வேட்டைக்காரர்கள்: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

லயம் மற்றும் மௌனம் அலறலை அடிக்கோடிட்டு காட்ட உதவுகிறது
வேட்டைக்காரர்கள்
ப்ரான்சிஸ்கோ கேசட்டி – 1977
ஆங்கில மூலம் -  டான் பைனாரு
தமிழில் - லாய்ட்டர் லூன்












இந்தப்படத்திற்கு எப்படி என்ன முறையில் உங்களை தயார்படுத்திக்கொண்டீர்கள்?

       படத்தினைத் தொடங்கும்போது திரைக்கதையின் வடிவம் என்பது வரைபடம் என்பதைத்தாண்டி குறிப்புகள் போல உருவாகி இருந்தது. பிறகு படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேடி கண்டறிய முயலும்போது கிரீஸ் முழுக்க அலைய வேண்டியிருந்தது. பயணிக்கும் வீரர்கள் படத்தோடு இதை ஒப்பிட்டால் அது எவ்வளவோ எளிதானது என்றுதான் கூறுவேன். வேட்டைக்காரர்கள் கதையின் அமைப்பே பல்வேறு இடங்களுக்கு மாறிச்செல்வதுதான் எனும்போது ஒரு இடத்திற்கு சென்று விடுதியில் தங்குவது என்பது பெரும் சவாலாக இருந்தது.

       இடம் கிடைத்துவிட்டால் நான் அங்கே அமர்ந்து படப்பிடிப்பு குறிப்புகளை இன்னும் செம்மையாக எழுதியிருக்கக்கூடும். காட்சியை படப்பிடிப்பில்  மேம்படுத்துவதற்கான இடத்தையும் காலியாக விட்டுவிட்டு பிறவற்றை எழுதுவேன். படப்பிடிப்பில் காட்சிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு இந்தப்படத்தில் கிடைக்கவில்லை. அதாவது சரியான தங்குவதற்கான இடவசதிகள் கிடைக்கவில்லை. அரங்கில் நாங்கள் வேலை செய்யத்தொடங்கிவிட்டால் ஒவ்வொரு காட்சியையும் மூன்று நாட்களுக்கு ஒத்திகை பார்த்த பின்னரே அவற்றை காட்சிப்படுத்த தொடங்குவோம். தொடர்ச்சியான காட்சிகளுக்கு ஏழிலிலிருந்து 11 காட்சிகள் அவற்றினை அமைக்கத் தேவைப்படும். காட்சியின் தவறுகளை சீர் செய்வதற்கு அறை கிடைக்காததால் சிறிய தவறு என்றாலும் கூட காட்சியினை முழுவதையும் திரும்ப படமாக்கவேண்டிய சூழல் இருந்தது. இதனால் ஏகப்பட்ட மணிநேரங்கள் இதற்காக செலவிட நேரந்தது. ஒத்திகை பார்ப்பவை ஒழுங்குமுறையாய் நடிகர்கள், கேமரா ஒலி என்று வரிசையாய் அமைந்திருக்கும்.

கேமராவின் கோணங்களைத் திட்டமிடுவது முதலிலேயே எழுதிவைத்த குறிப்புகளின் அடிப்படையில்தானா? அல்லது அக்காட்சியினை மேம்படுத்தும் தருணத்தில் மாற்றிக்கொள்வீர்களா?

       கேமரா நகர்வுகளை பெரும்பாலும் திரைக்கதையில் குறிப்பிட்டிருக்கும் குறிப்புகளின் படியே அமைத்துக்கொள்வேன். ஒருவேளை கேமரா கோணங்களுக்கும் நடிகர்களுக்கும் இடையே அதிக முரண்பாடுகள் இருந்தால் தேவையான மாற்றங்களை நான் செய்யவேண்டி இருக்கும். முன்பு ஒத்திகைகளில் நடிகர்கள் தாம் விரும்புகிற இடங்களில் நின்று நடிப்பார்கள். நான் அவர்களது இடம் குறித்து சரியாக குறிப்பிட்டு நடிக்கக் கூறுவேன்.  முன்பு நிலப்பரப்பு சார்ந்த தன்மை வருவதை முடிந்தவரைக்கும் குறைப்பதே எனது நோக்கமாக இருந்தது. திரைப்படம் உருவாக்குவதின் செயற்கையான பகுதி அதனை இயக்குபவருக்கு கடுமையான மன உளைச்சலை தருகிற ஒன்று. படம் இயல்பாக இருக்கிறது என்பதற்கு எதிரான கருத்துக்களை நான் கேட்பது மிக கடுமையான தருணங்கள் மிகவும் கடினமான தருணங்கள் என்று கூறுவேன்.  

       அமெரிக்க படங்களில் அதன் மையத்திற்கு பொருந்தாத பாடல்கள் இடம்பெற்று சூழலையே ஒட்டுமொத்தமாக குலைத்து செயற்கையாக்கும். அவற்றை உருவாக்குவதே செயற்கையான முறையில்தான் என்பதால் அவர்களுக்கு அது கவனிக்கத்தக்க ஒரு விஷயமல்ல. நடிகர்களோடு பணிபுரிவதிலும் இந்த முறையில் வேறுபாடு உண்டு. கதாபாத்திரத்திற்கும் நடிகர்களுக்கும் அவற்றின் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதில் இருக்கும் வேறுபாடு ப்ரெச்டியன் மரபைப்போல அவர்களது பணியை எளிதாக்குவது இல்லை. கதாபாத்திரத்தின் தோலுக்கு அடியில் நடிகர்கள் வெளித்தெரியாது மறைந்து போய் விடவேண்டும். ஜப்பான் திரையரங்கில் திரையிடப்படும் படங்கள் போல மௌனத்தின் லயத்தின் மூலம் அலறலை அடிக்கோடிட்டு காட்ட முடிவது போல மினிமலிச தன்மைக்கு நாம் பயணிக்க வேண்டும்.

