இணையத்தை மையமாக கொண்டு தொடங்கும் வணிகத்தில் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்!
40 ரூல்ஸ் ஃபார் இன்டர்நெட் பிசினஸ் மேத்யூ பால்சன் கட்டுரை நூல் ஆங்கிலம் இன்று பெரும்பாலான வணிகம், ஸ்டார்ட்அப்பாக இணையத்தில் தொடங்கப்படுகிறது. முதலீடு பெற்று வளர்ந்தால் அதை பாரம்பரிய வணிகம் போல இடம் பிடித்து அலுவலகம் திறந்து பெரிதாக்குகிறார்கள். ஆனால், இணைய நிறுவனங்கள் வளர்வது முழுக்க வேறுவிதமாக உள்ளது. அலிபாபாவை எடுத்துக்கொள்ளுங்கள். அமேசானின் வணிகத்தைப் போன்று இயங்கும் நிறுவனம். சீனாவில் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் உருவாக்கிய மாற்றங்களும் அசாதாரணமானவை. தனது வணிகத்திற்கான அடிப்படை நிதி கட்டமைப்பையே ஒரு நிறுவனம் உருவாக்கி சந்தையைப் பிடிப்பது சாதாரண விஷயமல்ல. இன்று இணையத்தில் மட்டுமே ஸ்மார்ட்போன்கள் முதலில் விற்கப்பட்டு பிறகு கடைகளுக்கு வரத் தொடங்கியுள்ளன. இந்த வகையில் மக்கள் ஆன்லைனில்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு 9 டு 5 வேலை பிடிக்காமல் போய் ஆன்லைன் வணிகம் தொடங்கினால் அதை எப்படி நடத்துவது, வெற்றி பெறுவது, புகார் கொடுப்பவர்களை சமாளிப்பது, நல்ல வாடிக்கையாளர்களை காப்பாற்றிக்கொள்வது ஆகியவற்றை எப்படி செய்வது என நூலாசிரியர் விரிவாக விளக...