கூல்ட்ரிங்க்ஸிலுள்ள கார்பன் டை ஆக்சைடு சூழலைப் பாதிக்குமா?
மிஸ்டர் ரோனி
குளிர்பானங்களில் கார்பனைப் பயன்படுத்துகிறார்கள். இதன்விளைவாக, சூழலில் கார்பன் அளவு அதிகரிக்குமா?
இதற்கான பதிலை நான் நாமக்கல்லில் தயாரித்த டெய்லி - ஆரஞ்சு சோடாவை ஒரு சிப் அடித்தபடிதான் எழுதுகிறேன். நண்பர்களே, குளிர்பானத் தயாரிப்பு காரணமாக வெளியிடப்படும் கார்பன் வெளியீடு வேறு. அதனைக் குடித்துவிட்டு ஏப்பம் விடும்போது வரும் கார்பன் அளவீடு வேறு.
மனிதர்கள் சராசரியாக பயன்படுத்தும் பொருட்களின் அளவுப்படி கார்பன் அளவு மதிப்பிடப்படுகிறது. நீங்கள் கூறும் கார்பன் அளவு என்பது தொழில்துறையில் அளவிடுவார்கள். மற்றபடி குறிப்பிட்ட பயன்பாட்டால் எவ்வளவு என அளவிடுவதுதான் சரியான அளவு. கார்பன் டை ஆக்சைடு குளிர்பானத்தில் மிக குறைவான அளவே இருக்கும். அதனால் கார்பன் அதிகரிப்பு என்பது மேலோட்டமாக பிரச்னையை புரிந்துகொள்வது என்றே எனக்கு படுகிறது.
குளிர்பான பாட்டிலை குடித்துவிட்டு தீவைத்து எரிக்காமல் அதனை முறைப்படி மறுசுழற்சிக்கு அனுப்புங்கள். அதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். கார்பனின் அளவையும் நாம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும்.
நன்றி - பிபிசி