நடிகர்களின் நடிப்பு என்பது துன்பத்தை அவலத்தை தூய்மைப்படுத்துவது என்கிற அர்த்தத்தை குறிப்பிடுகிறீர்களா?

       ஆமாம். பயணிக்கும் வீரர்கள் படத்தில் நான் குறிப்பிட்டிருப்பேன். தனிநாடகக் காட்சி போல உரையாடல் நிகழும் காட்சியில் கேமராவின் முன் வெளிப்படுத்தப்படும் வெளியேற்றம் செய்யப்படும் உணர்ச்சி மாற்றங்கள் உண்மையான நடிப்பின் தன்மையையே குலைத்து விட்டிருக்கும். வேட்டைக்காரர்கள் படத்தில் ஒரு படி முன்னேறி, சிறிது குளிர்ந்த தன்மையோடு பார்வையாளர்கள் தம்மை எந்த இடத்திலும் அடையாளப் படுத்திவிடக்கூடாது என்று விரும்பினேன். அந்த கதாபாத்திரங்கள் வேறுபட்ட தனித்த ஆளுமைத் திறனை கொண்டுள்ளவர்களாக இருக்கக்கூடாது. அவர்கள் ஒரு முகமூடி போல இருக்கவேண்டும். ஏறத்தாழ செவ்வியல் நாடகங்களில் வருவது போல அசைவற்ற முகமூடிகளை அணிந்து குரல் மூலம் மட்டுமே தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். அதுபோலவே என்னுடைய கதாபாத்திரங்கள் இருக்க விரும்பினேன். இதோடு குறிப்பிட்ட வகையிலான இசைத்துணுக்குகளை திரைக்கதையில் இணைக்க விரும்பினேன். அதில் வரும் இசை நுட்பங்கள் விபத்தல்ல. அவை குறிப்பிட்ட ஒத்திசைவுடன் லயப்போக்குடன் ஒன்றையொன்று நெருங்கிய தொடர்புடையன. இசையில் வரும் இசைத்துண்டுகளின் சிறு துடிப்புகளைக் கூட எண்ண முடியும்.

       நடிகர்கள் ஒருவரிக்கு பின்னான வரிகளை அமைதியாக எண்ணிக்கொண்டு இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? உதாரணத்திற்கு, இதனைக் கொள்ளலாம். இசைக்குறிப்பினுடைய தொடக்கம் வெகு இயல்பானதாகவும், முறைப்படியேயான லயத்தினையும் கொண்டதாகவும் இருக்கும். இத்திரைப்படமானது இசைக்கான அமைப்பை தன்னுள்ளேயே கொண்டிருக்கிறது.

இதன் அர்த்தம் படம் உண்மையிலேயே குளிர்ந்த தன்மையைக் கொண்டது அல்ல. அது வெம்மையான தன்மை கொண்டு உள்ளது என்றே எனக்குப் படுகிறது.

       பார்வையாளர்கள் படத்தினைப் பார்த்து அதனை எப்படி விரிவாக்கி புரிந்துகொள்கிறார்களோ அப்படித்தான் அவர்களது கருத்துகள் அமைகிறது. படமானது பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட அளவிலான தகவல்களை அளிக்கிறது, ஆனால் இதோடு அவர்களம் தங்களது உள்ளீட்டினை செலுத்தும்போது அவர்கள் படத்தினை அனுபவித்து பார்க்க முடியும். படத்தின் அழகு  குறித்து மட்டும் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி இல்லாமல், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற அளவு உணர்வுகளையும் அதேயளவு ஏற்படுத்தும்.  குளிர்ந்த தன்மை என்பது படத்தின் முதல்பகுதியிலும், இரண்டாவது பகுதியில் மிகவும் வெம்மையான தன்மையை உணரமுடியும். எளிய நம்பிக்கைகளை அதில் உருவாகி வருகின்ற அத்தனையையும் நிராகரித்து ஒதுக்கும் ஒரு சோகமான படம் அல்லது மகிழ்ச்சியற்ற ஒரு படம் என்று இதனைக் குறிப்பிடலாம். பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் காலத்திற்கேற்ப மாறி வந்த போதிலும் நம்மைச்சுற்றியுள்ள சூழல் மாறிவிடவில்லை என்பது குறித்த து இந்தப் படம். ஒரு பெண் கற்பனையான மன்னர் ஒருவரை காதல் செய்வதாக வரும் காட்சி தந்தை – மன்னர், கடவுள்- மன்னர் என நீள்வது பொறுத்துக்கொள்ள முடியாததாகவும் அதேசமயம் ஆர்வமூட்டுவதாகவும் ஒரே சமயத்தில் இரண்டு விதமாகவும் இருக்கும்.

       படத்தில் பார்வையாளர்கள் ஆர்வம் கொண்டு தன்னுடைய உள்ளீட்டையும் இணைத்து பார்ப்பதாக இருப்பது இரண்டாவது பகுதி என்று கூறலாம். இப்படம் ஒருமுறை பார்த்தாலே அதன் அனைத்து ரகசியங்களின் முடிச்சுகளும் நீங்கள் அறிந்துவிட முடியாது. படம் முடிந்தவுடன் உங்கள் மனதில் நீங்கள் உருவாக்கும் உரையாடல்களின் வழியே படத்தின் செய்தி தெளிவாகும்.


பிரபலமான இடுகைகள்