இடுகைகள்

கோலா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வணிகம் மூலமே எதிரிகளை நசுக்கி அழிக்கும் வீரனின் ஏகபோக வணிக வாழ்க்கைக் கதை!

படம்
  ஆர்டினரி மேன் இமிக்கிரேட் டு முரிம் வேர்ல்ட் மாங்கா காமிக்ஸ்  ஜோ வீ, நவீன உலகில் வறுமையான சூழ்நிலையில் இருக்கிறான். அவன் கையில் பணமில்லை. உணவுகளை டெலிவரி செய்யும் வேலையை செய்தபடி படிக்கிறான். பொருளாதார பிரச்னைகளால் காதலும் கடந்துபோகிறது. அம்மாவையும் மருத்துவம் செய்து காப்பாற்ற முடியவில்லை. இந்த சூழ்நிலையி்ல் உணவு டெலிவரி செய்பவனை சொகுசு கார் ஒன்று மோதி சாய்க்கிறது. அப்போது கழுத்தில் உள்ள சிவப்பு முத்து டாலர் கீழே விழுகிறது. தனது ஒரே குடும்ப சொத்தான அதை கையில் தொடுகிறான். இறந்துபோகிறான். மறுபிறப்பு எடுக்கிறான்.  கொல்லர் குடும்பத்தில் பிறக்கிறான். ஒரு அண்ணன், தங்கை என இருவர் இருக்கிறார்கள். வட்டிக்கு கடன் வாங்கித்தான் உணவே சமைத்து சாப்பிடும் நிலை. இதை ஜோ தனது புத்திசாலித்தனத்தால் மாற்றுகிறான். ஒரு வணிகரிடம் வட்டிக்கு கடன் வாங்கி உழவுப்பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்கிறான். இதற்கான ஒப்பந்தம், சம்பளம் ஆகியவற்றை நவீன உலகில் வாழ்ந்த அனுபவம், செய்த வேலையிலிருந்து கிடைத்த அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்துகிறான். ஏறத்தாழ அனைத்தும் முதலாளித்துவ உத்திகள். ஆனால், அதை முரிம் உலகில் பல

சில பானங்களை கூலிங்காக குடிக்கவேண்டிய அவசியம் என்ன?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி சில பானங்களை கூலிங்காக குடித்தால் நன்றாக இருக்கிறதே ஏன்? பொதுவாகவே மூளை கொடுக்கும் சிக்னல்களில்தான் நம் உடல் இயங்குகிறது. ஆச்சி மோர் குடிக்கலாமா, டெய்லி கம்பெனியின் பன்னீர்சோடா, அல்லது மாங்கனிச்சாறு குடிக்கலாமா என்பதெல்லாம் உங்கள் தாகம் பொறுத்ததல்ல. குறிப்பிட்ட பானங்களில் உள்ள வேதிப்பொருட்கள் மூளையில் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்க வைக்கின்றன. எனவே குறிப்பிட்ட பானங்களை கேட்டு வாங்கிக் குடிக்கிறோம். பெப்சி போன்றவற்றை குளிர்ந்த நிலையில் இல்லாமல் குடித்தால் இரும்புச்சத்து டானிக் போலவே இருக்கும். எனவே அதனை கூலிங்காக குடியுங்கள் என அக்கம்பெனியே விளம்பரம் செய்கிறது. இந்த பானங்கள் நம் நாக்கிலுள்ள சுவை உணர்வை மட்டுப்படுத்துகின்றன. எனவே நமக்கு கோலா குடித்தால் நன்றாக இனிப்பாக உள்ளது போலத் தெரிகிறது. இதை எப்படி பார்க்கலாம் என்றால் டீ குடிப்பதை விட கூலிங் கோலா ஓகே என்றளவு மனிதர்கள் இதற்கு அடிமையாகிறார்கள். 

கூல்ட்ரிங்க்ஸிலுள்ள கார்பன் டை ஆக்சைடு சூழலைப் பாதிக்குமா?

