உலக அனுபவத்திற்காக பேய்கிராமத்தை விட்டு வெளியேறும் வைத்திய வீரன்!
மில்லினியம் அல்செமிஸ்ட் மாங்கா காமிக்ஸ் 100-- பேய்க்கிராமம் எனும் இடம் சபிக்கப்பட்ட இடம். அங்கு செல்பவர்கள், திரும்ப உலக வாழ்க்கைக்கு வரவே முடியாது. இங்கு, திருடர்கள், கொள்ளைக்காரர்கள், துரோகத்தால் வீழ்த்தப்பட்ட வாள் வீரர்கள் என பலரும் வந்து வாழ்கிறார்கள். இங்கு வீரர் ஒருவர் தனது முதலாளி குழந்தையை மரத்தில் கொண்டு வந்து விடுகிறார். அழும் குழந்தையின் வாயில் துணியை திணித்துவிட்டு செல்கிறார். அது யார் வீட்டு குழந்தை, ஏன் அதை அழாமல் வாயில் துணி வைத்து பாதுகாக்கிறார்கள் என்பது கதையில் பின்னாடி வரும் என நம்பலாம். அந்த குழந்தைதான் நாயகன். அவன், குழந்தையாக இருக்கும்போது பேய் கிராமத்தில் வாழும் நான்கு முதியவர்கள் எடுத்து வளர்ப்பு தந்தைகள் போல கவனித்து வளர்க்கிறார்கள். அவர்கள் அனைவருமே சில ஆண்டுகள் மட்டுமே ஆயுள் கொண்டவர்கள். குழந்தைக்கு தங்களது இனக்குழுவின் பல்வேறு தற்காப்புக்கலையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். மருத்துவம், திருட்டு, வாள்வீச்சுக்கலை, பொறிகளை அமைப்பது, ஆயுதங்களை உருவாக்கும் கலை என அனைத்தையும் பல்லாண்டுகள் கற்கிறான். கதையில் நம்மை ஆச்சரியப்படுத்துவது, நாயகன் தனக்கென சாப்பிட்டு வலிமை