வெயில், மழையால் மனநிலை மாற்றங்கள் நடக்குமா?





Angry John Cena GIF
giphy.com




மிஸ்டர் ரோனி

வெயில் அதிகரிக்கும்போது நமக்கு ஏன் கோபம் அதிகரிக்கிறது?


வரிசையில் ரேஷன் வாங்க நிற்கிறீர்கள். அப்போது டீன் ஒருவன் கேசுவலாக உள்ளே வந்து அண்ணே அரிசியைப் போடுங்க என்று கார்டை நீட்டினால், டேய் வரிசையில் வந்து நில்லு என்று சொல்லுவீர்கள்தானே?  அனைவரும் கடையில் நின்று பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது குறுக்கே ஒரு சிறுவன் புகுந்து இந்த லிஸ்டுல இருக்குற பொருட்களைக் கொடுங்க அங்கிள் என என்று சொன்னாலும் இதே போலத்தான் நமக்கு கோபம் பொங்கும். ஆனால் இந்த கோபத்திற்கும் அன்று உதித்த சூரியனுக்கும் தொடர்பு இருக்கிறது.

1990 களில் இதுபற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், வெயில் அதிகமாக இருந்தபோது குற்றச்சம்பவங்கள் 2.7 சதவீதம் அதிகரித்ததாக கண்டுபிடித்தனர். இது இந்த நாடு மட்டுமல்ல, வெயில் அதிகமாக உள்ள நாடுகளில் அனைத்திலும் கோபக்காரர்கள் அதிகம் இருக்கிறார்கள். இதனால் போலீஸ் ஸ்டேஷன்களும் நிறைந்து உள்ளன.

2016 ஆம் ஆண்டு டெக்ஸாசிலுள்ள டெக் பல்கலைக்கழகத்தில் இரண்டு விளையாட்டு வீர ர்களிடையே இச்சோதனையை செய்தபோது, வெயில் அதிகமாக இருந்தபோது நிறைய பந்துகளை பௌல் செய்து அலம்பல் செய்தனர். எனவே வெயிலும் , மழையும், பனியும் நம் மனநிலையில் நிறைய கோளாறுகளை செய்கிறது என்பது உண்மைதான் என நிரூபிக்கப்பட்டுவிட்டது.

நன்றி - பிபிசி






பிரபலமான இடுகைகள்