அதிகாரத்தின் முகமூடி விலக்கம்: 36 நாட்களில் திரைப்படம்

அதிகாரத்தின் முகமூடி விலக்கம்: 36 நாட்களில் திரைப்படம்
உல்ரிச் கிரிகோர் -1973






இப்படத்திற்கான வரலாற்றுப் பின்புலம் என்ன?

       இது கூட அல்லது குறைச்சலாக சில உண்மையான விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. துப்பாக்கியை பயன்படுத்தி குற்றவாளி ஒருவன் அவனைச் சிறையில் சந்திக்கவரும் வலதுசாரி உறுப்பினர் மூலம் பிணை பெறுகிறான். பிறகு இருவருக்குமான நீண்ட கால உறவு தெரிய வந்தாலும் அவர்களது உறவின் தன்மை தெளிவானதாக இல்லை. நாடாளுமன்ற உறுப்பினருக்கும், குற்றவாளிக்கும்  ஏதேனும் ஒப்பந்தம் இருக்கிறதா? யாருக்கும் தெரியாது. குற்றவாளி தன் நண்பனுக்கு எழுதும் கடிதத்தில் ‘‘நான் அவனைக் கொல்லப்போகிறேன், பிறகு என்னையும் நானே அழித்துக்கொள்வேன். இனி எப்போதும் அவர்களை என்னை கைது செய்வதற்கான எந்தக்கோப்புகளும் கிடைத்து அவை நிரூபிக்கப்படப் போவதில்லை’’ என்று குறிப்பிடுகிறான்.

       ஆனால் பிணை கொடுத்தவர் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு மனிதர் என்பதால் இந்த வழக்கு ஒரு சிக்கலான கட்டத்தை எட்டுகிறது. பிணை வழங்கியவர் வலதுசாரி குழுக்களில் ஒருவர் என்பதால் அவ்வட்டாரங்களில் வேதனையான வருத்தங்கள் எழுகின்றன. அரசு இவ்விவகாரத்தில் தலையிட முனைகிறது. நாட்டினை அப்போது மெட்டாக்ஸ்சஸ் ஆண்டு வந்தார் என்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும். வலதுசாரிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி செய்து வந்ததோடு மத்தியிலும் தன் விருப்பத்திற்கிணங்க சக்திகளோடு தொடர்புகொண்டிருந்தார். மெட்டாக்சஸ் நாடாளுமன்றத்தில் ஏழு இடங்களையும், கம்யூனிஸ்ட் கட்சி பதினைந்து இடங்களையும் பெற்றிருந்தார்கள். கட்சிகள் ஒன்றுபோலவே இடங்களை வென்றிருந்ததால் ஆட்சி செய்ய இயலவில்லை. இரு முன்னணி கட்சிகளும் கம்யூனிஸ்டுகளை இந்த விளையாட்டிலிருந்து விலக்கி வைத்து மெட்டாக்சஸ் ஆட்சி புரிய சம்மதித்து இருந்தனர். மெட்டாக்சஸ் முசோலினி மீது பெரும் மரியாதையும் பக்தியும் கொண்டவர். மேலும் கிரீஸ் வந்து இவரை பார்த்துச் செல்லும் பயண ஏற்பாடுகளை செய்யுமளவு கோயபல்ஸ் உடன் நிழல்மறைவான பல ஒப்பந்தங்களை செய்துகொண்டிருந்தவரும் ஆவார்.

தொழிற்சங்கத் தலைவர் கொலை செய்யப்படுவது இந்த வழக்கில் ஏதேனும் மாறுதல்களை உருவாக்குகிறதா?

       இல்லை. கதையில் அதனை அறிமுகப்படுத்துகிறேன். அதாவது சில நிகழ்வுகளை ஒன்றன்பின் ஒன்றாக வரிசைபடுத்தி ஒன்றாக இணைக்கிறேன். சிறைச்சாலை என்பது உண்மையான ஒன்று, சங்கத்தலைவர் கொலை செய்யப்படுவது சிறிது பின்னால் நடைபெறுகிறது. அப்போதைய அரசியல் சூழலைக் குறிக்கவே அந்த இரு நிகழ்வுகளையும் ஒன்றாக இணைத்தேன். கதை நிகழ்வது குறிப்பிட்ட சில நாட்களில்தான் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு சில ஆனால் குறிப்பிடத்தக்க நாட்கள் ஒரு முழு காலகட்டத்தையே வெளிப்படுத்துகின்றனவா?

