36 நாட்களில்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ் நேர்காணல் (தமிழில்:லாய்ட்டர் லூன்)








மறுகட்டமைப்பு படமானது ஜெர்மன் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டது தங்களுக்கு பெரும் உதவியாக இருந்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

       உண்மைதான். ப்ரான்சில் அப்படம் விருதுபெறவும் அதுதான் காரணம். இங்கிலாந்தில் பிபிசியில் அப்படம் திரையிடப்பட்டது. கிரீஸ் எனும் சிறிய நாட்டில் இப்போது நான் முக்கியமான மனிதராக மாறி இருக்கிறேன் உலகளவிலான அங்கீகாரம் பெற்ற ஒருவரை நீங்கள் எந்தக்காரணமும் இல்லாமல் சிறையில் அடைக்கமுடியாது.

கிரீசில் கலாசார, பண்பாட்டு முயற்சிகளுக்கு இருக்கும் வாய்ப்பு, இடம் என்று இதனைக் கூறலாமா?

       எந்தப்பணியிலும் நாங்கள் இதனை மனதில் கொண்டுதான் வேலை செய்கிறோம். எ.கா: சின்குரோனோஸ் கினிமாடோகிராபோஸ் எனும் சினிமா தொடர்பான பத்திரிகையில் நான் தனிப்பட்டரீதியாக அதில் பங்காற்றவில்லை. அது என்னை அடையாளப்படுத்தும்போது மிக எளிதாக இடதுசாரி பதிப்பகமாக அடையாளப்படுத்தப்படும் அபாயம் உள்ளது என்பதை நான் மறுக்கமுடியாது.

உங்களுடைய திரைப்பட பாணி மிகவும் நீள்வடிவம் போலானது. திரையில் இருப்பதை புரிந்துகொள்ள பார்வையாளர்களும் பங்களிக்கவேண்டும் என்ற முறையில்தான் அது உள்ளது.

       இயற்கையின் பின்னால் செல்வதற்கு எப்போதும் ஒரு வழி இருக்கிறது என்று ட்ரேயர் கூறுவர். நீள்வடிவ செயல்முறை என்பது படைப்பாக்கச் செயல்முறையில் இயக்குநரோடு பார்வையாளர்களும் இணைந்து கொள்ள ஒரு வாய்ப்பு என்று கூறலாம். இது ப்ரெச்டியன் நிலை என்பது போல வெறும் கேமரா கோணங்களை மட்டும் சார்ந்ததல்ல. அது படத்தின் கட்டுமானத்தையும் சார்ந்ததும் கூட. ஒவ்வொரு திரைப்படமும் தனித்தனியான பகுதிகளால் உருவாக்கப்படுபவை. ப்ரெச்டியன் வரையறையான தன்னாட்சியைத் தாண்டி இவை தனித்தனியான ஒன்றை ஒன்று சார்ந்திருப்பவைதான். எதார்த்தமான பயிற்சி என்பதை பின் தொடர்ந்தால் ஒரு காட்சியின் தொடர்பிலும் அதனைக்குறிக்க முடியும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட நிலையில் படத்தில் கொலை செய்யப்படுபவரின் நிலை இயற்கையாகவே அதனை உண்மையானது போல மாற்றிக்காட்டுகிறது.

உண்மை போன்று தோன்றும் தன்மைக்கு ஒரு ஆதாரமாக ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகவும் கவனமாக உருவாக்கி இருப்பதை கூறலாம் என்று நினைக்கிறேன்.

