கிரேக்க நிலப்பரப்பினூடே ஒரு வரலாற்றுப்பயணம்: பயணிக்கும் வீரர்கள்

கிரேக்க நிலப்பரப்பினூடே ஒரு வரலாற்றுப்பயணம்: பயணிக்கும் வீரர்கள்மைக்கேல் டிமோ பவுலோஸ் மற்றும் ப்ரைடா லியப்பாஸ் – 1974ஆங்கில மொழிபெயர்ப்பு: டான் பைனாரு

தமிழில்: லாய்ட்ட்டர் லூன்







பயணிக்கும் வீரர்கள் படத்தினை திட்டமிட்டு தொடங்கும்போது, அந்த நேரத்தில் அரசியல் சூழ்நிலைகள் எப்படி இருந்தன?

      படத்தினை உருவாக்கத் தொடங்கிய காலம் மார்க்கென்சினிஸின் விடுதலை பெறுவதற்கான கலகங்கள் தொடங்கிய காலமாகவும் தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதற்கு முந்தைய காலமாகவும் இருந்தது. 1939 – 52 காலத்தில் குறிப்பிடவேபடாத பல வரலாற்று நிகழ்வுகளை கொண்டுள்ளதை தணிக்கை அமைப்பு அங்கீகரிக்க மறுத்துவிட்டது. ஆயினும் நாங்கள் படத்தினை காட்சிபடுத்த திட்டமிட்டோம். நாங்கள் படத்தினை தொடங்கும் முன்னே வன்முறைச் சம்பவங்கள் நிகழத்தொடங்கிவிட்டன. இந்த முறையில் படத்தினை உருவாக்கினால் கிரீசில் அதனைத் திரையிட என்றுமே முடியாது. ஆனால் இந்த முடிவில் என்ன புத்திசாலித்தனம் உள்ளது? தயாரிப்பாளரிடம் இது குறித்து பேசி படம் கிரீசில் தடை செய்யப்பட்டால் அதனைக் கொண்டே அயல்நாட்டில் திரையிடும் வாய்ப்பை பெற முயற்சிக்கலாம் என்று கூறினேன். அவர் அந்த யோசனைக்கு இசைந்தார். 1974 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பயங்கரவாதம் அதன் உச்சத்தை எட்டியது. படத்தினை உருவாக்குவதில் முனைந்தோம். தணிக்கை அமைப்பில் பிரச்சனை ஏற்பட்டாலும் சமாளிக்க தயாராகவே இருந்தோம்.

இதன் மூலமான அடிப்படை சிந்தனை என்ன?

      ஒரு சுற்றுலா நிறுவனம் நாட்டின் சிறிய நகரங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக முதலில் சிந்தித்தேன். நடிகர்கள் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு செல்லும்போது கிரேக்க நாட்டின் நிலப்பரப்பு, வரலாறு அந்த பயணம் வழியே வெளிப்படுவதாக சிந்தித்தேன். பிறகே நான் நடிகர்களுக்கு இடையேயான உறவில் புனைவான விஷயங்களைச் சேர்த்தேன். அப்பா, மகன், அம்மா, காதலி, அவர்களுடைய குழந்தைகள்... அதிகாரம்.. கொலை என இவை முன்னமே இருந்தாலும் இதனிடையே உள்ள கற்பனைதான் கதையில் முக்கியமானதாக உள்ளது. இந்த விடுதலை குறித்த முடிவு என்பதை வரலாற்றில் கிடைக்கும்  பாடமாக தொடக்கத்தில் என் மனதில் கூட நினைத்திருக்கவில்லை. 1939 இலிருந்து 1952 வரையிலான காலகட்டம் குறித்து அறிய சமூகப்பிரிவு குறித்தவை புனைவான பகுதியினை செறிவாக்க உதவின. 36 நாட்களில் படம் சர்வாதிகாரத்தை வெளிக்காட்டியது. பயணிக்கும் வீரர்கள் படம் அதன் தொடர்ச்சியாக சிலரின் பெயர்கள் மற்றும் குறிப்புகளைக் கொண்டுள்ளது. 1952 ஆம் ஆண்டுவரை நடைபெற்றவைகளைக் குறித்து இப்படம் பேசுகிறது.  அந்த ஆண்டு நடைபெற்ற படுகொலைகளின் காரணமாக சிவில் போர் முடிவிற்கு வந்தது. வலதுசாரிகட்சியானது புனிதப்படுத்தப்பட்டு அக்கட்சியின் பபாகோ என்பவரின் வெற்றியாக கூறப்பட்டது.

 படைத்தளபதி பகிரங்கமாக நடத்திய சர்வாதிகார ஆட்சி மாறி இன்னொரு படைத்தலைவர்(விடுதலைவாதி) மறைமுகமாக  சர்வாதிகார ஆட்சியாக நடத்தி மக்களை விரக்தியடையச் செய்தார் என்பதை கதை பதிவு செய்கிறது. என் கதைக்கு நான் வந்து சேருவதற்கு முன்னால் பல இடையூறுகள் எனக்கு ஏற்பட்டன. அவற்றை தொகுத்து ஒரு அமைப்பாக்க முயன்றேன். இந்த வகையில் மரபான சிக்கல்களான பசி, இறப்பு, துன்பங்கள் என இன்னும் பலவற்றை நான் கவனமாக தவிர்த்துவிட்டேன்.  மெட்டாக்சஸ் ஆட்சியை எதிர்த்தவர்கள், இரண்டாம் உலகப்போரில் போரிட்டவர்கள், தேசிய விடுதலை முன்னணியில் இணைந்து பின் மலை பதுங்குகுழிகளில் வாழ நேர்ந்தவர்கள் குறித்து பதிவு செய்ய விரும்பினேன்.

