ஓசோன் படலம் அழிந்தால் என்னாகும்? - சிஎஃப்சி விபரீதம்
giphy.com |
மிஸ்டர் ரோனி
குளோரோஃப்ளோரோ கார்பன் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன ஆகும்?
குளோரோப்ளோரோ கார்பன்களைப் பற்றி ஏராளமான விஷயங்களை பள்ளியில் படம் வரைந்து பாகம் குறித்து படித்திருப்பீர்கள். பசுமை இல்ல வாயுக்களில் ஒன்று, நம் தலைக்கு மேல் உள்ள 30 கி.மீ. பரப்பில் உள்ள ஓசோன் படலத்தைப் பாதிக்கிறது.
ஓசோன் வாயுவின் அளவைக் குறைக்கும் குளோரோஃப்ளோரோ கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் ரூம் போட்டு யோசித்தனர். இதன்விளைவாக பிறந்ததுதான் மான்ட்ரியல் நெறிமுறை ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் 197 நாடுகள் இணைந்துள்ளன. இந்நாடுகளுக்கு ஒரு நோக்கம் உண்டு.
ஒரே நோக்கம்தான் ப்ரோ. , 2050 க்குள் உலகில் பல்வேறு செயல்பாடுகளின் விளைவாக வெளியேறும் குளோரோஃப்ளோரோ கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவதுதான். இல்லையெனில் கட்டுப்படுத்த முடியாத மழை, வெள்ளம், அனல் காற்று என வெப்பமயமாதலின் விளைவுகள் அதிகரிக்கும். கூடுதலாக புற ஊதாக்கதிர்கள் உள்ளே வருவதால் தோல் புற்றுநோய் பாதிப்பும் அதிகரிக்கும்.
நன்றி - பிபிசி