       அவற்றோடு உள்ளே சிறிது வஞ்சப்புகழ்ச்சி அமைந்து இருக்கும். நாட்டினை ஆளும் ஆளும் சில குண்டர்களினை பகடியாக காட்ட விரும்பினேன். அரசியல் சினிமா செய்வதற்கு உதவியாய் இருந்த ரோஸி மற்றும் கோஸ்டா கவ்ராஸ் ஆகிய இரு படங்கள் எனக்கு நினைவில் தோன்றுகின்றன. இஸட் படத்திற்கு முற்றிலும் எதிரான படம் இது. கவ்ராவின் படத்தில் நாயகனுக்கும் அதன் எதிர்மறை கதாபாத்திரத்திற்கும் பல வேறுபாடுகள் தெளிவாக காட்டப்பட்டிருக்கும். இது மற்ற காட்சி சூழல்களுக்கும் பொருந்திவருகிறது. இவற்றில் அனைத்தும் முன்னமே திட்டமிடப்பட்டு, நடுத்தர வர்க்க கருத்தியலுக்கு பொருந்தி வரக்கூடிய ஒன்றாக உள்ளது. என்னுடைய படங்கள் கலப்பினமாக, தொடக்கம் மற்றும் இறுதி ஆகியவற்றை முறையாக கொண்டிருக்காது. கிரீசில் ஒஸிமா உருவாக்கி வெளியிட்ட தூக்குமரணம் என்பதை ஒத்த எதிர் பரபரப்பு தன்மையை அறிமுகப்படுத்த முயற்சித்தேன்.

ட்ரேயர் குறித்தும் அவரது சொற்களையும் முந்தைய கேள்விகளில் குறிப்பிட்டீர்கள். தங்களுக்கு படங்களின் உருவாக்கத்தில் அவரது படங்களின் ஏதேனும் தாக்கம் உள்ளதா?

        இல்லை. அவரது படமாக நான் அறிந்தது ‘ஜீன்டி ஆர்கின் லட்சியம் எனும் படம் மட்டும்தான் டைஸ் இரே எனும் படம் அண்மையில் கிரீசில் வெளியாகியுள்ளது என்றாலும் இதுவரை அதனை நான் காணவில்லை. அவர் பத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டியில் கூறியவற்றை பேசும்போது குறிப்பிட்டேன். இயக்குநர் கோபார்ட் படங்களோடு நான் உருவாக்கும் படங்களுக்கு தொடர்பிருக்கிறது. என்னுடைய தலைமுறை இயக்குநர்களின் படங்கள் என் படங்களின் தாக்கத்தை உருவாக்கினாலும் கோடார்ட் குறிப்பிட்ட அளவு அதிகம் எனலாம். தொடக்க்காலங்களில் அன்டோனியோனி மற்றும் கோடார்ட் ஆகியோரின் தாக்கம் எனக்குள் மிகுந்திருந்தது.

கிரீசில் திரைப்பட ஆர்வலர்கள் கொண்ட புதிய தலைமுறை இளைஞர்கள் நவீன சினிமா குறித்து ஆர்வம் கொண்டிருக்கிறதாமே?

       உண்மை. ஓஸிமாவின் தி செரிமனி (அ) ஸ்ட்ராப்பினுடைய ஓதோன் ஆகிய முக்கியமான அனைத்து படங்களையும் பார்த்து விடுகிறோம். அவர்களுக்கு படங்கள், பிடித்திருக்கிறதோ இல்லை அது குறித்து விவாதித்து கலந்துரையாடுகிறார்கள். சினிமா மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு இடையிலான போட்டியில் நாங்கள் போராட்டம் நடத்தினோம். சினிமா திரையிடலுக்கு விதித்த அதிகப்படியான வரி காரணமாக திரையரங்குகள் காலியாக மாறியதால் வரிக்கு எதிரான போராட்டம் தொடங்கியது. இந்த மாதிரியான விளக்கப்போராட்டங்கள் மேற்கு ஐரோப்பாவில் சாதாரணம் என்றாலும், கிரீசைப் பொறுத்தவரையில் இப்போதுதான் தொடங்கியுள்ளன.
 நன்றி:  

 www.fotor.com,

 http://www.theoangelopoulos.gr/






பிரபலமான இடுகைகள்