படம்
மிஸ்டர் ரோனி குளிர்பானங்களில் கார்பனைப் பயன்படுத்துகிறார்கள். இதன்விளைவாக, சூழலில் கார்பன் அளவு அதிகரிக்குமா? இதற்கான பதிலை நான் நாமக்கல்லில் தயாரித்த டெய்லி - ஆரஞ்சு சோடாவை ஒரு சிப் அடித்தபடிதான் எழுதுகிறேன். நண்பர்களே, குளிர்பானத் தயாரிப்பு காரணமாக வெளியிடப்படும் கார்பன் வெளியீடு வேறு. அதனைக் குடித்துவிட்டு ஏப்பம் விடும்போது வரும் கார்பன் அளவீடு வேறு. மனிதர்கள் சராசரியாக பயன்படுத்தும் பொருட்களின் அளவுப்படி கார்பன் அளவு மதிப்பிடப்படுகிறது. நீங்கள் கூறும் கார்பன் அளவு என்பது தொழில்துறையில் அளவிடுவார்கள். மற்றபடி குறிப்பிட்ட பயன்பாட்டால் எவ்வளவு என அளவிடுவதுதான் சரியான அளவு. கார்பன் டை ஆக்சைடு குளிர்பானத்தில் மிக குறைவான அளவே இருக்கும். அதனால் கார்பன் அதிகரிப்பு என்பது மேலோட்டமாக பிரச்னையை புரிந்துகொள்வது என்றே எனக்கு படுகிறது. குளிர்பான பாட்டிலை குடித்துவிட்டு தீவைத்து எரிக்காமல் அதனை முறைப்படி மறுசுழற்சிக்கு அனுப்புங்கள். அதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். கார்பனின் அளவையும் நாம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும். நன்றி - பிபிசி

கண்ணாடி பாட்டில்களில் குளிர்பானம் குடித்தால் நன்றாக இருக்கிறதே ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி கண்ணாடி பாட்டில்களிலிருந்து எடுத்து குளிர்பானம் குடித்தால் நன்றாக இருக்கிறதே? அமெரிக்கப் படங்கள் நிறையப் பார்ப்பீர்கள் போல. ஆனால் அது உளவியல் சார்ந்ததே. இன்று கடைகளில் பாலிமர் அதாவது பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் குளிர்பானங்கள் விற்கப்படுகின்றன. கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படுவது குறைந்து விட்டது. மற்றபடி பிளாஸ்டிக், கேன் என்பது வெரைட்டி காட்டும் வேலை. அதில் சுவை மாறுவது என்பது உங்கள் மனநிலையின் விளையாட்டு. நன்றி - பிபிசி

செயற்கை இனிப்புகள் எடையைக் குறைக்குமா? கூட்டுமா?

படம்
சயின்ஸ் ஃபோகஸ் இதில் கிடைக்கும் உண்மையாக முடிவுகளைச் சொல்வது மிக கடினம்.  செயற்கை இனிப்புகள் ஒருவரின் உடல் எடையைக் கூட்டுகிறதா என்பது மிக நீண்ட கால ஆய்வில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இதிலும் துல்லியம் இருக்க வேண்டும். டயட் சோடாவைக் குடிக்கும் ஒருவருக்கு எடை கூடுமா என்பதை எப்படிக் கூறுவது, அல்லது பருமனானவர்கள் அனைவரும் குளிர்பானங்களை குடிக்கிறார்கள் என்று ஆராயவும் முடியாது.  2016 ஆம் ஆண்டு கோக்கிரேன் என்ற அறக்கட்டளை செயத ஆராய்ச்சியில் செயற்கை இனிப்புகள், உடலின் எடைக்கு காரணமான கலோரியை பெருமளவு குறைப்பதாக ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  இயற்கையாக எளிதில் உங்களுக்கு கிடைக்கும் பழங்களை பழச்சாறாக்கி பருகுங்கள். அதுவே உடல்நலனைக் காக்கும்.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்