இடுகைகள்

தியோ ஏஞ்சலோ பவுலோஸ் தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பயணிக்கும் வீரர்கள் அத்தியாயத்தின் நிறைவுப்பகுதி

படம்
தொடர்ச்சியான காட்சிகள் மரபான தொகுக்கும் எளிய தன்மையை தருகிறதா?        இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான். மிகவும் அந்தரங்கமானது என்றுகூட சொல்லலாம். தொடர்ச்சியான காட்சியினை படமாக்குவது என்பது என்னைப் பொறுத்தவரை பெரும் சுதந்திரத்தைத் தருகிறது. ஆனால் பார்வையாளர்கள் அதில் ஆழ்ந்து கவனம் கொண்டு இணைந்திருக்க வேண்டியது அவசியம் என்பது உண்மைதான். மரபான தொகுக்கும் முறையில் தொடர்ச்சியான காட்சிகளை தொகுப்பது சிரமம்தான். காலியாக இருக்கும் திரையில் இயக்கம் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். தொடர்ச்சியான காட்சி என்பது மான்டேஜ் எனும் கருத்தினை உள்ளே கொண்டதாக உள்ளது. ஆனால் அதற்கு பதிலாக மரபான தொகுக்கும் முறை என்பது பல்வேறு விஷயங்களை ஒரு காட்சியில் சொல்ல உதவுகிறது. கேமராவின் இயக்கத்தினோடு பார்வையாளர்களிடம் வேறு இடத்தை காணக்கூறுவது போல. நடுவில் உள்ள காட்சியினை வெட்ட மறுப்பது, அக்காட்சியினை பார்வையாளர்களை ஆழமாக கவனிக்க வைத்து அவர்களது கண்ணில் படும் விஷயங்களை குறிப்பிடத் தகுந்ததாக மாற்றிவிட முடியும். படத்தின் தயாரிப்பின் போது எதிர்கொண்ட சிக்கல்கள் என்ன? முதல் சிக்கலாக நான் நினைப்ப

பயணிக்கும் வீரர்கள்- கிரேக்க வரலாற்றினூடே ஒரு பயணம்

படம்
உங்களின் முதல் இரு படங்கள் போலில்லாது சில எழுச்சியூட்டும் சம்பவங்களுக்கு பயணிக்கும் வீரர்கள் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் அரசியல் விஷயங்களுக்கும் எழுச்சியூட்டும் விஷயங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?        பாலியல் சார்ந்த விஷயங்கள் உருவாவது கதாபாத்திரங்களுக்கிடையேதான். கிளிமெம்னெஸ்ட்ரா, ஈகிஸ்டஸ் மீது கொள்ளும் காதல் மற்றும் எலக்ட்ராவின் எதிர்வினை அவர்களுடைய ஆளுமை சார்ந்த அவற்றை மட்டுமே அடிப்படையாக கொண்டதுதான். இது போன்ற உறவுகள் தனிப்பட்ட ரீதியில் நின்றுவிடக்கூடியவைதான். அம்மாவின் காதலன் என்பதைத் தாண்டி ஈகிஸ்டஸ் சில குணங்களை கொண்டவனாக இருக்கிறான். அவன் ஒரு நம்பிக்கைத் துரோகி கூட. அவன் கொல்லப்படுவது கிளிமெம்னெஸ்ட்ராவுடன் கொண்ட காதலுக்காக மட்டுமல்ல அவனது அகும்மெம்னோனை விடுவித்து ஜெர்மன்காரர்களிடம் காட்டிக் கொடுத்ததன் காரணமாகத்தான். எலக்ட்ராவின் மீதான வன்புணர்ச்சி முழுக்க அரசியல்ரீதியிலானது, எந்த ஒரு வடிவிலான வன்முறையின் கீழேயும் அதன் ஆதாரமாக பாலுணர்வுத் தூண்டுதல்தான் இருக்கிறது. எலக்ட்ரா விசாரணையின்போது வன்புணர்ச்சி செய்யப்படுவது  படத்தி

