வேட்டைக்காரர்கள்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்














பயணிக்கும் வீரர்கள் படத்தினை வெம்மை கொண்டது என்று குறிப்பிட்ட நிலையில் குறிப்பிட்டுச் சொல்லுமாறு தன்னகத்தே ஒரு அழகை அது கொண்டுள்ளது. வேட்டைக்காரர்கள் படத்தில் ஒவ்வொரு நிகழ்வும் அதற்கான தனித்த ஒரு தொனியைக் கொண்டிருக்கிறது

உதாரணத்திற்கு?

உதாரணமாக, நீங்கள் இதுவரை எப்போதும் பயன்படுத்தாத கிளாப்போர்டு ஒன்றினை முன் கூறப்பட்ட பாடகி மற்றும் நடிகை குறித்த காட்சியில் பயன்படுத்தியிருப்பது. அல்லது காதல் காட்சி ஒன்றினை முற்றிலும் வேறுபட்ட முறையில் காட்சிபடுத்தியிருப்பது குறித்தும் கூறமுடியும்.

       அது சரியானதே. நான் அவற்றை குறிப்பிட்ட லயம் மற்றும் குறிப்பிட்ட மையம் என்பதை உடைக்கப் பயன்படுத்தினேன். இரண்டாவது காட்சி, இருவர் காதல் செய்வது தொடர்பான காட்சியில் குழுவாக மக்கள் மேசையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்க, அமெரிக்கப் பெண் நடந்து வந்து எதை வேண்டுமானாலும் வாங்க தயக்கமில்லாமல் கூறுவாள். அரசியல்வாதி அங்கே சாதாரண உடையில் அமர்ந்திருப்பார். ஒருவரிலிருந்து மற்றொருவர் என்று விரிந்து செல்லும் கேமரா இயக்கம் அந்தக் காட்சியின் மைய முக்கியத்துவத்தை நமக்குப் புரிய வைப்பதோடு, அந்த முகங்களில் ஏதொன்றோடும் பார்வையாளர்கள் தம்மை தொடர்புபடுத்திக் கொள்வதை தடுக்கிறது. மேலும் அவனுக்கு ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு திடும்மென மாறி ஆச்சரியம் அளிக்கவும் முயல்கிறது. இந்த முறையில் ஒன்றைப் பெருக்கி மற்றொன்றை முழுக்க துண்டித்து விட முடியும். இதுவே ப்ரெச்ட் கூறிய வேற்றுமைப்படுத்தல் எனலாம். காட்சிக்குப் பொருத்தமான இசைக்கோர்வைகளை இணைப்பதோடு மற்றும்  உள்புற, வெளிப்புற காட்சிகளுக்கு புரியும் படி ஒத்திசைவாக அமைப்பதை நான் இங்கு குறிப்பிடுகிறேன். இது காட்சிகள் பொருந்துதல்கள் என்பதைத் தாண்டி அல்லது மறுத்து இயல்பாக படத்தின் உருவாக்கத்தில் உள்ள செயற்கையான தன்மையை முன்வைப்பதாகும். பார்வையாளர்களுக்கு நேரடியாக பலன்களை வழங்குகிறது. திரையரங்கில் பயணிக்கும் வீரர்கள் படத்தில் உண்மையை சித்தரித்ததற்காக கேட்ட மன்னிப்பும் கூட இங்கு தேவையில்லை.

படத்தினை வெவ்வேறு நிலைகளில் ஒன்றிணைப்பது எது?

       எந்த அடையாளப்படுத்தல்களும் இல்லாமல் காட்சிகளை இணைப்பது மிகவும் வன்முறையான ஒரு செயல்பாடுதான். வேட்டைக்காரர்கள் படம் பயணிக்கும் வீரர்கள் படத்தினைக் காட்டி பொருளியல்வடிவமான படம் என்று கூறலாம். அதற்கு அதன் இயக்கமே சாட்சியாக உள்ளது. படத்தின் ஆக்கிரமிக்கும் தன்மையிலிருந்து தனித்த கவனத்தை பார்வையாளர்களுக்கு உருவாக்கி, அவர்கள் கொள்ளும் திருப்தி என்ற நிலையிலிருந்து குலுக்கி அதிர்ச்சி தர விரும்புகிறேன்.

