இடுகைகள்

வாழ்க்கைத் திறன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிய இந்தியாவில் மாணவர்கள் கற்க வேண்டிய வாழ்க்கைத் திறன்கள்!

படம்
  புதிய இந்தியாவில் வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைத் திறன்கள் என்னென்ன? வாழ்க்கைத் திறன்கள் என்பது வாழ்க்கையை எளிதாக நடத்திச்செல்ல உதவுபவை. இவற்றை கற்றால் நிறைய இடர்பாடுகளை எளிதாக கடந்துசெல்ல முடியும். சவால்களை சந்திக்கலாம். எவரெஸ்டில் ஏறலாம். செங்கடலில் குதித்து நீந்தலாம். பாராகிளைடிங் செய்யலாம். இத்தனையும் சாத்தியம். புதிய தலைமுறை குழந்தைகளுக்கு இப்படி இந்தியாவில் என்னென்ன திறன்களைக் கற்றுக்கொடுக்கலாம் என்ற பரிந்துரை பயிற்சிகள் இதோ... பொய் சொல்லும் கலை - ஆர்ட் ஆஃப் லையிங்  5 வயதுக்கும் மேற்பட்டவர்கள் நிஜத்தை தீர்மானமாக மறைத்து நினைத்தே பார்க்க முடியாத ஆனால் சற்றேறக் குறைய நம்பும்படியான பொய்களை சொல்லவேண்டும். சொல்லும் பொய்யை யாரேனும் கண்டுபிடித்தால் கூட அதற்கு காரணம் என பயிற்சி மாணவர்கள் ஒருவரை குறை சொல்லிவிடலாம். இதை எந்த குற்ற உணர்ச்சியுமின்றி மாணவர்கள் பயில பொய் சொல்லித்தரும் ஆசிரியர் நியமிக்கப்படுவார். இவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தினசரி உண்டு. கூடுதலாக களப்பணி செய்தால்தானே பொய் சொல்லும் கலை சிறக்கும். வேலை இல்லாத, ஊட்டச்சத்து பாதிப்புகொண்ட பதினைந்து லட்ச ரூபாய் தனது