மனப்பூர்வமாகத் தேடினால் சுதந்திரத்தைப் பெறலாம்! - ஜே கிருஷ்ணமூர்த்தி

 

ஜே கிருஷ்ணமூர்த்தி



எப்படி தேர்ந்தெடுப்பது -2

உங்கள் வாழ்க்கை என்பது தேர்வுகளாக அமைந்துள்ளது. உங்களின் தேர்வு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தருவதால் அதை நீங்கள் விரும்புகிறீர்கள்.  இந்த தேர்வு, உங்களுக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த நாள் இந்த தேர்வு உங்களுக்கு பிடிக்காமல் போய்விடலாம். எனவே, நீங்கள் தேர்ந்தெடுத்த விஷயங்களை உடனே கைவிட்டுவிட்டு வேறு விஷயங்களுக்கு நகர்ந்துவிடலாம்.

ஆகவே,  உங்களது தேர்வு என்பது உணர்வுநிலையைச் சேர்ந்தது. நீங்கள் அதை சுயநினைவு சார்ந்தும் இருநிலைப்பாடுகள் சார்ந்தே எடுக்கிறீர்கள். ஆனால் எடுக்கும் தேர்வு நிலைப்பாடு, எதிர்மறையாக அமைகிறது.

எதிர்மறையாகச் செல்லும் தேர்வுகள் பற்றி நீங்கள் கவனமுடன் இருந்தால்,  உண்மை எதுவென அடையாளம் கண்டுகொள்ளலாம். உண்மையை அடையாளம் காண்பதற்கான ஆர்வம், வேட்கை இல்லை என்பதால் உணர்வு நிலை சார்ந்து எதிர்மறையான தேர்வுகளே கிடைக்கின்றன. இந்த நிலையில் மனம் முழுக்க எதிர்மறை தேர்வுகளிலிருந்து எளிதாக விடுதலையாவதில்லை. இச்சூழலில், விழிப்புணர்வாக, செழிப்பான நிலையில் மனம் இருக்காது. ஒருவரின் எதிர்மறைத் தேர்வுகளில் சுதந்திரம் இருப்பது, சாதனை என்று கூறமுடியாது. ஆனால் நிறைவத் தருகிறது. இது முடிவின்மையில் இருந்து தோன்றுவதாக கொள்ளலாம். உங்களது நிறைவிலிருந்து செயல்கள் உருவாகின்றன.  இந்த செயல் தேர்வு, முயற்சி ஆகியவை இல்லாமலேயே தோன்றுகிறது.

 நிஜத்தில் வாழ்வின் முழுமையை அறிய, நீங்கள் விழிப்புணர்வு நிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களால் நெருக்கடி நிலையில் இருந்து எதிர்கொண்டு தப்பிக்க முடியும். பணம், மனிதர்கள், காதல், மரணம் ஆகியவை சார்ந்து நீங்கள் வாழ்க்கையில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருப்பீர்கள்.  இந்த நிலைமைகளில் நீங்கள் சில விஷயங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நெருக்கடி உருவாகியிருக்கும். எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

உங்கள் முடிவு பயத்தில் இருந்து உருவாகியிருக்கும். அப்படி தேர்ந்தெடுத்தாலும் முடிவைத் தள்ளிப்போடுவதை செய்வீர்கள். எது பிரச்னை இல்லாமல் சொகுசாக உள்ளதோ, மகிழ்ச்சி தருகிறதோ  கடந்து செல்லும் நிழல் போல இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுப்பீர்கள்.

இப்படி எடுக்கும் முடிவுகள் அறிவுப்பூர்வமானவை அல்ல. மனம், இதயம் என இரண்டிலும் சூழலைப் புரிந்து தேர்வை ஏற்று செய்யவேண்டும். அப்போது நீங்கள் எதையும் தேர்ந்தெடுக்கவேண்டியதில்லை. நீங்கள் செயல்பட்டால் போதும்.  இதற்கு நான் சில எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கலாம். ஆனால் அவை உங்களைக் குழப்பும் என்பதால் கொடுக்கவில்லை.

என்னைப் பொறுத்தவரை, விழிப்புணர்வு என்பது அதற்கான போராட்டத்தின் வழியாக உருவாகி வருவதல்ல. அது உங்களிடமிருந்து தானாக உருவாகி வருவது. தேர்வு என்பதை நீங்கள் சரியாக புரிந்துகொண்டால்  விழிப்புணர்வை அறியலாம். பொதுவாக நீங்கள் இரண்டு விஷயங்களுக்கு இடையில் செயல்களைச் செய்கிறீர்கள்.

 இது, அது என இரண்டுக்கும் இடையில் தேர்வுகளை தேர்ந்தெடுக்கிறீர்கள். இந்த தேர்வுகளின் முடிவாக, உங்கள் வாழ்க்கையை நிறைவாக்கிக்கொள்ள  நினைக்கிறீர்கள்.  உங்களது செயல்பாடு தேவை, ஆசை ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. 

ஆசை எப்போது நிறைவை அடைகிறதோ, அப்போது செயல் என்பது முடிவை எட்டுகிறது. நீங்கள் தனியாக இருந்தீர்கள் என்றால், ஒரு செயலை எதிர்பார்க்கிறீர்கள். அதன்வழியாக நிறைவு கிடைக்கிறது. நீங்கள் மனப்பூர்வமாக செய்யும் செயல் வழியாக சுதந்திரம் பெற முடியும்.

நீங்கள் இதை நெருக்கடியில் இருக்கும்போது சோதித்து பார்க்கலாம். இதை நீங்கள் அறிவுப்பூர்வமாக, ஓய்வாக அமர்ந்திருக்கும்போது, மனதில் பல்வேறு முரண்பாடுகளுக்கு இடையில் சோதித்துப் பார்க்க கூடாது. தேர்வுக்கான தேவை உருவாகும்போது நெருக்கடியை நேருக்கு  நேராக சந்திக்கும்போது, முடிவு எடுக்கும்போது, முழுமையாக மனப்பூர்வமாக இயங்கி முடிவு எடுக்கும்போது உண்மையை அறியலாம். தேர்வு மூலம் நீங்கள் உங்களது உண்மையான நிலையை முழுமையாக உணர முடிந்தால் அது சிறப்பானது.

Talk at alpino on Italy on 4 july 1933

Collected works vol 1.pp8-10



கருத்துகள்