இன்னொரு விஷயம், பயணிக்கும் வீரர்கள் படத்தில் பார்க்கும் வெறுமையான திரை என்பது கதாபாத்திரத்தின் நடிப்பினை வெளிப்படுத்த காத்திருக்கிறது என்று இதனைக்கூறலாமா?

       குறிப்பிட்ட கோணத்தில் நீங்கள் கூறுவது சரியென்றே கொள்ளமுடியும். ஆனால் இசையினை ஒரு மாதிரியாக, வெறுமையான கணங்களை இசை நிரப்பத் தொடங்கும் முன் கணம், இசை நிறைவுற்ற பின் கணம் என்றும் கூட தெரியும். கடைசி இசைக்குறிப்பில் நிறையும் மௌனம் அக்காட்சியின் முழுத்தன்மையையும் பார்வையாளர்கள் உள்வாங்க வாய்ப்பளிக்கிறது. பொதுவாக காட்சியின் அசைவு இயக்கம் ஒன்று அல்லது ஒலி நிறைவு பெற்றவுடன் காட்சி வெட்டப்படும். வெறுமையான ஏதுமில்லாத திரையில் பார்வையாளர்கள் பார்க்கவோ கேட்கவோ எதுவுமே அங்கு இருக்காது.

இதுபோன்ற வெறுமையான இடைநிற்றல்கள் நவீன ஜாஸ் இசையின் வகைகளுள் கூட உண்டு. மர்மம் என்பதை காட்டுகிறது என்பது தவிர விளையாட்டின் விதிகளை அடிக்கோடிட்டு காட்டவும் உதவுகிறது.

உண்மைதான்.

அண்மையில் 36 நாட்களில் படத்தினைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் இப்படத்தின் அணுகுமுறையைக் கண்டேன்.

       என்னுடைய சில படங்கள் வெம்மையானவையாகவும், சில குளிர்ந்த தன்மை கொண்டதாகவும் உள்ளன. மறுகட்டமைப்பு, பயணிக்கும் வீரர்கள் என இவை வெம்மையானவை. 36 நாட்களில், வேட்டைக்காரர்கள் என இரு படங்களும் குளிர்ந்த தன்மை கொண்டவை என்று கூறலாம்.

தங்களின் திரைக்கதை தொடர்பாக இறுதியாக இரண்டு கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். வேட்டைக்காரர்கள் படத்தில் கடந்த கால வரலாறு குறித்த தகவல்களில் ஒரு வித போதாமை இருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது.

       பயணிக்கும் வீரர்கள் படத்தில் கூறப்பட்டிருந்த வரலாறு குறித்த நிகழ்ச்சிகள் மக்கள் பெரும்பாலானோர் அறிந்தவைதான். இந்தப்படத்தில் வெவ்வேறு கால கட்டத்தில் கிரேக்க உள்நாட்டில் நிலவிய அரசியல்தான் படம் என்பதை கிரேக்க நாட்டினர் அல்லாதவர்கள் அறிந்துகொள்வது மிகவும் கடினமான ஒன்று. எப்படியிருந்தாலும் குறிப்பிட்ட நாட்கள் அதில் நிகழ்ந்த சம்பவங்கள்  குறித்து நான் அதிக கவனம் கொள்ளவில்லை என்பது உண்மைதான்.

       படம் வரலாற்றுரீதியில் சில விஷயங்களைப் பேசினாலும் நான் அதனுள் ஆழமாக செல்லாததன் காரணம் இது வரலாற்றுப் படமோ அல்லது வரலாறு குறித்து பேசுகின்ற படமோ அல்ல. இந்தவகையில் நாட்கள் பொருத்தமில்லாமல் இதில் போய்விட்டது. உணர்வுகளின் பரிமாற்றங்கள், இரவு நேர பயங்கள், மாறும் சைகைகள் கொண்ட குருட்டுத்தனமான நுட்பங்கள் தவிர அந்த விடுதியில் ஏதும் நடக்கவில்லை. சரியான வரலாற்று ஆதாரங்கள் என்பனவற்றுக்கு மிகக் குறைந்த முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். விடுதி அறையில் உள்ள மனிதன் குறிப்பிட்ட தலைமுறையின், வர்க்கத்தின் வெளிப்பாடுகளின் மனசாட்சி போன்று வெளிப்படுத்தும் விஷயங்களை செயல்பாடுகளை குறித்து ஆர்வம் கொண்டவனாக மட்டுமே இருந்தேன்.