நவீன உலகில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தனிநபர்களே காரணம் - ஜே கிருஷ்ணமூர்த்தி
ஜே கிருஷ்ணமூர்த்தி |
ஜே கிருஷ்ணமூர்த்தி
உலகில் மோசமான
நெருக்கடி நிலை, ஏதேனும் சில செயல்பாடுகளால், வாய்ப்பால் ஏற்படுவதில்லை. அதை உருவாக்குவது
மக்கள் கூட்டத்தில் உள்ள தனிநபர்களான ஓவ்வொருவரும்தான். பொறாமை, வேட்கை, பேராசை, அதிகார
ஆசை, பிறரைக் கட்டுப்படுத்துதல், போட்டி,, இரக்கமில்லாத தன்மை, உடனடியாக பலன்கள் கிடைக்கவேண்டுமென
நினைத்தல் ஆகியவற்றை தினசரி வாழ்க்கையில் நாம் செய்கிறோம்.
உலகில் உருவாகும்
அபாயத்திற்கும் குழப்பத்திற்கும் வேறு யாரோ காரணமல்ல. நாம்தான் காரணம். அதாவது நீங்களும், நானும்தான். ஒன்றை ஆழமாக கவனிக்காமல், சிந்திக்காமல், ஏதேனும்
பேராசையை நோக்கி ஓடுவது, உணர்வுகளின் தேவையை மட்டுமே தீர்மானிப்பது, காரணமாக ஆழமான
பேரழிவு நேருகிறது. இந்த மோசமான நிலைக்கு நெருக்கடிக்கு
நீங்கள்தான் பொறுப்பு. வேறு எந்த குழுவோ, தனிநபரோ காரணமல்ல. நீங்கள் மட்டுமே காரணம்.
Madras
The
cpllected works vol .5october 1947
the
collected works 4
நவீன உலகம்
என்றால் என்ன? பல்வேறு நுட்பங்களாலும், பெரிய நிறுவனங்களின் திறனாலும் உலகம் உருவாகியுள்ளது.
இங்கு, தொழில்நுட்ப மேம்பாட்டுடன் மனிதர்களின் தேவையை பற்றாக்குறையுடன் நிறைவு செய்யும் வசதியும் உள்ளது. இதற்கு காரணம், உற்பத்தி மிகச்சில
தனிநபர்களின் கையில் இருக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தேசம் சார்ந்த
முரண்பாடுகள் ஏராளம் உள்ளது.
உலகமெங்கும்
இறையாண்மை கொண்ட நாட்டிற்காக தொடர்ச்சியாக போர் நடைபெற்றுவருகிறது. இதுதானே நவீன உலகம்?
இல்லையா? உளவியல் ரீதியான மேம்பாடு இன்மை,
சீரற்ற சமநிலை மனம், வெறுமையான இதயம், வெறுமையான மனம்…. என்றுதான் உலகம் அமைந்துள்ளது.
அதன்படியே நீங்களும் உருவாகியுள்ளீர்கள். உலகம் என்பது உங்களிலிருந்து வேறுபட்டது அல்ல.
அறிவுஜீவித்தனமான, வெறுமையான இதயம் கொண்டதாக உங்களது உலகம் உருவாகியுள்ளது.
New
delhi November 1948
Collected works 5
கருத்துகள்
கருத்துரையிடுக