நின்றுகொண்டே தூங்கும் விலங்குகள், கோலா கரடிகளின் கைரேகை! - உண்மையா? உடான்ஸா?

 














உண்மையா? உடான்ஸா?


விலங்குகள் நின்றுகொண்டே ஆழ்நிலை தூக்கத்திற்கு செல்கின்றன!


உண்மையல்ல. குதிரை, பசு,வரிக்குதிரை, யானை ஆகிய விலங்குகள் நின்றுகொண்டே தூங்குவது நிஜம். இப்படி தூங்குவது மெல்லிய தூக்கம்தான். முழங்காலை நேராக்கி நின்றுகொண்டே தூங்குவது, திடீரென எதிரிகளால் ஆபத்து ஏற்படும்போது அதை எதிர்கொள்ளத்தான். படுத்துள்ள நிலையில்தான் பசு, குதிரை ஆகிய விலங்குகள் ஆழமான உறக்கத்தைப் பெறுகின்றன.  

கோலா கரடிகளின் கைரேகை மனிதர்களைப் போன்றது!


உண்மை.  1996ஆம் ஆண்டு தடவியல் வல்லுநர் மாசிஜ் ஹென்னபெர்க், கோலா கரடியின் கைரேகைகள் மனிதர்களைப் போலவே உள்ளது என்று இண்டிபென்டன்ட் நாளிதழில் கூறினார். 12 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பாலூட்டி இனங்களும்(Mammals), உடலில் பைகொண்ட பாலூட்டி இனங்களும் (Marsupials) பிரிந்துவிட்டன. இப்படி பிரிந்துவிட்ட இனங்களில் காணப்படும் ஒத்த பரிணாம வளர்ச்சி அம்சங்களுக்கு, ஒன்றிணைந்த பரிணாம வளர்ச்சி  (Convergent Evolution)என்று பெயர்.  



https://www.sciencefocus.com/nature/how-many-animals-can-sleep-standing-up/

https://wildlifeinformer.com/animals-that-sleep-standing-up/

https://www.mentalfloss.com/article/649748/koalas-have-fingerprints-just-humans

https://www.scarymommy.com/weird-facts

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்