை அமைச்சர்

பழங்குடிகள் விற்கும் 45 பொருட்களுக்கான குறைந்த பட்ச விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பொது முடக்க காலத்தில் பொருட்களை குறைவான விலைக்கு பழங்குடிகள் விற்கும் சூழல் நேர்கிறது என்பதால் இந்த அறிவிப்பா?

பொதுமுடக்க காலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ளவர்களையும் பழங்குடிகளையும் காப்பது அரசின் கடமை. பழங்குடிகள் விற்கும் வனம் சார்ந்த பொருட்கள் 50 இன் குறைந்தபட்ச விலையை நாங்கள் உயர்த்தி அறிவித்துள்ளோம். மேலும் இந்த பட்டியலில் முப்பது பொருட்கள் மீதமிருக்கின்றன. இதுபற்றி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் செய்தியை தெரிவித்துள்ளோம். இந்த அறிவிப்பு மூலம் பழங்குடிகளின் பொருட்களுக்கு சந்தையில் சரியான விலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

பழங்குடிகளுக்கான உணவுப்பொருட்களை எப்படி வழங்கி வருகிறீர்கள்?

பழங்குடிகள் நலத்துறை இதுபற்றி அனைத்து மாநில அரசுகளிடமும் பேசி வருகிறது. அவர்கள் விற்கும் பொருட்களின் விலையை உயர்த்துவது இதற்கான முக்கியமான முயற்சி. உணவுப்பொருட்களை பழங்குடிகளுக்கு வழங்குவதற்கான செயல்பாட்டில் அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கைகோத்து இயங்கி வருகின்றன.

நாட்டிலுள்ள 15 மாவட்டங்களில் வாழும் பழங்குடிகள் கோவிட் -19 பாதிப்புக்கு உட்பட்டிருக்கிறார்கள். மேலும் 40 சதவீத பட்டியலினத்தவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளனர். பெருந்தொற்று காலத்தில் எப்படி இவர்களுக்கு உதவிகளை வழங்கவிருக்கிறீர்கள்?

 பாதிப்பைக் களைய நாங்கள் எங்கள் துறை சார்பாக தனிக்குழு அமைக்கவில்லை. தேவையென்றால் அதுபற்றி ஆலோசித்து முடிவுகளை எடுப்போம். இப்போதைக்கு தனிநபர் சுகாதாரம் பற்றிய பிரசாரங்களை செய்து தேவையான பொருட்களை வழங்கிவருகிறோம். பழங்குடி மக்களுக்குத் தேவையான உதவிகளை ஆஷா பணியாளர்கள் செய்து வருகின்றனர். பழங்குடி மக்களின் மீதான பாதிப்பு பற்றிய அறிக்கை தயாரிக்க முயன்று வருகிறோம்.

பழங்குடி மக்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் நீங்கள் எப்படி உதவிகளை வழங்கி வருகிறீர்கள்?

மத்திய அரசின் வன்தன் யோஜனா திட்டம் மூலம் பல்வேறு உதவிகளை பழங்குடி மக்களுக்கு வழங்கிவருகிறோம். எங்கள் அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களை மாநில அரசில் உள்ள பழங்குடிகள் நலத்துறை செய்தால் அவர்களுக்கு தேவையான விஷயங்கள் கிடைத்துவிடும். தற்போது தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பியுள்ளதால், பழங்குடிகளின் திறமையை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஆங்கிலத்தில்: ரித்விகா மித்ரா


கருத்துகள்