இடுகைகள்

சர்காரு வாரி பாட்டா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொழிலதிபரின் வாராக்கடனை கட்ட வைக்கும் அமெரிக்க கந்துவட்டி நாயகன்!

படம்
  சர்காரி வாரு பாட்டா பரசுராம் இசை  தமன் ஒளிப்பதிவு  மதி விசாகபட்டினத்தின் தொழிலதிபர் ராஜேந்திரநாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் ********* வாங்கி ஏமாற்றிய 1000 கோடி ரூபாய் பணத்தை அமெரிக்க கந்துவட்டி நிறுவனர் மகேஷ் எப்படி மீட்கிறார் என்பதே கதை.  குடும்ப படம், உணர்ச்சிகள் என படம் எடுத்த பரசுராம், தமிழ்ப்பட இயக்குநரான ஷங்கர் போல மக்கள் கருத்து கேட்டு கேட்கவிட்டு எடுத்துள்ள அதிசாகசப் படம்.  படத்தை உயிரோட்டமாக கொண்டு செல்ல உதவுபவர்கள் மகேஷ்பாபு, சுப்பராஜூவும்தான். கூடவே பக்கத்துணையாக தமன் இருக்கும்போது என்ன? காட்சிகளை உணர்வோட்டமாக மாற்றவும், ஆக்சன் காட்சிகளில் அட்ரினலின் சுரக்க வைக்கவும் தமனின் தப்புச்சத்தங்களால் முடிகிறது.  ஸ்டார் படங்களில் இருக்கும் அனைத்து சிக்கலும் மகேஷ்பாபுவின் படமான இதிலும் தலைகாட்டுகிறது. அதைத்தாண்டி முக்கியமான உணர்ச்சிகர காட்சிகள் சிலதை மட்டும் கவனிக்கலாம்.  மகேஷின் அப்பா, விவசாயம் செய்பவர். பயிருக்கு வாங்கிய கடனுக்கு சில நாட்கள் தவணை கேட்கிறார். ஆனால் அங்குள்ள அதிகாரி அம்மணி அதெல்லாம் முடியாது. கட்ட முடியவில்லை எனில் வீட்டை ஏலம் போடுவோம் என கறாராக சொல்லுகிறார். இதனால் மனமுட