கிரேக்க நிலப்பரப்பினூடே ஒரு வரலாற்றுப்பயணம்-பயணிக்கும் வீரர்கள்

படம்
உங்களது கதாநாயகர்களை புராண புனைவில் ஈடுபடுத்தி வெவ்வேறு வரலாற்று உள்ளடக்கங்களில் பொருத்துவது ஆபத்தானதாக தெரியவில்லையா?  நோக்கம் மற்றும் சூழல்கள் வேறுவேறானவை. ஒன்றுபோன்றவையல்ல. வரலாறு அவர்களை பாதிக்கிறது. மாற்றங்களை செய்யத்தூண்டி அவர்களை மாற்றுகிறது. மிகத்துல்லியமாக ஒரு வரலாற்றுத் தருணத்தில் கிடைக்கும் இடங்களில் அவர்கள் நகர்ந்து செல்வதற்கு உதவும் வகையில் கதாபாத்திரங்களை வடிவமைக்க முயற்சிக்கிறேன். ஆகஸ்ட் 4 ஆம் தேதி விருந்தொன்றில் ஈகிஸ்டஸ் எனும் ராணுவ வீரன் பொய்யான ஒரு கூட்டிணைவை ஜெர்மன் வீரரிடம் ஏற்படுத்திக்கொள்கிறான். அகமெம்மோன் இறப்பிற்கு பின்னே அவனது அதிகாரம் கொண்ட ஆளுமை மற்றவர்களுக்கு தெரியவருகிறது. ஈகிஸ்டஸ் யார் என்பதை ஆராய்ந்து பார்த்தால் தனிப்பட்ட நோக்கம், உளவியல் சார்ந்த தன்மையை முதன்மையாக கொள்ள வேண்டியிருக்கிறது. அது எனக்கு ஆர்வமூட்டுவதாக இல்லை. ப்ரெச்டியன் புராணம் போல படத்தினை உருவாக்க முயற்சி செய்ய விரும்புகிறேன். என்றாலும் உளவியல் தன்மையின் முன்னிலையை விரும்பவில்லை. எப்படி இதில் திரைக்கதையினை இணைக்க முடிந்தது? புராண புனைவை பயன்படுத்தியிருக்கிற விதம

கிரேக்க நிலப்பரப்பினூடே ஒரு வரலாற்றுப்பயணம்: பயணிக்கும் வீரர்கள்

படம்
கிரேக்க நிலப்பரப்பினூடே ஒரு வரலாற்றுப்பயணம்: பயணிக்கும் வீரர்கள் மைக்கேல் டிமோ பவுலோஸ் மற்றும் ப்ரைடா லியப்பாஸ் – 1974 ஆங்கில மொழிபெயர்ப்பு: டான் பைனாரு தமிழில்: லாய்ட்ட்டர் லூன் பயணிக்கும் வீரர்கள் படத்தினை திட்டமிட்டு தொடங்கும்போது, அந்த நேரத்தில் அரசியல் சூழ்நிலைகள் எப்படி இருந்தன?       படத்தினை உருவாக்கத் தொடங்கிய காலம் மார்க்கென்சினிஸின் விடுதலை பெறுவதற்கான கலகங்கள் தொடங்கிய காலமாகவும் தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதற்கு முந்தைய காலமாகவும் இருந்தது. 1939 – 52 காலத்தில் குறிப்பிடவேபடாத பல வரலாற்று நிகழ்வுகளை கொண்டுள்ளதை தணிக்கை அமைப்பு அங்கீகரிக்க மறுத்துவிட்டது. ஆயினும் நாங்கள் படத்தினை காட்சிபடுத்த திட்டமிட்டோம். நாங்கள் படத்தினை தொடங்கும் முன்னே வன்முறைச் சம்பவங்கள் நிகழத்தொடங்கிவிட்டன. இந்த முறையில் படத்தினை உருவாக்கினால் கிரீசில் அதனைத் திரையிட என்றுமே முடியாது. ஆனால் இந்த முடிவில் என்ன புத்திசாலித்தனம் உள்ளது? தயாரிப்பாளரிடம் இது குறித்து பேசி படம் கிரீசில் தடை செய்யப்பட்டால் அதனைக் கொண்டே அயல்நாட்டில் திரையிடும் வாய்ப்பை பெற முயற்சிக்கலாம்

36 நாட்களில்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ் நேர்காணல் (தமிழில்:லாய்ட்டர் லூன்)

படம்
மறுகட்டமைப்பு படமானது ஜெர்மன் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டது தங்களுக்கு பெரும் உதவியாக இருந்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.        உண்மைதான். ப்ரான்சில் அப்படம் விருதுபெறவும் அதுதான் காரணம். இங்கிலாந்தில் பிபிசியில் அப்படம் திரையிடப்பட்டது. கிரீஸ் எனும் சிறிய நாட்டில் இப்போது நான் முக்கியமான மனிதராக மாறி இருக்கிறேன் உலகளவிலான அங்கீகாரம் பெற்ற ஒருவரை நீங்கள் எந்தக்காரணமும் இல்லாமல் சிறையில் அடைக்கமுடியாது. கிரீசில் கலாசார, பண்பாட்டு முயற்சிகளுக்கு இருக்கும் வாய்ப்பு, இடம் என்று இதனைக் கூறலாமா?        எந்தப்பணியிலும் நாங்கள் இதனை மனதில் கொண்டுதான் வேலை செய்கிறோம். எ.கா: சின்குரோனோஸ் கினிமாடோகிராபோஸ் எனும் சினிமா தொடர்பான பத்திரிகையில் நான் தனிப்பட்டரீதியாக அதில் பங்காற்றவில்லை. அது என்னை அடையாளப்படுத்தும்போது மிக எளிதாக இடதுசாரி பதிப்பகமாக அடையாளப்படுத்தப்படும் அபாயம் உள்ளது என்பதை நான் மறுக்கமுடியாது. உங்களுடைய திரைப்பட பாணி மிகவும் நீள்வடிவம் போலானது. திரையில் இருப்பதை புரிந்துகொள்ள பார்வையாளர்களும் பங்களிக்கவேண்டும் என்ற முறையில்தான் அது உள்ளது.