இடுகைகள்

காலநிலை நீதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்களின் வாழ்வில் உருவாகும் பசுமை இல்ல வாயு பற்றி ஆராய்ந்து வருகிறோம்! - சுனிதா நரைன், ஆசிரியர் டவுன் டு எர்த் இதழ்

படம்
சுனிதா நரைன் தலைவர், அறிவியல் மற்றும் சூழல் மையம் காலநிலை நீதி (Climate Justice) என்பதை எப்படி வரையறுப்பீர்கள்? காலநிலை மாற்றத்தின் பயன்களை, சுமைகளை  பாகுபாடின்றி அனைத்து மக்களும் எதிர்கொள்வது எனலாம்.  கார்பன் டை ஆக்சைட் ஒருமுறை வெளியானால், வளிமண்டலத்தில் 150 முதல் 170 ஆண்டுகள் வரை தங்கியிருக்கும். நூற்றாண்டு காலமாக வெளியான பசுமை இல்ல வாயுக்கள், பூமியின் வெப்பநிலையை உயர்த்தி வருகின்றன. இதைச் சமாளிக்க நிதி, தொழில்நுட்பம் ஆகியவற்றின் உதவி தேவை. 1992ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் காலநிலை மாற்றம் பற்றி கொள்கைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இதை வளர்ந்த நாடுகள் பின்பற்றவில்லை. இதனால்தான் பூமி இன்று, அபாயத்தை எதிர்கொண்டு வருகிறது.  காலநிலை நீதி என்பதில் நாடுகளுக்குள் ஒற்றுமை உள்ளதா? எங்களது அறிவியல் மற்றும் சூழல் மையம், தனிநபர் சார்ந்த பசுமை இல்ல வெளியீடு பற்றிய கொள்கைகளை உருவாக்கியுள்ளது. வளரும் நாடான இந்தியாவில், மக்கள் அனைவருக்குமான இயற்கை சார்ந்த பங்களிப்பு உள்ளது. நாம், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் ஏழை மக்கள் பற்றி சிந்திப்பது அவசியம்.  வாழ்வாதார பசுமை இல்ல வாயு வெளியீடு (Subsi