இடுகைகள்

பணக்காரன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தீயணைப்புப்படை கேப்டனுக்கும், மருத்துவருக்கும் இடையே எரியும் காதல் நெருப்பு !

படம்
    யாங் யாங் - வாங் சுரான் (ஃபயர்வொர்க்ஸ் ஆப் மை ஹார்ட்) ஃபயர்வொர்க்ஸ் ஆப் மை ஹார்ட் சீன டிவி தொடர் ராக்குட்டன் விக்கி ஆப் சீனர்கள் எதையும் சுருக்கமாக சொல்லாமல் இழுப்பதில் வல்லவர்கள் என்பதால், தொடர் நாற்பது எபிசோடுகள் நீள்கிறது. ஆனால் பெரிதாக சலிக்காமல் இருக்க ஏராளமான கதைகளை உள்ளே சேர்த்தியிருக்கிறார்கள். ஏழை, பணக்காரன் காதல் கதை. அதை இருவரின் பின்னணியாக தீயணப்புத்துறை, மருத்துவம் என மாற்றி கம்யூனிஸ்ட் கட்சி விசுவாசம், தேசப்பற்று ஆகியவற்றை மழைச்சாரல் போல சேர்த்து பரிமாறினால் டிவி தொடர் அமோகமாக ரெடி. தொடரைப் பார்க்க வைக்க நாயகன்,, நாயகியின் அழகுதான் பெருமளவு உதவுகிறது. நாயகன் வெளிவயமானவன், நாயகி அகவயமானவள். அவளுக்கு வரும் பிரச்னைகள் அனைத்துமே அவளது குண இயல்பு சார்ந்த அதை புரிந்துகொள்ளாத அம்மா, மருத்துவமனை சார்ந்த ஊழியர்களால் வருகிறது.   நாயகன், சோன் யான். நேர்மையானவன். சிறுவயதில் குடும்பத்தை தொலைத்தவன். அவனது அப்பா, நல்லவர். அதனால் பிழைக்கத் தெரியாதவராக இருக்கிறார். காசு இல்லாத காரணத்தால் மனைவி அவரை பிரிந்து சென்று இன்னொருவரை மணந்தது, கட்டுமான வேலை பறிபோனது காரணமாக மனம் ந

கலகக்கார கோமாளி - ஜோக்கரின் முன்கதை

படம்
ஜோக்கர் இயக்கம் டாட் பிலிப்ஸ் ஒளிப்பதிவு லாரன்ஸ் செர் இசை ஹில்டர் 1981ஆம் ஆண்டு நடைபெறும் கதை. இதில் ஜோக்கர் எப்படி உருவானார் என்பதை விவரிக்கிறது. அடக்கமுடியாமல் சிரிக்கும் குறைபாட்டால் அவதிப்படும் ஆர்தர் பிளேக்கிற்கு, இக்குறைபாட்டால் தனிக்குரல் நகைச்சுவையாளராக வாய்ப்பும் பறிபோகிறது. ஒரு நிகழ்ச்சியில் கல்ந்துகொண்டு பேசுகிறார். ஆனால் அதனை நாடு முழுவதும் கிண்டல் செய்து பேசுகிறார் டிவி தொகுப்பாளரான ராபர்ட் நீரோ. முதலில் இதற்காக மகிழும் பீனிக்ஸ், பின்னர் அது தன்னை கிண்டல் செய்வதற்கான முயற்சி என கோபமாகிறார். அவர் அதற்கு பதிலாக என்ன செய்தார். என்பதை ஜோக்கர் படம் சொல்லுகிறது. படத்தின் நிறம், இசை என ஜோக்கரின் இருண்ட மனநிலையை சொல்வது போலவே உள்ளது. அனாதையாக பிறந்தவரை எடுத்து வளர்க்கும் அவரது தாய்க்கும் மனநிலை பிறழ்வு பிரச்னை அவரின் வாழ்வை பரிகசிக்கிறது. கோதம் நகரில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் மருத்துவ சிகிச்சைகளை நகர நிர்வாகம் தடாலடியாக நிறுத்துகிறது. இதனால் ஏற்கெனவே சிதைந்த மனம் கொண்ட பீனிக்ஸின் சிரிப்பை நிறுத்தமுடியாமல் போகிறது. அவரின் கற்பனை உலகிலும் அவரா