       அப்படியேதான். அதில் மிகத்தெளிவாக இருந்தேன். நான் கிரீஸ் வரலாற்றினை கவனிக்கத் தொடங்கும்போது தொழிலாளர்களின் கட்சிகள் மெல்ல ஊக்கமாக செயல்படத் தொடங்கியிருந்தன.  வேலை நிறுத்தங்கள் மற்றும் பொதுகூட்ட விளக்க மேடைகள் என தினசரி நடைபெற்று வந்தன. அந்நாளைய அரசியல் சூழலை இன்றைய சம கால அரசியல் சூழலோடு ஒப்பிட்டு சுருக்கமாக கூறுவது என்பது மிகவும் வேறுபட்டதாக இருக்கும்.

       திரும்ப மெட்டாக்சஸ் விஷயத்திற்கு வருவோம். அவர் உண்மையிலேயே பாசிசவாதியாகவும், முந்தைய சர்வாதிகாரிகளின் வழியைப் பின்பற்றுபவராகவும் இருந்தபோதும் இரு அரசியல் கட்சிகளும் அவரை ஆட்சிபீடத்தில் ஏற்றி அமரவைத்தன. அவர் தன் நிலைப்பாடுகளை பரிசீலித்து மாற்றிக்கொள்ளவும், தன் செயல்பாட்டினால் எந்த மனசாட்சியின் உறுத்தல்களையும் கொள்ளவில்லை. அப்படி ஏதேனும் நிகழ்ந்திருந்தால் கிரீஸ் மற்றொரு எதேச்சதிகார நாடாக எப்போதும் மாறியிருந்திருக்காது. மன்னர்(பிரிட்டிஷ் மற்றும் மெட்டாக்சஸ் உடன் இணைந்து ) சமநிலையை எந்த விலை கொடுத்தேனும் பெற நினைத்தார். சர்வாதிகாரிக்கு தன் கதவுகளை விரியத்திறந்து வைத்தார் என்று இதற்கு எளிமையாக அர்த்தம் கொள்ளலாம்.

ஆனால் உண்மையில் உங்களது படத்தில் ஆங்கிலேயர் ஒருவர் இருக்கிறாரே?

       ஆம். அவர் சர்வாதிகாரிகள் குறித்தும் தலையீடுகள் குறித்தும் பேசுகிறார். ‘‘நான் பரிசீலித்து வந்ததில் பெரிய நாடுகளின் தலையீட்டிற்கு எதிரானவன் நான்’’ என்று கூறுகிறார். இது எழுத்தளவில் சரி. சில வளரும் நாடுகளில் .. மேலும் சில குறிப்பிட்ட சூழல்களில் ஒப்புக்கொள்கிறேன்... என்று அவர்  தன் வாக்கியத்தை முடிக்கவில்லை. அவர் தலையீட்டிற்கு ஆதரவானவர் என்பது மிகத்தெளிவாக அவரது குரல் தொனியிலிருந்து நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

கிரீக் பார்வையாளர்கள் உங்களின் படத்திலுள்ள கதாபாத்திரங்களை அடையாளம் கண்டு கொள்கிறார்களா? எ.கா: மெட்டாக்சஸைக் கண்டறிகிறார்களா?

       மெட்டாக்சஸ் குறித்து அறிவதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் நாடாளுமன்ற உறுப்பினர். எனது படத்தில் வரும் கதாபாத்திரம் உண்மையான மனிதருக்கு மிக நெருங்கிய தொடர்பினை உடையதுதான். அவரை நிச்சயமில்லாத ஒருபால் உணர்வு கொண்டவராக படத்தில் சித்தரித்திருப்பேன். அவர் அழகான, குறிப்பான உடல்மொழி கொண்டவராக சுருக்கமான எளிதில் அடையாளம் கண்டுகொள்ளக்கூடியவராகவே உள்ளார். உண்மையான மனிதர் உயிரோடு இருக்கும் தருணத்தில் இப்படம் அவரை கோபம் கொள்ளச்செய்யும் என்பதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை.

இந்த விஷயங்களோடு பார்வையாளர்கள் சில நாட்கள் குறித்த விஷயங்களை நினைத்துக்கொள்கிறார்கள் என்று கொள்ளலாமா?

உண்மைதான். எங்களது தற்போதைய அரசியல் நிலைமை, மன்னர் மெட்டாக்சஸிற்கு ஆதரவாக தலையிட்டபோதே இரு முன்னணி கட்சிகளும் முன்பே சரியான ஒப்பந்தத்தை நாம் உருவாக்கியிருக்கவேண்டும் என்று நினைத்த ஆனால் செய்யமுடியாத சூழல் தற்போது இல்லை. அந்த அரசியல் சூழ்நிலை நாட்டின் அதிகாரத்தை குறிப்பிட்ட ஒரு எக்ஸ் எடுத்துக்கொள்ள வைத்தது என்ற நிலையில் மெட்டாக்சஸை அணுகலாம்.