சர்வாதிகார நிலைப்பாடுகளால் அதன் எதிர்ப்பான தலைமுறை உருவாகி வருவார்கள் என்பது இயல்பாக இயற்கையான இடதுசாரி பார்வை என்று கொள்ளலாம். அப்படி உருவாகும் மூன்று மனிதர்கள் அக்கருத்தை பிரதிபலிக்கிறார்கள். 1939 ஆம் ஆண்டு ராணுவ வீரர் மற்றும் அவரது கருத்தினை ஆதரிக்கும் இரு இளைஞர்கள் எனலாம். இவர்கள் அனைவரும் அரசு எதிர்ப்பு கூட்டணியில் இணைவதால் கைது செய்யப்படுகிறார்கள். இதில் ஒருவர் 1950 இல் கம்யூனிஸ்ட் அல்ல என்று நிரூபிக்கப்படுவதால் விடுவிக்கப்படுகிறார்.  மற்றொருவர் 1951 ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டத்தை கைவிட தொடர்ந்து மறுப்பதலால் தூக்கிலிடப்படுகிறார்.  மூன்றாவது இருப்பவர் உடல்நிலை சீரழிவினால் 1950 இல் விடுவிக்கப்படுகிறார். புரட்சி சிந்தனைகளை, அந்த நாடகத்தை தன் வாழ்வு முழுவதும் அப்படியே தொடர்கிறார். 1944 இலே அவரது நாட்காட்டி நின்றுவிட்டது. முழுப்படமும் இவரின் இந்த வாழ்க்கையினை அடையாளமாக கொண்டே நிகழ்கிறது. அனைத்து கதாபாத்திரங்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் ஒப்பந்தங்களால் கையெழுத்திட்டனர்; மற்றவர்கள் சிறையில் இறந்துபோயினர் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டனர்.

நீங்கள் புராண புனைவு என்பதை மரபான செயற்கையான வடிவத்தில் பயன்படுத்தவில்லை என்கிறீர்கள். ஆனால் அந்த புனைவு ஆழமாக எல்லைதாண்டி நம் சமூகத்தின் பண்பாட்டில் எதிரான விளைவை உருவாக்கி கருணையற்ற விபத்து என்பதாக மாற்றிக்காட்டுகிறதே? வரலாற்றுமாதிரியாக புராண புனைவை பயன்படுத்துகிறீர்கள், ஆனால் அவை தவறான முடிவுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. இதனைக் காணும் பார்வையாளர்கள் புராண புனைவுவின் இன்னொரு கருத்தாக விளக்கமாக கொள்ள முடியுமே?

புராண புனைவு என்பது படத்திற்கு மூலமானதல்ல. அகம்மெம்மோன், எலக்ட்ரா, பைலோடு, நிக்கோல் அலது பங்கோஸ் என எந்தப் பெயரையும் இஙுக் பயன்படுத்தவில்லை. பயன்படுத்தப்பட்ட ஆரெஸ்டெஸ் என்பதை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறோம். கதைக்கரு என்பதை கதாபாத்திரங்களை விட பெரியது. புரட்சி உள்ளிட்ட பல கருத்துகள் உள்ளன. புரட்சிக்கான கருத்தியலை அழமாக கொண்டிருக்கும் அவனை பல கதாபாத்திரங்களும் விரும்புகின்றன. அரெஸ்டெஸ் தனக்கு உண்மையாக இருப்பதோடு, தான் விரும்பும் நம்பும் லட்சியத்திற்காக கருத்திற்காக தன் உயிரையே இழக்கவும் தயாராக இருப்பவன்.

உங்களது கதாநாயகர்களை புராண புனைவில் ஈடுபடுத்தி வெவ்வேறு வரலாற்று உள்ளடக்கங்களில் பொருத்துவது ஆபத்தானதாக தெரியவில்லையா?

 நோக்கம் மற்றும் சூழல்கள் வேறுவேறானவை. ஒன்றுபோன்றவையல்ல. வரலாறு அவர்களை பாதிக்கிறது. மாற்றங்களை செய்யத்தூண்டி அவர்களை மாற்றுகிறது. மிகத்துல்லியமாக ஒரு வரலாற்றுத் தருணத்தில் கிடைக்கும் இடங்களில் அவர்கள் நகர்ந்து செல்வதற்கு உதவும் வகையில் கதாபாத்திரங்களை வடிவமைக்க முயற்சிக்கிறேன். ஆகஸ்ட் 4 ஆம் தேதி விருந்தொன்றில் ஈகிஸ்டஸ் எனும் ராணுவ வீரன் பொய்யான ஒரு கூட்டிணைவை ஜெர்மன் வீரரிடம் ஏற்படுத்திக்கொள்கிறான். அகமெம்மோன் இறப்பிற்கு பின்னே அவனது அதிகாரம் கொண்ட ஆளுமை மற்றவர்களுக்கு தெரியவருகிறது. ஈகிஸ்டஸ் யார் என்பதை ஆராய்ந்து பார்த்தால் தனிப்பட்ட நோக்கம், உளவியல் சார்ந்த தன்மையை முதன்மையாக கொள்ள வேண்டியிருக்கிறது. அது எனக்கு ஆர்வமூட்டுவதாக இல்லை. ப்ரெச்டியன் புராணம் போல படத்தினை உருவாக்க முயற்சி செய்ய விரும்புகிறேன். என்றாலும் உளவியல் தன்மையின் முன்னிலையை விரும்பவில்லை.