இடுகைகள்

வழித்தடம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அகதிகளைத் தடுக்கும் இரும்புவேலி- பாதிக்கப்படும் காட்டு உயிரினங்கள்

படம்
  அகதி வேலியால் பாதிக்கப்படும் உயிரினங்கள்! போலந்து நாடு, பெலாராஸ் நாட்டிலிருந்து வரும் அகதிகளைத் தடுக்க வேலி அமைத்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியா வழியாக வரும் அகதிகளை தடுப்பதே இதன் நோக்கம். இந்த வேலி பியாலோவிசா (Białowieża Forest) எனும் காட்டின் இடையே அமைக்கப்படுகிறது. தொன்மையான காடான இங்கு, 12 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய இடமாக பியாலோவிசா காடு அறிவிக்கப்பட்டுள்ளது.  போலந்து மற்றும் பெலாரஸ் இடையே கட்டப்படும் வேலியின் நீளம் 130 கி.மீ. ஆகும். இதன் உயரம் 5.5 மீட்டர் ஆகும். உலகம் முழுக்க இப்படி கட்டப்பட்டுள்ள கம்பிவேலி, சுவர்களின் தோராய நீளம் 32 ஆயிரம் கி.மீ. ஆகும். இதன் காரணமாக உணவு, நீர் தேடி உயிரினங்கள் பிற நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் 700 பாலூட்டி இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  பியாலோவிசா காட்டில் பூஞ்சைகள், மரங்களில் வளரும் பாசி (mosses), பாறைகளில் வளரும் செடி (lichens), பூச்சி வகைகள் ஆகியவை காணப்படுகின்றன.  மேலும் ஐரோப்பிய காட்டெருமை, காட்டுப்பன்றி, ஓநாய், லின்க்ஸ் எனும் பூனை ஆகிய உய

வியக்க வைக்கும் புறாக்களின் ஞாபகசக்தி!

படம்
  நினைவுகளை மறக்காத பறவை! தொன்மைக் காலத்தில், புறாக்களை தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வந்ததை பலரும் அறிவோம். புறாக்களை அக்கால மக்கள், தேர்வு செய்ததற்கு அதன் திசையறியும் திறன்தான் காரணம். ஒருமுறை பறந்த வழித்தடத்தை புறா, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் வைத்திருப்பது ஆச்சரியம்தானே? இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புறாவின் நினைவுகூரும் திறனை ஆய்வு செய்து வியப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.  மனிதர்கள் அல்லாத உயிரினங்களின் நினைவுகளை சோதிப்பது சவால் நிரம்பியது.  “இப்படி நடைபெறுவது மிகவும் அரிதானது. ஒரு நிகழ்ச்சி நடைபெற்று இத்தனை ஆண்டுகள் ஆனபிறகும் கூட தேவைப்படும்போது, அதனைப் புறா மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வது  ஆச்சரியப்படுத்துகிறது” என்றார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக விலங்கியலாளர் டோரா பைரோ.  2016ஆம் ஆண்டு தொடங்கி, புறாவின் நினைவுகள் பற்றிய ஆராய்ச்சியை பைரோ தலைமையிலான ஆய்வுக்குழுவினர் செய்து வருகிறார்கள். இவர்களின் ஆய்வுக்கட்டுரை, புரோசீடிங் ஆஃப் தி ராயல் சொசைட்டி என்ற இதழில் வெளியாகியுள்ளது. இக்குழுவினர் வீட்டில் வளர்க்கும் புறாக்களை 8 கி.மீ. தொலைவிற்கும் அதிகமாக தூரத்திற்கு பறக