மோடியை ஏன் அனைவருக்கும் பிடிக்கிறது? - சேட்டன் பகத்
நாட்டில் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள்? ஆனால் மோடி எதிர்மறையாகவே அதிகம் பேசப்பட்டிருக்கிறார். இன்றுவரையிலும் கூட அப்படித்தான். ஆனால் அவரைத்தான் வலிமையான தலைவர்களாக மக்கள் கருதி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஏன் அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, மன்மோகன் சிங், அத்வானி ஆகியோரை விட மோடி பெரிய தலைவராக இருக்கிறார்?
தன்னை அவர் அப்படி உருவாக்கிக் கொண்டது முக்கியமானது. மன்மோகன் சிங்கை குறைத்து மதிப்பிட முடியாது. தாராளவாத சீர்திருத்தங்களை தொண்ணூறுகளில் அமல்படுத்திய நிதி அமைச்சர், முன்னாள் பிரதமராகவும் பணியாற்றியிருக்கிறார். தான் செய்யும் வேலைகளை செய்யப்போவதை எதற்கு என்று மக்கள் முன் சொற்பொழிவாற்றியது நினைவுக்கு வருகிறதா? அப்படி ஒரு காட்சி மன்மோகனுக்கே இருக்காது. ஏனெனில் அவர் இயல்பு அதல்ல.
மோடி முந்தைய பிரதமரிடம் இல்லாத அம்சங்களை கொண்டிருப்பது இங்குதான். மோடி அவரது துறைசார் அமைச்சர்கள் பேசுவதற்கு முன்னர் இவரே அறிவிப்புகளை கூறிவிடுவார். எளிமையாக பேசுவார் என்பது முக்கியமானது.
குறிப்பாக, குஜராத் முதல்வராக தன்னை நிரூபித்திருக்கிறார். அதேசமயம் இந்து மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சிகளை அவர் செய்தார் என்பது மறுக்க முடியாது. ஆனால் மக்களின் பெரும்பான்மை அவரைத் தேர்வு செய்த அவரின் குஜராத் மாதிரி முக்கியமான காரணம்.
மோடியை தேர்வு செய்ய மறைமுகமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முக்கியமான காரணம். ஏராளமான ஊழல்கள், வயதான தலைவர்களின் திமிர்பேச்சுகளும் காரணம், இவர்களின் வாயை மட்டுமல்ல அரசையும் ஒரு கட்டத்தில் மன்மோகனால் கட்டுப்படுத்த முடியவில்லை. நிதி அமைச்சராக வென்றாலும் நிர்வாகியாக மன்மோகன் ஜெயிக்க முடியவில்லை என்பதே உண்மை.
உலகமய காலகட்டத்தில் தொழில், பணம் என புதைந்த மக்களுக்கு அவர்களின் மதம் சார்ந்த நம்பிக்கையை மோடி கொடுத்து ஜெயித்தார். அதற்கான பக்கவிளைவுகளை நாம் சந்தித்து வருகிறோம். வெல்வதற்கான விஷயங்களை அவர் தெரிந்துகொண்டுவிட்டார். அதுதான் மக்களை அவர்பால் ஈர்த்தது. மோடிக்கு எதிராக நின்றவரின் பலவீனம், அவரை வெல்ல வைத்துவிட்டது. முக்கியமானது என காலத்தை சொல்ல வேண்டும்.
இந்து பெருமையை தன் தலையில் சூடியுள்ள புத்தியில் உறைய வைத்துள்ளவர் பிரதமராகியுள்ளார். அதுதான் விதி என்றால் மக்கள் ஏற்கத்தான் வேண்டும்.
சேட்டன் பகத்தின் மேக்கிங் இந்தியா ஆசம் நூலைத் தழுவியது.