தொழிலதிபரின் வாராக்கடனை கட்ட வைக்கும் அமெரிக்க கந்துவட்டி நாயகன்!

 
















சர்காரி வாரு பாட்டா
பரசுராம்
இசை 
தமன்
ஒளிப்பதிவு 
மதி









விசாகபட்டினத்தின் தொழிலதிபர் ராஜேந்திரநாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் ********* வாங்கி ஏமாற்றிய 1000 கோடி ரூபாய் பணத்தை அமெரிக்க கந்துவட்டி நிறுவனர் மகேஷ் எப்படி மீட்கிறார் என்பதே கதை. 

குடும்ப படம், உணர்ச்சிகள் என படம் எடுத்த பரசுராம், தமிழ்ப்பட இயக்குநரான ஷங்கர் போல மக்கள் கருத்து கேட்டு கேட்கவிட்டு எடுத்துள்ள அதிசாகசப் படம். 

படத்தை உயிரோட்டமாக கொண்டு செல்ல உதவுபவர்கள் மகேஷ்பாபு, சுப்பராஜூவும்தான். கூடவே பக்கத்துணையாக தமன் இருக்கும்போது என்ன? காட்சிகளை உணர்வோட்டமாக மாற்றவும், ஆக்சன் காட்சிகளில் அட்ரினலின் சுரக்க வைக்கவும் தமனின் தப்புச்சத்தங்களால் முடிகிறது. 

ஸ்டார் படங்களில் இருக்கும் அனைத்து சிக்கலும் மகேஷ்பாபுவின் படமான இதிலும் தலைகாட்டுகிறது. அதைத்தாண்டி முக்கியமான உணர்ச்சிகர காட்சிகள் சிலதை மட்டும் கவனிக்கலாம். 

மகேஷின் அப்பா, விவசாயம் செய்பவர். பயிருக்கு வாங்கிய கடனுக்கு சில நாட்கள் தவணை கேட்கிறார். ஆனால் அங்குள்ள அதிகாரி அம்மணி அதெல்லாம் முடியாது. கட்ட முடியவில்லை எனில் வீட்டை ஏலம் போடுவோம் என கறாராக சொல்லுகிறார். இதனால் மனமுடைந்த மகேஷின் அப்பா, அம்மா இருவரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 

தொடக்க காட்சியில் கடன் கட்டுவதற்கான கால அவகாசம் தராதவர் யார் என காட்டுவதில்லை. இறுதிக் காட்சியில்தான் காட்டுகிறார்கள். மகேஷ் அதை தொடக்கத்திலேயே அறிந்தாலும் கூட வலியைத் தாங்கிக் கொண்டு தன் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அதே பெண்மணிக்கு உதவி செய்கிறார். இக்காட்சி மிகவும் ஆழமானது. யோசிக்க கொஞ்சம் கடிமானது. இறுதியில் அவர் பேசும் வசனத்துடன் படம் முடிகிறது. 

வங்கியில் பிரம்மாஜியுடன் பேசும் வசனம், தன்னை ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்திய ஆசிரியரின் இஎம்ஐ பிரச்னையை தீர்க்க  நடுத்தர வர்க்க மக்களுடன் பேசும் காட்சி. 

வாராக்கடன் எனும் சமகால பிரச்னையை சாகச சினிமா என்றாலும் பேச வைத்த முயற்சிக்கு பரசுராமுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சொல்லவேண்டும். மகேஷ்பாபு நடிக்காதபோது இந்த செய்தியை நிறையபேருக்கு கொண்டு போய் சேர்ப்பது கடினம். 

மகேஷ் பாபுவுக்கு இது முக்கியமான படம். வெகு நாட்களுக்கு பிறகு தலைக்கு மாலீஷ் போட்ட பிறகு நமக்கு ஏற்படும் உற்சாகம் போல படம் நெடுக்க எனர்ஜி குறையாமல் வருகிறார். இந்த முறை காமெடி, பைட், உணர்ச்சிகரமான காட்சி என அனைத்தும் செட் ஆகியுள்ளது. 

60 கோடி செலவில் எடுத்த படம் 200 கோடிக்கு மேல் வசூலாகி வணிக வெற்றியைப் பெற்றுள்ளது. படத்தின் நடிகர், தயாரிப்பாளர் என்ற வகையில் மகேஷ்பாபுவுக்கு இது முக்கியமான வெற்றி. 

வாங்கின கடனை கட்டுங்க ப்ரோ!

கோமாளிமேடை டீம் 





 







கருத்துகள்