இடுகைகள்

குணப்படுத்தல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இயற்கையோடு கொள்ளும் தொடர்பை இழக்கக்கூடாது - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி கூறிய கருத்துகள் பூமியில் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள்.   ஆனால் அவர்களுக்கு இடையில் எதற்கு இத்தனை முரண்பாடுகள், பிரச்னைகள் உருவாகின்றன? இதற்கு எளிதான காரணங்களாக அதிக மக்கள்தொகை, அறநெறி வீழ்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து மக்களின் நேரடி தகவல் தொடர்பு குறைந்துபோனது   என்று குறிப்பிடலாம். உண்மையில் இப்படி முரண்பாடுகள் ஏற்பட அடிப்படைக் காரணங்கள் என்ன? பாரம்பரியமாக நன்மைகள், கருணை, உயிர்களைக் கொல்லாமை, இரக்கமின்றி   நடந்துக்கொள்ளாமை ஆகியவற்றை போதித்த நாடு எங்கே தவறாகிப்போனது. அதன் செயல்பாட்டில் எங்கே தவறு நடந்தது? பாம்பே – ஜனவரி 1968 மீட்டிங் லைஃப்   தொன்மைக் காலத்தில் பேராசை, அதிகாரம் ஆகியவற்றில் சிக்காமல் சுதந்திரமாக மக்கள் குழுவினர் வாழ்ந்தனர். பேராசை, அவநம்பிக்கை ஆகியவற்றில் அகப்படாமல் வாழ்ந்த மக்கள் குழுவினரால், ஆன்மிகம், அறம் ஆகியவை வீழ்ச்சியடையாமல் பிழைத்தன.   இந்த மக்கள் குழு, பெரிதாகும்போது சமூகத்திற்கும் அதேயளவில் பாதுகாப்பு கிடைத்தது. இப்படி பாதுகாப்பு கிடைத்து தப்பித்த சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகில் ஏற்படும