இடுகைகள்

சுகாதார அட்டை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுகாதார அட்டை இந்திய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமா?

படம்
  அனைவருக்கும் சுகாதார அட்டை ஒன்றை தயாரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆயுஸ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் ஏபிடிஎம் என அழைக்கப்படும் திட்டம் கடந்த செப்டம்பர் 27 அன்று நடைமுறைக்கு வந்தது.  இதன் தொடக்க கால திட்டம் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று சோதனை முறையில் சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்த வகையில் ஒரு லட்சம் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இந்த சுகாதார அட்டையை பான் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் கொடுத்து பெறலாம். இதில் சேர விரும்புபவர் தனது பெயர், வயது. பிறந்த தேதி, முகவரி, ஆதார் எண் கொடுத்து விண்ணப்பத்து பூர்த்தி செய்யவேண்டும். உங்களிடம் ஆதார் இல்லையென்றாலும் கூட போன் நம்பர் கொடுத்துக்கூட பதிவு செய்துகொள்ளலாம்.  மக்களுக்கு எளிமையான முறையில் குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் கிடைக்கும் என ஒன்றிய  அரசு கூறியுள்ளது. பிரதமர் மோடி, மக்களின் வாழ்க்கை இனி எளிமையாகும் என திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசியுள்ளார்.  சுகாதார அட்டையை பதிவு செய்தால் பதினான்கு  எண்கள் கொண்ட அடையாள எண் வழங்கப்படும். இந்த எண்ணை ஒருவர் இதற்கான ஆப்பை போனில் நிறுவி பதிவு செய்து பெறலாம். நோய் பற்றிய தகவல்கள் ந