தியோ ஏஞ்சலோ பவுலோஸ்: நாடிழந்தவர்களுக்கான இரங்கற்பா








எப்படி குறைந்த அளவிலான தொகையினைக் கொண்டு திரைப்படத்தினை உருவாக்குகிறீர்கள்?

       நாங்கள் 9,000 மீட்டர் படம் எடுக்கத் தேவையான பொருட்களோடு உதவியாளர் இல்லாமல் சமாளித்துக்கொள்ளக்கூடிய ஒலிப்பதிவாளர் எங்களிடம் உள்ளார். அவர் ஒருமுறை தன்னுடைய அமைப்புகளை சரியாக ஒழுங்கமைத்துவிட்டால் மைக்ரோபோன், மற்றும் ஒலிப்பதிவுக் கருவிகளை யாரும் தனியாக மேற்பார்வை செய்யவேண்டிய அவசியம் இல்லை. தட்பவெப்பநிலை குறித்து கவலைப்படாமல் 25 நாட்களில் காட்சிகளை படமாக்குவோம் என்றாலும் மழை பெய்யும் காலத்தில் வேறு வழியே இல்லை. படப்பிடிப்பை தள்ளிவைத்துவிட்டு கிராமத்தார்களின் வீட்டில் தங்குவோம். அங்கு உணவு, விளக்குகள் என எவையும் இருக்காது என்பதால் எங்களுக்கு அச்சூழல் பெரும் போராட்டமாகவே இருக்கும். கையில் பிடித்துக்கொள்ளக்கூடிய விளக்கு, 500 கி.வாட் மின்மாற்றி சாதனம், இரண்டு மின்கலன்கள், சிறிய எடுத்துச் செல்லும் படியான மின்சக்தி அளிப்பான்  ஆகியவற்றை இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது வாடகைக்கு எடுத்துக்கொள்வோம். மேலும் இப்பொருட்களை படப்பிடிப்புத்தளத்திற்கு  கொண்டு செல்லவும், சில சமயங்களில் நாங்கள் உறங்கப் பயன்படும்படியான சிறுவண்டி ஒன்றும் எங்களிடம் உண்டு.

கிரீக் சினிமா என்ன நிலைமையில் தற்பொழுது இருக்கிறது?

       கிரீசில் தயாரிக்கப்படும் வேறெந்த படத்தையும் விட என்னுடைய படம் மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்படுவதாகும். ஆனால் அப்படி இந்த படம் ஒன்றுதான் உருவாக்கப்படுகிறது என்று கூறமுடியாது. ஒரு காலகட்டத்தில் மிகக் குறைந்த செலவில் கூட்டுறவு முறையில் இணைந்து படங்களை குறைந்த செலவில் உருவாக்கி வந்தார்கள்.

இது போன்று படங்களை உருவாக்கும் முறையில் மனிதர்கள் தங்களுடைய சொந்தப் பணத்தைத்தான் செலவு செய்யவேண்டியுள்ளது. மாநில அரசின் மானிய உதவியோ அல்லது படத்தின் மீது ஆர்வம் கொண்ட என்னையொத்தவர்கள் போலவோ நிதியுதவி செய்ய இங்கு யாருமே இல்லை. இது அழகானதும் ஆபத்தான வணிகமும் கூட. தங்களுடைய பணத்தை முதலீடாகக் கொண்டு படத்தினைத் தயாரிப்பவர்களுக்கு பெரும்பாலும் அத்தொகை திரும்பக் கிடைக்காத நிலையில் நிச்சயமாக அடுத்து ஒரு படத்தினை உருவாக்க முயலமாட்டார்கள். கிரீக் சினிமாவின் விநியோகம் தயாரிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூன்று அல்லது நான்கு நிறுவனங்கள் இத்தகைய வகையிலான படங்களில் ஆர்வம் காட்டுவதில்லை.

இதுபோன்ற நிறுவனங்கள் ஆண்டுக்கு எத்தனை திரைப்படங்களைத் தயாரிக்கிறார்கள்?

       ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தது 15 லிருந்து 30 திரைப்படங்கள் வரை தயாரித்து வெளியிடுகின்றன. கிரீக் நாட்டின் நட்சத்திர நடிகர்களைக் கொண்டு பெரும் அளவிலான தொகை செலவிடப்பட்டு உருவாக்கப்படும் திரைப்படங்கள் அவை.

கிரீசில் எத்தனை திரையரங்குகள் உள்ளன?

எங்கள் நாட்டில் தொலைக்காட்சி இல்லை என்பதால் திரையரங்குகள் நிறையவே இருக்கின்றன. ஏதேன்ஸில் 200 திரையரங்குகள் உள்ளன. நாடு முழுவதும் 2000 திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன.

கிரீசில் மறுகட்டமைப்பு திரைப்படம் என்ன மாதிரியான வரவேற்பை பெற்றது?

       பத்திரிகையாளர்களுக்கு காட்டப்பட்ட காட்சி மிகப்பெரும் வெற்றி எனவும், அனைவரும் இது மிகப்பெரும் வணிகரீதியாக வெற்றி பெறக்கூடிய படம் என்று நம்புவதற்கு முனைந்தார்கள். ஆனால் சிக்கல் என்னவென்றால் திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டதா என்று என்னால் கண்டறிய முடியவில்லை. இதனை வெளியிடக் கூடியவர்கள் இப்படத்தினை புறக்கணிக்கக் கூடிய மனதினை உருவாக்கிக் கொண்டுவிட்டார்கள்.

யார் இந்த வெளியீட்டாளர்கள்?


       பொதுவான ரசனை கொண்ட விநியோகஸ்தர்கள்தான் அவர்கள். யார் தங்களுக்கு ஆண்டு முழுவதும் படத்தினை அளித்து தாங்கள் சம்பாதிக்க உதவுகிறார்களோ அவர்களுக்காக தங்கள் திரையரங்குகளை தயாராக வைத்திருப்பவர்கள் என்று அவர்களைக் கூறலாம். 


தியோ ஏஞ்சலோ பவுலோஸின் திரைப்படங்கள், அவரது நேர்காணல்கள், பத்திரிகைச் செய்திகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முகவரி: http://www.theoangelopoulos.gr/

பிரபலமான இடுகைகள்